முனைவர். சுவாமி சுப்பிரமணியன் அவர்களது 82 ஆம் பிறந்தநாள் விழா
சான்றோர் போற்றும் விழா
நூல் வெளியீட்டு விழா
அழைப்பிதழ்
வணக்கம். எங்களது தந்தை சுவாமி. சுப்பிரமணியன் அவர்களது 82 ஆம் பிறந்தநாள் விழா, சான்றோர் போற்றும் விழாவாகவும், நூல் வெளியீட்டு விழாவாகவும் 14.10.2023 சனிக்கிழமை, காலை 10 மணியளவில் காட்டாங்கொளத்தூர், "விபைவ் " ஹோட்டல், மஹாராணி அரங்கில் நடைபெறுவதால் தங்கள் குடும்பத்துடன் வந்து விழாவைச் சிறப்புற நடத்தித் தர அன்போடு வேண்டுகிறோம்.
நன்றி.
3.10.2023 இவண்
சென்னை. 73 எஸ். தேவிவித்யா,
எஸ். சுபலதா
நிகழ்வன
நாள் - 14.10.2023
நேரம் - காலை. 10. மணி.
நிகழ் இடம் - மஹாராணி ஹால், வி பைவ் ஹோட்டல், காட்டாங் கொளத்தூர், சென்னை.
இறைவணக்கம் தேவார இசைமணி. குற்றாலம் திரு.சிவ .வீரபாண்டி அவர்கள்.
வரவேற்புரை சுவாமி.சுப்பிரமணியன்.
தலைவர் நல்லுரை தமிழ்ச்செம்மல். முனைவர். திருமிகு. போ.சத்தியமூர்த்தி எம்.ஏ எம்.ஏ(இதழியல்) பிஎட் பிஎச்டி யோகா பட்டயம். தமிழியல் தலைவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.
சான்றோர் போற்றுதல் தலைஞாயிறு.சிவஸ்ரீ.என்.வெங்கடேச குருக்கள் நினைவாக, "நிறைசிவப்பணிச்செல்வர்" என்ற பட்டம் பெறுபவர், சிவாகம வாசஸ்பதி வ்யாகரண சிரோமணி முனைவர். சிவஸ்ரீ.செ வா கார்த்திகேய சிவாசார்யார் எம்.ஏ பிஹெச்டி சிவாகாமப் பேராசிரியர், திருப்பதி, வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகம்.
பதக்கமும் பொற்கிழியும் வழங்குதல்
சான்றோர் போற்றுதல் திருக்கடையூர். தேவார இசைமணி. சிவஸ்ரீ எஸ்.நடராஜ குருக்கள் நினைவாக, "திருமுறைச்செல்வர்" என்ற பட்டம் பெறுபவர், தேவார இசைமணி. குற்றாலம், திரு.சிவ. வீரபாண்டி ஓதுவா மூர்த்திகள், குமாரர் கோயில், தென்காசி.
பதக்கமும், பொற்கிழியும் வழங்குதல்
"ஞான மலை அலங்காரம்" நூல் வெளியீடு மதிப்பு கெழுமிய தலைவர் அவர்கள்
நூல் பற்றி தமிழறிஞர். திரு. க.சேகர் திருமதி. சித்ரா ராமசுவாமி
வாழ்த்துரை தலைவர்
நன்றியுரை திருமதி தேவிவித்யா சுவாமிநாதன்
திருக்கடைக்காப்பு திரு ஓதுவா மூர்த்திகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக