சூரன் நிலை
எடுத்தனன் சிலை ஏனைப்படை
கொடுத்தருளிய தெய்வப்படை
அடுத்த பல தூக்கினான்
மடுத்தவாயெலாம் மாப்பகடன். 551
பொருள்
எடுத்தான் சூரன் சிலையை; எனைப்படைகளையும் தெய்வங்கள் கொடுத்து
அருளிய படைகளையும் செலுத்துவதற்கு முயற்சித்தான்.பலப்பல
தூக்கினான்;செல்லும் வழியெல்லாம் வெற்றி பெறும் சூரன் இங்ஙனம்
செய்தான்.
அதிசூரன் போராற்றல்
அதி சூரன் அசுரேந்திரன்
விதி கூவப் பதி போற்றி
மதி சூர வதிபதிவழி
நீதி பலசேர் கடல்படையுடன். 552
பொருள்
...அதிசூரன் அசுரேந்திரன் இருவரையும் விதி அழைப்பதால் பதியாகிய
சூரனைப்போற்றி அறிவுமிக்க சூரன்வழியிலே நீதியை நிலை நாட்டப்பெரும்
படையுடன்
உடனேகினர்
இருள் கண்ணவர் மருள் விண்ணன்
உருள் நன்னலம் தெருள் மண்முறை
அருள் விடுமனம் பொருள் விடுகவி
உருவமென உடனேகினர். 553
பொருள்
அறியாமையே கண்ணாகக்கொண்டும், மருட்சியுடைய விண்ணவர்
போலவும், உருள்கின்ற நிலை யடையவராயும்,உலகமுறையை
மீறுபவராயும்,கருணையுள்ள மனமுடையவராயும் பொருளுக்கே பாடும்
கவிபோலவும் உருவம்பெற்ற கூட்டம் உடனே கிளர்ந்தெழுந்தனர் .
சூரன் வருகை
அஞ்சுவேந்தன் அரக்கன் படை
வஞ்சுசூரன் வடிவில் வரும்
தஞ்சமெனத் தாள் போற்றிடக்
குஞ்சரக்கழல் குமரன் தான். ..... 554.
பொருள்
களத்தில் உள்ளவர்கள் கண்டு,அஞ்சுகின்ற வேந்தன்,அரக்கன்,படையோடு
வரும்,வஞ்ச எண்ணம் கொண்ட சூரன் , எதிர்த்தாற்போல் தன்னை
ஆட்கொள்ள வரும் முருகனின் தாளினை மனதால் போற்றினான். குமரனோ
பாகுவைப்பார்த்தான்.
முருகன் தேரேறல்
பாகுதனைப் பார்த்தனனே
பார்வையால் பரிகொள்தேர
வாகையுடன் வந்துநிற்கத்
தோகையன் தொட்டனனே. 555.
பொருள்
மாமுருகன் பாகுவை நோக்கினான்; பாகுவோ, பார்வையின் பொருளை
உணர்ந்துகொண்டு, வெற்றி பற்பலத் தேடித்தரும் முத்துமணித்தேரை
முன் கொணர்ந்து நிறுத்தினான். அத்தேரில் ஏறினான் மாமுருகன்.
கடல்படை
தேவர் பலர் ; பூதர் பலர்
ஆவல் மால் அயன் எண்மர்
தூவல் மழை மேவு கடல்
தாவலை போல் தாவினரே. 556
பொருள்
பூதப்படை கடல்போல் காட்சியளித்தது.தேவர்களின் கூட்டம்; பூதங்களின்
கூட்டம்; ஆவலோடு முதலில் நின்ற திருமால், பிரமன், எட்டுத்திசையின்
காவலர்கள், இவர்கள் அனைவரும் ஒருங்குநின்றனர்; காற்றில் மோதும்
கடலலை போல் பகைவர் மீது பாயத் தயார் ஆயினர்.
போர் துவங்கிற்று
விளைந்தது சமர் விண்ட தண்டம்
வளைந்தன வில் வடித்தன சரம்
கிளர்ந்தன படை மலர்ந்தன முகம்
தளர்ந்தே அடர் தாக்கி மகிழ்! 557
பொருள்
போர் துவங்கியது. கதைகள் மோதிக்கொண்டன;வளைந்தது வில்;
சரங்கள் காற்றாய்ப்பறந்தன;எழுச்சியுடன் முன்னேறிற்று காலாட்படை'
வீரமரணம் அடைந்தவர்களின் முகம் மலர்ந்தபடிக் காட்சி அளித்தது.
காத்திருந்து தாக்கு; தாக்கியே மகிழ்வடை ; என்ற நிலையில் களம்
காட்சியளித்தது.
யானை ,குதிரைப்படைகள்
களி றாயிரம் பிளி றொலியுடன்
கரங்களிலே திறம் அகற்றுவர்
உளி விரல்நுனி உடனடக்கிடும்
வளி பரி முரண் வலியுடலரே. 558
பொருள்
மோதவரும் ஆயிரக்கணக்கான யானைகள் பிளிறிக்கொண்டு வரும்;
அவைகளைத் தமது வலிமைமிக்க கரங்கைளினாலே திமிரை அடக்கி,
வலிமை குறைத்து மறவர் வெற்றிகாண்பர். காற்றுபோல் பாய்ந்துவரும்
முரண்கொண்ட குதிரைகளின் வலிமையைத் தமது உளி போன்ற
விரல்நுனியால் தாக்கி,அழித்து மறவர்கள் வேற்று காண்பர்.
பூதப்படையின் வலிமை
மலைவீசி நிலைகுலையச்
சிலை யெய்து தலை யெடுத்துக்
கொலைதனை இயற்றியற்றிச்
சிலையரக்கரை அலைக்கழித்தனர். 559
பொருள்
பூதப்படையினர் அரக்கர்கள் மீது மலைகளை எடுத்து
வீசித்தாக்கினார். நிலைகுலைந்து ஓடினர் அவர்கள். அம்பெய்து
அரக்கர்களின் தலையைச்சீவி எடுத்தனர்; பகைவர்களை விடாது
விரட்டி விரட்டி வீழ்த்தினார்;இவ்வாறு அரக்கர் படையை அலைக்கழித்தன
பூதப்படை .
அதிசூரன்
பூதப்படை பெற்றவெற்றி
வேதனையால் வெய்துயர்த்த
சூதத்தலை அதிசூரன்
சேதப்படு பூதப்படை . 560.
பொருள்
பூதப்படை பெற்றுவரும் வெற்றியைப் பார்த்து வெறுப்பும்,வேதனையும்
பெற்ற அதிசூரன் தனது கவனத்தைப் பூதப்படையினர் மீது செலுத்தினான்.
தேவப்படையைச் சின்னாபின்னம் ஆக்கினான்.
அழி கள பலி
அழித்தயர்வோன் அதிவிரைவாய்ப்
பழிதனை நீக்கிடவே
செழுகள முனை செலுத்தினான் தேர்
அழிகள பலி ஆக்கினான் சூர். 561
பொருள்
பூதத்தேவப்படைகளை அழித்தவன், அவர்களை அயரவைத்தவன்,
அரக்கப்படை மீது வந்துள்ள பழியை நீக்குவதற்காகப் போர்முனைக்குச்
சென்றான்.அவனது தேர் அந்த இடத்தை அடைந்ததும் அங்கே அவ்விடத்தை
ஆயிரக்கணக்கில் பலி கொடுக்கும் அழிகளமாக அசுரேந்திரன் ஆக்கினான்.
உக்கிரன் போர்
உக்கிரனெனும் உயர்ந்த பல
சக்திகளைப் பெற்ற பூதன்
உக்கிரப்போர் வக்கிரனுடன்;
அக்கிரமம் அடி பணிந்தது. 562
பொருள்
அதிசூரனை உக்கிரன் என்னும் பூதப்படைத் தலைவன் எதிர்த்தான்.தெய்வ
சக்திகள் நிறைந்து விளங்கும் பூதன் அந்த தீயன் அசுரேந்திரனுடன் நீண்ட
நேரம் கடுமையாகப் போர் புரிந்தான். முடிவில் அசுரேந்திரன் அயர்ந்தான்.
கதைப்போர்
பலப்பல கணை விடவிட மறை
நலச் சில படை நலுங் எனக்குடி
பலச்சிவப்படை பதிஅருள் சிவம்
இலை இனி வழி எடு கதைப்போர். 563
பொருள்
இருவரும் ஆயிரக்கணக்கான கணைகளை எய்து அயர்ந்தனர்;
நலமிகு தெய்வப்படைகளை எய்திட அவைகளும் மறைந்தன;சிவப்படை
வரை சென்ற அவ்விருவர் முடிவு யார் பக்கமும் வராததால் முடிவாகக்
கதைப்போருக்கு ஆயத்தமாயினர்.
அதிசூரன் விழுந்தான்
அதி சூரன் அடித்த கதை;
அதைப்பற்றி அவனை அடி
விதி முடியவே, விழுந்தனன் சூர்
அதி வீரன். உக்கிரன் தான். 564
பொருள்
அதிசூரன் கதை கொண்டு உக்கிரனை த் தாக்கினான்; அதே கதையைப்
பற்றிய உக்கிரன் அரக்கனை அடித்தான்; விதியும் கூடிற்று. அதிசூரன் கீழே
விழுந்து மாண்டுபோயினன்.
அசுரேந்திரன்
தாரகன் மகன் அசுரேந்திரன்
கோரச் சிலை கொண்டு வந்தான்
ஏரகத் தடி இழிவ போல
வீர பூதர் விரைந்தழிந்தனர். 565
பொருள்
தாரகனின் மகனாகிய அசுரேந்திரன் கடுங்கோபத்துடன் வில்லேந்தி
வந்தான்; அவன் களத்தில் நுழைந்ததும் ஏர்க்கலப்பை அடியே சிக்குண்ட
புழு பூச்சிகள் போல வீரம் மிக்க பூதப்படைகள் யாவும் அழிந்துமாண்டனர்.
அழிந்தனர் பூதர்கள்
கனக சிங்கன் விசய தாண்டகன்
கணக்கில்லா பூதப்படை
தனதாற்றலால் தாழ்த்தியவன்
கனகப்பொடி வீரமொய்ம்பால். 566
பொருள்
அசுரேந்திரனால் பூதப்படையே அழிந்தது. கனகசிங்கன்
விசயதாண்டவன் போன்றவர்களையும் தனது ஆற்றலால் அழித்தான்
அரக்கன். தங்கத்தின் தூள்போன்ற வீர எண்மருள் கடைசித் தம்பி
வீரமொய்ம்பன் அசுரேந்திரனை அழித்தான்.
விரைந்தான் சூரமன்னன்
இருமகன்கள் இறந்தநிலை
இருண்டமன விருளரக்கன்
அருங்களத்தே அனைவரையும்
அழித்திடவே விரைந்தான் சூர். 567
பொருள்
போர்க்களத்திலே தனது இருமகன்களையும் இழந்த இருண்டமனம்
கொண்ட காரரக்கன் களத்தே காண்பவரை எல்லாம் அழிக்கும்
நோக்கத்துடன் விரைந்து வந்தான்.
சூரனோடு போர்
வஞ்சகனது வார்சிலையொலி
அஞ்சவைத்தது அகிலமதை ;
விஞ்சு பூதர் விரைந்துவந்தே
மஞ்சு நீரெனப் பொழிந்தனர் சரம். 568
பொருள்
வஞ்சகனாகிய சூரனின் வில்லொலி மூவுலகத்தையும் அஞ்சவைத்தது;
காலத்தே நிலைத்த பூதப்படை விரைந்துவந்து சூரன் மீது மழை நீரெனக்
கணைகளைப் பொழிந்தது.
நூற்றெட்டு பூதர் தோற்றனர்
பத்ர பதுமன் மந்தவ்யாக்ரன்
சித்ராங்கன் சிங்க சோமன்
முத்ரத்தலை நூற்றெண்மர்
வித்தகனிடம் வலி யிழந்தனர். 569
பொருள்
பாத்ரபதுமன், மந்தன் ,வ்யாக்ரன், சித்ராங்கன், சிங்கசோமன் முதலிய
நூற்றெட்டு பூதத்தலைவர்கள் சூரனிடம் தோற்றோடினர்.
எண்மரும் வீழ்ந்தார்
நவவீரரருள் தவஎண்மர்
சிவவரத்தான் சிலையினடியே
அவமெனவே அடங்கிநின்றனர்;
சிவமகனருள் மயங்கிவீழ்ந்தனர். 570.
பொருள் சூரனை ஒன்பது வீரருள் எட்டு வீரர்கள்
எதிர்த்தனர். சிவா வரம் பெற்ற சூரனது வில்லாற்றல் அவர்களை அடக்கிக்
கிடத்தியது.முருகன் அருளால் மயங்கி வீழ்ந்தனர்;உயிர் நின்றது.
வீரவாகு சூரன் போர்
வீரவாகு வீரஒலி
வீரத்தேர் சூரனெதிர் ;
தீரவொற்றனோ தீர்ந்தாயினி ;
தீராச்சினம் சூரசொல்லில் . 571.
பொருள்
தனது வீரத்தேரோடும்,வீர ஒலியோடும் சூரனுக்கு முன்னால் சென்றார்.
ஓ ! தீரத்தூதுவனோ !இன்றே அழிந்தாய்!குறையாத சினத்தோடு சூரன்
கத்தினான்.
சினவழுகைச்சூரன்
மாகேந்திரம் தூமமாக்கினை !
மாநாற்படை வீணழித்தனை !
மாசில்தமர் மாளவைத்தனை !
மாண்புதல்வன் மண்ணாக்கினை! 572.
பொருள்
எமது மகேந்திர நகரை எரித்தாய்! நால்வகைப் படைகளையும்
அழித்தாய்! குற்றமற்ற உறவினர்களை வீழ்த்தினாய்! எனது புதல்வனையும்
அழித்தாய்!
சூரனின் சீற்றமொழி
நினதுயிரைப் யமனதாக்கி,
நினதுவீரம் எனதடிவிழ
நினதுதூது நிலத்தடியே
நினதெதுவும் நில்லாவே. 573.
பொருள்
தூதனே!உன்னுடைய உயிரை யமனுக்களிப்பேன்; உனது வீரத்தை எனது
கால்களில் பணியவைப்பேன்; உனது தூதினை மண்ணுக்குள் புதைப்பேன் ;
உன்னுடையது என எதுவும் இவ்வுலகில் இனி இருக்காது.
இன்றே இறுதிநாள்
வந்திடுவாய், தூதனாய்;
தந்திடுவேன் தண்ணுயிர்தான் ;
முந்திப்போர் அந்திமாண்டாய்;
இந்தநாளோ இறுதிகாண்பாய் ! 574.
பொருள்
எந்நாட்டிற்குத் தூதனாய் வந்தாய்; அதனால் உன்னைக்கொல்லாமல்
உன்னுயிர் தந்தேன்; முந்தைய போரிலோ மகனிடம் சற்றே மாண்டாய்;
இந்தநாள் உனது இறுதி நாள்; என்றான் சூரன்.
வீரவாகு விடை
சினவுரைக்குச் செவிசாய்க்காச்
சீரிளையோன் செவ்வேளின்
மனமறிந்த மாவடிநான் .
மனநிறைபோர் ஆற்றுக நீ . 575.
பொருள்
சூரனின் சினம்கலந்த பேச்சிற்குச் செவி சாய்க்காத வீரவாகு,
மாமுருகனின் மனமறிந்து பேரடிமை நான். அவரெண்ணப்படியே
நடக்குவன்.உனது மனமகிழ்வில் செம்போர் ஆற்றுக நீயே, என்றான்.
படைஇயக்கல்
கோடிகோடியாய்த் தொல்லம்பு;
தேடிதேடித் திளைத்தவிருவர்
நாடிநாடித் தெய்வப்படை,
சாடிசாடிச் சொல்படையுமே. 576.
பொருள்
கொல்கின்ற அம்புக்கூட்டங்களைக் கோடிகோடியாயெய்தனர்.
சரங்களைத் தேடித்தேடி விடுத்தனர்;தெய்வப்படைகளை நாடி வணங்கிச்
செலுத்தினர்;இடைஇடையே சொல்லாலும் சாடி க்கொண்டனர்.
சூரன்மேல் படும் படைகள்
கொடுந்தீயோன் மேல்படும்சரம்
படும்படும்தொறும் பொடிபட்டன;
முடிந்திட்டன; முறிந்திட்டன;
மடிந்திட்டன; சரிந்திட்டன. 577.
பொருள்
சூரனின் மேல் வீரவாகு எய்யும் அம்புகள் சரங்கள், தெய்வப்படைகள்
எல்லாம் பட்டவுடன் பொடியாயின;முடிவைப்பெற்றன; முறிந்திட்டன;
இற்றுப்போயின;சரிந்து விழுந்து நொறுங்கின.
சிவப்படை
வரவலிமை எனவுணர்ந்த
வீரவாகு சூரன்மேல்
அரன்படைதனை வழிபட்டே
அருங்கூற்றை ஏவினானே . 578.
பொருள்
சூரனின் வரத்தால் பெற்ற வலிமையை உணர்ந்த வீரர் ,அவன்மேல்
சிவப்படையை வணங்கி,வழிபட்டு அருங்கூற்றென ஏவினார்.
எதிரெதிர் சிவப்படை
அருஞ்சிவப்படை வருவதுகாண்
அரக்கனுமே அடல்மாப்படையை
அருச்சித்தே தொடுத்தனனே ;
இருபடைகளும் எதிரெதிரே . 579.
பொருள்
வீரவாகு விட்ட சிவப்படையைக்கண்டு சூரனும்,அந்த உயரிய சிவப்
படையை வழிபட்டு விடுத்தான்; இரு படைகளும் எதிரெதிர் நின்றன.
கதித்தவர் கரமடைதல்
எதிர்க்கவியலா முதுபடைதாம்
எதிரெதிராய் முதிர்முதிராய்
புதிர்ப்புதிராய் ஆடியபின்னர்
கதித்தவரின் கரமடைந்தன. 580.
பொருள்
தம்மையே தாம் எதிர்க்க இயலாத தன்மையில் இரண்டும் எதிரெதிரே
நின்றபடி, முதிர்ச்சி பெற்றும், புதிராய் நின்றும், ஆடியபின்னர் எய்தவர்
கரத்தையே அடைந்தன.
அவுணச்சரம்
வெகுண்டவுணன் வேறோர் சரம்
வெகுளியாக்கை பல்துளியாய்ப்
பகுபாடு படுத்தும்நிலை
தொகுத்தவன் விட்டிட்டான் . 581.
பொருள்
மிகுந்த சினம் கொண்ட அவுணன் யாக்கையைப் பல கூறாக்கிப்
பாடுபடுத்தும் நிலையற்ற சரத்தைத் தொகுத்து விட்டான்.
கதைப்போர்
விட்டசரம் தடுத்தவனை,
வெறிகொண்ட சூரனவன்
மட்டில்லா மாக்கதையை
மார்புநோக்கி அடித்தானே . 582.
பொருள் ' பலமுறையும் தன்விட்ட சரங்களையெல்லாம்
தடுத்து நிறுத்திய வாகுவின்மீது வெறிகொண்ட சூரன் வலிமிக்க
பலம்மிக்க கதை ஒன்றால் வீரனின் மார்பில் அடித்தான்.
தடுப்பினும்....
வெங்கதையை வீழ்த்திடவே
செங்கதையைச் செலுத்தினாலும்,
அங்கதை யதை நீறுசெய்தே
அவன்மார்பில் அடித்ததம்மா! 583.
பொருள்
சூரன் எறிந்த கதையைத் தடுத்திட,வீரன் நல்ல மற்றொரு கதையை
வீசினான் ;ஆயினும் சூரனின்கதை அதைப் பொடியாக்கிவிட்டு, வாகுவின்
மார்பில் அடித்தது.
வாகு வீழ்ந்தான்
தாழ்ந்தவீரன் தளரியாக்கை
வீழ்ந்தனனே வீரியல்புடன்;
ஆழ்ந்தமனம் ஆறுமுகம்
தாழ்ந்தமணி வீழ்ந்ததம்மா! 584.
பொருள்
வீரவாகுவின் யாக்கை தளர்ந்தது; தாழ்ந்து வீழ்ந்தான்;
வீரத்தன்மையுடனே வீழ்ந்தான்; ஆறுமுகத்தை மனமெல்லாம் நிறைத்து
வைத்திருந்த மணி நிலத்தில் சாய்ந்தது. அந்தோ!
மனமாற்றம்
ஆறுமுகனோ அறிந்தநிலை
சூரன்முன் தேர்செல்க!
வீறுற்றதேர் விரைந்ததுகளம் ;
மாறுற்றான் மனமாற்றம். 585
பொருள்
வீரவாகுவின் நிலையை உணர்ந்த ஆறுமுகன் தேரைச்சூரன்முன் விடுக
விரைந்தது தேர். களமும் மாறிற்று;பகைவனும் மனம் மாறியவனானான் .
புது ஞாயிறு
வேண்டியோ? வேண்டாவோ?
பூணொளிப் புதுஞாயிறு
வீணிருளை விலக்கியபடி,
மாண்புற்றது மதிமுகம். 586.
பொருள்
மாற்றான் வேண்டினானோ?வேண்டவில்லையோ? தேரிலே நின்ற
நீளொளியும் புதுஞாயிற்றின் தோற்றமும், தேவையற்று இருந்த இருளை
நீங்கியதால் முருகனின் மதிமுகம் மாண்புற்றது.
சூரன் காணல்
கண்டானே கந்தமுகம்;
உண்டானே உயிரோவியம்;
குண்டலமணிக் காதுகண்டான்;
தண்டையொலிச் சேவடியும்தான். 587.
பொருள்
சூரன் களத்தில் தன்னை நோக்கி வரும் கந்தனின் திருமுகத்தைக்
கண்டானே . ஓவியம் உயிரோடு வருவதுபோன்ற காட்சியை மனதில்
உண்டானே .குண்டலமணிகள் ஆடும் காதைக்கண்டான்;தண்டையில்
ஒலிக்கும் ஒளிகொண்ட சேவடியையும் கண்டான்.
கசடு மாறா
கண்டகண்கள் கசடாற்றா ;
பண்டுபெருமை நின்றுபோற்றும் ;
கண்மாயம் காட்டினானோ?
கண்டவனோ மாறவில்லை. 588.
பொருள்
கருணை பொழியும் கண்களைக் கண்டுவிட்டால் தீய நோக்கே வராது.
தொன்மை வாய்ந்த பெருமையைக் காலமெல்லாம் போற்றும். இவன்
என்னை மாற்றக் கண் மாயம் செய்தானோ? குரங்குமனம். கண்டவன்
மாறவில்லை.
மாறான் சூரன்
மாயத்தால் மயங்குவேனோ?
தேயத்தார் தெற்கடைய ,
ஆயதூது ஆவிவிட்டிட ,
நேயமாக நெறிமாற்றமோ? 589
பொருள்
சூரன் நான் மாயத்தால் மயங்குவேனோ? என்னைச்சார்ந்தவர்கள்
போரில் இறந்துபட்டது யாரால்? நான்மறப்பேனோ? தூதுவந்தவனும்
ஆவியை விட்டுவிட்டானே ;இனி நேயம் தேவையோ? நான் நெறி
மாறமாட்டேன். என்று மனதுள் நினைத்தான் சூரன்.
சூரன் சீறல்
என்னோடு இகல்புரிய
உன்தந்தை, நான்முகன்,மால்
எந்நாளும் ஏற்கமாட்டார்;
சின்னவன் நீ சீரறியாய்! 590
பொருள்
என்னுடனே போராற்றிட உன் தந்தை,நான்முகன், திருமால்
ஆகியோர் ஒருபோதும் விரும்பமாட்டார்; நீ மிகச்சிறியவன்; நன்மை தீமை
அறியமாட்டாய் .என்று சீறினான்.
சின்னவன் உன்னலை
உன்னலை நீ என்வரத்தியல் ;
உன்னலை நீ என்யாக்கை;
உன்னலை நீ என்படைத்திறன் ;
சின்னவன் நீ சமர்வந்தாய் ? 591.
பொருள்
சின்னவனே! இத்தன்மையால் என்னோடு போருக்கு வந்தாயே!
எனது வரப்பெருமைகளை எண்ணிப்பார்த்தாயா? எனதுவலிமை மிக்க
அழியா யாக்கை பற்றி எண்ணினாயா?எனது பரந்துபட்ட படைகளின்
திறனைப்பற்றிச் சிந்தித்தாயா? என்றும் கூறினான்.
சூரன் அறைகூவல்
விண்ணார்ந்த வியன்கடவுளர்
பண்ணார்ந்த பார்வதியாள்
கண்ணார்ந்து இரங்கிநிற்க ,
என்னொருசிலை உன்னுயிருணும் 592
பொருள்
வானத்தே வாழும் தேவர்களும், கடவுளரும், பண்ணால் போற்றப்படும்
பார்வதி தேவியாரும், கண்கலங்கி அழுதுபுலம்பிட என்னுடைய ஒரு
கணையே உனது உயிரை உண்டுவிடும். பார்க்கிறாயா? என்று அறைகூவல்
விடுத்தான்.
குரு உபதேசம்
அருவுருவாய் ஆறுமுகன்
ஆணவமாம் சூரனுக்கே ,
திருவாயால் தெய்வமொழி
குருவடிவாய் மொழிந்தனனே. 593.
பொருள்
அருவமாயும், உருவமாயும், அருவுருவமாயும் விளங்கும் ஆறுமுகன்
ஆணவம் கொண்ட சூரனுக்கே தமது திருவாயால் தெய்வமொழியாகக்
குருவடிவாய் நின்று உபதேசம் மொழிந்தார்.
நெற்றிக்கண் சுடர்
முக்கண்ணனின் முதுசிறுபொறி
மூவுலகும் அழிக்கவல்லது;
அக்கண்ணின் அடுசுடர்ப்பொறி
எக்கணமும் உனையழிக்கும். 594.
பொருள்
மூன்றுகண்களை உடைய சிவபெருமானின் நெற்றிக்கண்ணில்
தோன்றும் சிறுபொறி மூன்று உலகத்தையும் அழிக்கவல்லது. அக்கண்ணில்
தோன்றிய அதே சுடர்ப்பொறி உன்னை எந்தநேரமும் அழிக்கும். இதை நீ
மறந்துவிடாதே. என்கிறார் முருகன்.
சிறியோர் எல்லாம் சிறியர் அல்லர்
வெஞ்சமரை விளைவிக்க,
விறல்வலிமை வழிவகுக்கும் ;
அஞ்சுபெரியர் மஞ்சுசிறுவர்
விஞ்சவேண்டா வேறுபாடு. 595.
பொருள்
பெரும்போரை விளைவிக்க வீரமே வலிமையே வழி வகுப்பன;
அவ்வீரத்தில் சிறியவர்,பெரியவர் என்ற வயதிற்கு வேறுபாடு தருவது
இல்லை;அவ்வேறுபாடும் வேண்டாம். அவரவர் ஆற்றலே வீரத்தை வழி
வகுப்பது ஆகும். இதை நீ உணர்ந்துகொள்! என்றும் கூறினார்.
நாமே அழிப்போம்
நூற்றெட்டு யுகம்தாண்டிப்
பேற்றுடனே வாழும்வலி
தேற்றமுறாச் சிறியநாமே