அறிமுகம்
வணக்கம். எனது தந்தையின் 83 ஆம் ஆண்டு நிறைவு விழா இனிதே
துவங்கும் இந்த இனிய நேரத்திலே எல்லாம் வல்ல பரம்பொருளை
வாங்கிப் போற்று முகத்தான், இறைவணக்கம், வழங்க வருபவர்
இலஞ்சி தென்காசி குமாரக்கோயிலின் ஓதுவா மூர்த்திகள்.
பன்னிருதிருமுறையை இளம் மாணவர்களுக்கு இசையோடு சொல்லிக்
கொடுப்பவர்; குற்றாலம் திரு .சிவா வீரபாண்டி அவர்கள்.
2. சான்றோர் போற்றும் விழா, நூல் வெளியீட்டு விழா வாக அமைந்துள்ள
எனது தந்தையின் 83 ஆம் பிறந்த நாள் விழாவைத் தலைமை ஏற்று
நடத்திக் கொடுக்க வரும் சிறப்புமிக்க சான்றோர், தமிழ்ச்செம்மல், என்னும்
தமிழக அரசின் உயர் விருது பெற்றவர்; தமிழ் இலக்கிய,இலக்கண மேதை,
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் தமிழியல் புலத்தலைவர்;
மேலை நாடுகள் முழுவதும் சென்று தமிழின் பெருமையைப் பறை
சாற்றும் பாவாணர், தமிழ் முனைவர், யோகாவில் பட்டயம் பெற்றவர்,
மதிப்புகெழுமிய தமிழ்ச்சான்றோர், திருமிகு, போ .சத்யமூர்த்தி அவர்களைத்
தலைமைப் பொறுப்பு ஏற்று விழாவை நடத்தித்தர அன்போடு
அழைக்கிறேன்.
3. விழாவிற்கு வருகை புரிந்துள்ளோரை வரவேற்கும் பணியை ஆற்ற
திரு.சுவாமி.சுப்பிரமணியன் அவர்களை அழைக்கிறேன்.
4. தலைமையுரை ஆற்ற இருக்கும் தமிழ்ச்செம்மல் அவர்களுக்கு,
திரு.ஜி சுவாமிநாதன் மாலை அணிவிப்பர்.
திரு.கே.சரத் பாபு அவர்கள் பொன்னாடை போர்த்துவார்.
திரு.அபிஷேக் சுவாமிநாதன் அவர்கள் நினைவுப்பரிசு வழங்குவார்.
5. தலைவர் அவர்களது தலைமையுரை
5. அ . சீரிய உரை ஆற்றிய தலைவர் அவர்களுக்கு மிக்க நன்றி. அடுத்து,
6. சான்றோர் போற்றுதலில் முதல் சான்றோர், முனைவர், சிவாகம
வித்வான், வ்யாகரண சிரோமணி, சிவாகம வாசஸ்பதி, சிவஸ்ரீ,
செ வா கார்த்திகேய சிவாசார்யார் அவர்கள்.
திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக் கழக,சைவாகமப்
பேராசிரியர்; சுப்ரபேதாகமம் போன்ற ஆகம நூல்களை
வெளியிட்டிருப்பவர்; பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு
ஆகமம் பயிற்றுவித்துக் கொண்டிருக்கும் குலபதி ; அன்னாரைப்
போற்றி வணங்கிட அழைக்கிறோம்.
7. மதிப்பு கெழுமிய தலைவர் அவர்கள் தமது பொற்கரங்களால்
நிறை சிவப்பணிச்செல்வர்" என்று பொறிக்கப்பட்ட பதக்கத்தை
அன்னாருக்கு அணிவிப்பார். ரூபாய்.ஐயாயிரம் தாங்கிய
பொற்கிழியையும் வழங்குவார்.
வழங்கியமைக்குத் தலைவர் அவர்களுக்கு மிக்க நன்றி.
8. திரு,ஜி.சுவாமிநாதன் அவர்கள் சிவாசார்யாருக்கு மாலை அணிவிப்பார்.
திரு,கே,சரத்பாபு அவர்கள் பொன்னாடை போற்றுவார். திரு. அபிஷேக்
சுவாமிநாதன் அவர்கள் நினைவுப்பரிசை அளிப்பார்.
9. சிறப்பு பெற்ற சான்றோர் மதிப்பு கெழுமிய . செ.வா. கார்த்திகேய
சிவாசார்யார் அவர்களது அன்பு.ஆசியுரை
10. சிவாகம மேம்பாடுகளை நாமெல்லாம் அறிந்துகொள்ளும் அளவு
பேருரை ஆற்றிய சிவாசார்யாருக்கு நன்றி . அடுத்து,,
11. சான்றோர் போற்றுதலில் சிறப்புமிக்க ஒதுவா மூர்த்திகளைப்
போற்றும் முறையில் வருகை புரிந்துள்ள தென்காசி, இலஞ்சி குமார
கோயில் ஓதுவா மூர்த்திகள், பன்னிரு திருமுறைகளில் தேவாரப்
பண்களில் நிகரற்ற புலமை கொண்டவர், மாணவர்களுக்கு முறைப்படி
இசையோடு கூடிய திருமுறை வாக்குப்பு நடத்துபவர். குற்றாலம்
திரு சிவ. வீரபாண்டி அவர்களைப் போற்றிட அழைக்கின்றோம்.
12. மதிப்பு கெழுமிய தலைவர் அவர்கள் தமது பொற் கரங்களால்
"திருமுறைச் செல்வர் " என்று பொறிக்கப்பட்ட பதக்கத்தை அன்னாருக்கு
அணிவிப்பார். ரூபாய் ஐயாயிரம் தாங்கிய பொற்கிழியையும் அளிப்பார்.
13. வழங்கிய தலைவர் அவர்களுக்கு நன்றி.
14. திரு. ஜி சுவாமிநாதன் அவர்கள் ஒதுவா மூர்த்திகளுக்கு மாலை
அணிவிப்பார். திரு. கே. சரத்பாபு அவர்கள் பொன்னாடை போர்த்துவார்.
திரு. அபிஷேக் சுவாமிநாதன் அவர்கள் நினைவுப்பரிசு வழங்குவார்.
15. நன்றி. திரு. சிவ . வீரபாண்டி அவர்கள் உரையும் ஆற்றிப் பஞ்ச
புராணமும் பாடுவார்.
16. நன்றி. சிவன் சன்னதியில் நிற்பதைப் போன்ற உணர்வை உங்களது
பண் ஓசை,இனிய குரல் ஏற்படுத்தியது . நன்றி.
17. எனது தந்தை இயற்றிய " ஞானமலை அலங்காரம் " என்னும்
சிற்றிலக்கிய நூலை,ப் பெருமை கெழுமிய தலைவர் அவர்கள்
தமது தமிழ்க்கரங்களால் வெளியிடுவார்.
அந்நூலை. முறையே திருமதி. பிரேமா சுப்பிரமணியன், திருமதி. கல்யாணி,
திரு. சுவாமிநாதன்,திருமதி.தேவி வித்யா திரு சரத்பாபு, திருமதி. சுபா
பெறுவார்கள்.
18. நன்றி தலைவர் அவர்களே.
19. நூலின் மையக்கருத்து, சிறப்பு, பற்றியும், நூல்பற்றிய நிறை
கருத்துக்களை எடுத்துரைக்க வருபவர் தமிழறிஞர்; பொருளாதார
வல்லுநர், சத்யம் போன்ற பெரும் நிறுவனங்களில் நிர்வாக மேம்பாட்டு
அலுவலராக விளங்கியவர்; இன்றும் கூட மேலைநாட்டு நிறுவனங்களில்
உயர் பணிபுரிபவர்; எல்லாவற்றிற்கும் மேலாக இந்த நூலுக்குச்
சிறப்புப்பாயிரம் எழுதியவர்; என தந்தையின்
மாணவர்; திரு. க.சேகர் அவர்கள் இதோ வருகிறார்
20. அன்னாருக்கு திரு. சரத்பாபு அவர்கள் மாலை அணிவிக்கிறார்கள்;
திரு.ஜி.சுவாமிநாதன் அவர்கள் பொன்னாடை போர்த்துவார்கள்
திரு.அபிஷேக் சுவாமிநாதன் நினைவுப்பரிசு வழங்குவார்கள்.
21. நூலை மேலோட்டமாகப் பாராமல் சிறந்த ஆய்வுரை போன்று
அலசி ஆய்ந்த சேகர் அவர்களுக்கு நன்றி.
22. அடுத்து, நூலின் குறை நிறைகளை அலசி ஆராய வருகிறார் திருமதி.
சித்ரா ராமசுவாமி அவர்கள். இவரை வங்கி மேலாளராகப் பார்க்கலாம்;
வைணவ சித்தாந்தங்களை விளக்குபவராகப் பார்க்கலாம்; என்
தந்தையின் மாணவர் திரு.இராசமசுவாமி அவர்களின் இல்லறத
துணையாகப் பார்க்கலாம். இந்த தம்பதிகள் இருவருமே சைவசித்தாந்தம்,
பெரியபுராணம் போன்ற சைவ இலக்கிய வகுப்பில் எனது தந்தையின்
ஞானவழி மாணவர்களாகவும் பார்க்கலாம். அன்னாரை ஆய்வுரை ன் நடத்த
அழைக்கிறேன்.
23. அன்னாருக்கு, திருமதி. சுபலதா சரத்பாபு அவர்கள் மாலை
அணிவிப்பார்கள். செல்வி.அபிலாஷா சுவாமிநாதன் அவர்கள்
பொன்னாடை போர்த்துவார்கள். செல்வி.அர்ச்சிஷா சரத் அவர்கள்
நினைவுப்பரிசு வழங்குவார்கள்.
24.. அருமையான அழகான உரை' நூலின் அழகை, வருணனையை
இறைப்பெருமையை நம் மனக்கண்முன் நிறுத்தினார். அன்னாருக்கு நன்றி.
25 தலைவர் அவர்களது வாழ்த்துரை
26. நல்லுரை வழங்கிய தமிழ்ச்செம்மல் அவர்களுக்கு நன்றி.
27. நன்றியுரை அந்தப்பணியையும் நானே ஏற்கிறேன்.
28. பெருகும் இவ்விழாவின் திருக்கடைக்காப்பு பாடிட ஓதுவார் பிஐயா
அவர்களை அழைக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக