வரவேற்பிதழ்
பிறந்தநாள், நூல்வெளியிடல், சான்றோர் போற்றல் விழா.
நாள்; 14.10.2024/
இடம் ; "வி பைவ் " ஹோட்டல் , மகாராணி அரங்கம், காட்டாங்கொளத்தூர்
பெறுபவர்; திரு. கே.சரவணக்குமார் குமாரவாசகம். மலேசியா
துணைத்தூதர் ,தென்னிந்தியா, சென்னை.
அளிப்பவர் ;முனைவர். சுவாமி. சுப்பிரமணியன், மற்றும்குடும்பத்தினர்
---------------------------------------------------------------------------------------------------------------------------
திருமுருகன் பெருவருள் குருவருள் துணைநிற்க,
அருந்தமிழ் விருந்தாகிச் சிறந்தவரே! வருகவருக!
செல்கவே எண்திசை சேர்க்கவே தொல்புகழ்;
சொல்மகிழ் பாரதியின் பைங்கனவே ! வருகவருக !
மானா மாமதுரைத் தேனார் பரம்பரையே!
வானார் தொண்டர்மணி வாரிசே ! வருக வருக!
இராஜேஸ் வரிகுமார வாசக மைந்தரே !
இராஜ மலேசிய இணையிலாத் தூதுவரே !
பெர்க்கின் பதுகஜா பெற்றெடுத்த புதல்வரே!
சரவணக் குமாரெனும் குமார வாசகரே!
சரவணத் துதித்தோன் சேவடி துதிப்பவரே!
விளக்காய் விசாலாட்சி விரிவாய் , தீபகுமார்
நலமகள் கீர்த்தி கமலாவைப் பெற்றவரே!
கலையார்வம், கருணை , கல்வி மேன்மை,
நிலையன்பு நீங்காத நல்லுளம் படைத்தவரே!
இந்தியத் தமிழ்நாட்டின் பண்பாடு கொண்டவரே!
சொந்தம்போல் வந்துநின்று வாழ்த்திய சான்றோரே !
எந்தம் விழாவின் சந்தக் கவிஞரே!
வருகவே! வருகவே! வரவேற்று மகிழ்கிறோம்.
14.102024. என்றும் அன்புடன்
சென்னை.
சுவாமி.சுப்பிரமணியன்.
மற்றும் குடும்பத்தினர்
'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக