உ
பிறந்தநாள். நூல்வெளியிடல், சான்றோர் போற்றுதல்
விழா. அழைப்பிதழ் .
நலமிகு சான்றீர் !
வணக்கம்.எங்களது தந்தை. முனைவர்.சுவாமி
சுப்பிரமணியம் அவர்களின் 83 ஆம் பிறந்தநாள் விழா ,
நூல்வெளியிடல், சான்றோர் போற்றுதல் விழாவாக 14.10.2024 திங்கள்கிழமை
காலை 10.மணி அளவில் , சென்னை,காட்டாங்கொளத்தூர் "வி பைவ் "
ஹோட்டல் மஹாராணி அரங்கில் நடைபெற உள்ளது. அதுபோழ்து
தாங்கள் குடும்பத்தாருடன் வந்திருந்து விழாவைச் சிறப்புற நடத்தித்
தர, அன்போடு வேண்டிக்கொள்கிறோம். நன்றி .
சென்னை தங்கள்
27.9.24 தேவிவித்யா சுவாமிநாதன்
சுபலதா சரத்பாபு
நிகழ்வுகள்
இறைவணக்கம் ; திரு. குருஜி .நாகநாத ஓதுவார்.
வரவேற்புரை ; திருமதி. எஸ்.தேவிவித்யா
வரவேற்பிதழ் ; திரு.சுவாமி .சுப்பிரமணியன்.
தலைமையுரை; திருமிகு.செவாலியர்.டாக்டர். வி.ஜி.சந்தோசம்
சான்றோர் போற்றல் ;
(தலைஞாயிறு.சிவஸ்ரீ.என்.வெங்கடேச குருக்கள் நினைவாக)
டாக்டர்.திரு. டி .மாதுபுரீஸ்வர சிவாசார்யார் . திருமாகாளம்
பொன்னாடை,பதக்கம், பொற்கிழி வழங்கல்; திரு.தலைவர் அவர்கள்.
ஏற்புரை ;திரு .சிவாசார்யார்
(திருக்கடையூர்.தேவார இசைமணி.எஸ்.நடராஜ குருக்கள் நினைவாக)
திருமுறை இசைமணி. மயிலை.குருஜி.நாகநாத தேசிகர் , விருகம்பாக்கம்
பொன்னாடை,பதக்கம், பொற்கிழி வழங்கல்; திரு. தலைவர் அவர்கள்.
ஏற்புரை; திரு.ஓதுவாமூர்த்திகள்
நூல்வெளியிடல் ; திரு. சரவணகுமார் குமாரவாசகம்.
வாழ்த்துரை ; மலேசியத் துணைத்தூதர் , தென்னிந்தியா.சென்னை..
சிறப்புவாழ்த்துரை ; 1. முனைவர்.திரு.கோ.விஜயராகவன்,
மேனாள் இயக்குனர்.செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
அகரமுதலித்திட்ட இயக்கம்.சென்னை
2. முனைவர். தமிழ்ச்செம்மல் .திரு.பி சத்தியமூர்த்தி
தலைவர்.தமிழியல் துறை. மதுரை காமராசர்
பல்கலைக்கழகம்.மதுரை
நூல் ஆய்வுரை ; திரு. ஆர் எஸ் இரத்தினசாமி, Chief Financial Officer, CynLr, Bangalore
திரு. கணேசன் சுந்தர், Retired Director, Dell EMC, Bangalore
நன்றியுரை ; திரு. ஜி.சுவாமிநாதன்
ஆறிரு தடந்தோள் வாழ்க
----------------------------------------------------------------------------------------------------------------------------- வரவேற்பிதழ்
விழா ; பிறந்தநாள்,நூல்வெளியிடல், சான்றோர் போற்றல் விழா.
நாள் ; 14.10.2024 திங்கள்கிழமை
இடம்; வி பைவ் ஹோட்டல், காட்டாங்கொளத்தூர் ,சென்னை
பெறுபவர்; செவாலியர்.டாக்டர். திரு.வி.ஜி. சந்தோசம் அவர்கள்.
விழாத்தலைவர் .
அளிப்பவர்; சுவாமி.சுப்பிரமணியன், மற்றும் குடும்பத்தினர்
வாழ்கதமிழ் என்றுபோற்றும் வளம்மிக்க உள்ளங்களில்
வாழ்ந்துவரும் வணிகத்துறைச் செந்தமிழே! வருகவருக!
அழகப்ப புரத்துதித்து அகிலமுமே ஒளிபரப்பும்
விழுத்தொழில் விஜிபியின் விரிசுடரே! வருகவருக!
வீரபத்திர ஞானமாம் திரவ்யத்தின் வாரிசாகி,
சீரன்னை சந்தனம்மாள் சீர்ச்செல்வமே! வருகவருக!
சிறுவிதையே பெரும்போக ஆலமரம் என்றுரைப்பர் ;
விறுவிறுப்புப் பேருழைப்பு வித்தகமே! வருகவருக!
நொந்துற்ற வெந்துயரை விரட்டிடவே வேண்டுவோர்க்கு
பந்தமாகிப் பொருளுதவிச் சொந்தமே ! வருகவருக!
கற்றதமிழ் உற்றபுகழ் பெற்றிடவே கொற்றவன்போல்
நற்றமிழை நாடெல்லாம் பரப்புபவரே! வருகவருக!
திருக்குறளைப் படைத்திட்ட திருவள்ளுவர் புகழ் பாடத்
பெரும்செல்வப் பலநாட்டில் உறுசிலைகள் உயர்ந்தெடுத்து,
அருந்தமிழின் விருந்துண்ண மருந்தாகும் சொற்பொழிவு
மழையாகப் பொழிந்தே மலர்விப்பவ! வருகவருக!
எளியதோற்றம் இயைகருணை இரக்கவுள்ளம் கொண்டவரே!
தளிர்க்கவிதைத் தமிழ்ப்புலவ! வரவேற்கிறோம் வருகவருக!
சென்னை அன்புடன்
14.10.24 சுவாமி.சுப்பிரமணியன்,
மற்றும்,குடும்பத்தினர் ,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக