புதன், 13 செப்டம்பர், 2023

நன்றியுரை 82

                                                           நன்றியுரை 82 


1.  வணக்கம். எனது  தந்தையின்   82  ஆம்  அகவை   நிறைவு  நாள்  விழாவின் 

சீரிய   தலைமை   ஏற்று, அழகுதமிழில்  பாராட்டும்,வாழ்த்தும், அளித்துத் 

தலைமையுரையும்   வழங்கிய  மதுரை  காமராசர்   பல்கலைக்கழகத் 

தமிழியல்  தலைவர்; முனைவர்; இதழியலிலும்   முனைவர், யோகா  பட்டயம் 

பெற்றவர்; பிஎட்  பட்டமும்   பெற்றுக்   தமிழின்  சான்றாக, உலகத்தமிழ்ப் 

பேரவை  வல்லுனராக  விளங்கும், முனைவர்  சத்தியமூர்த்தி  ஐயா 

அவர்களுக்கு   முதலில்  எனது மனமார்ந்த   நன்றியைத்  தெரிவித்துக் 

கொள்கிறேன்.

2.   எனது   தந்தையின்   இலக்கியப்    படைப்பாகிய  "ஞானமலை  அலங்காரம்"

என்னும்   நூலை  வெளியிட்டு  வாழ்த்திய  முனைவர்   ஐயா  அவர்களுக்கு 

மீண்டும்  நன்றியைத்  தெரிவித்துக்   கொள்கிறேன்.

3.  இந்த  விழாவின்   சிறப்பு  அம்சமாகச்  சான்றோர்   போற்றும்  வைபவத்தில் 

கலந்து கொண்டு, சைவப்பணி  விருதும்  பொற்கிழியும்,பதக்கமும்  பெற்று 

விளங்கும், திருப்பதி  வெங்கடேஸ்வரா  பல்கலைக்கழகச்  

சைவாகம்ப்பேராசிரியர்.   சிவாகம  வாசஸ்பதி, வ்யாகரண   சிரோமணி,

டாக்டர்.செ .வா   கார்த்திகேய சிவாசார்யார்   எம் ஏ பிஹெச்டி  அவர்களுக்கும் 

என்  நமஸ்காரத்தையும்,  நன்றியையும்   தெரிவித்துக்  கொள்கிறேன்.

4.  சான்றோர்   போற்றும்  நிகழ்வு   தொடர்பாக, ஓதுவா மூர்த்திகள் 

சிறப்பிக்கும்  வைபவத்தில்  கலந்துகொண்ட  குற்றாலம்.தேவார  இசைமணி.

சிவா.வீரபாண்டி   ஐயா  அவர்களுக்கும்  என் நன்றியைத்  தெரிவித்துக் 

கொள்கிறேன்.

5.  வெளியிட்ட  நூலின்  சிறப்பம்சங்களை  விரிவாக   எடுத்துரைத்த 

தமிழ்   ஆர்வலர், தமிழ்   ஆசான், பல  செம்மைக்   கம்பெனிகளின் 

மேலாளராய்ப்  பணிபுரிந்தவர், திரு.ஜி சேகர்  அவர்களுக்கும்,எனது 

மனமார்ந்த   நன்றி,

6.  எனது   தந்தையின்   மாணவரின்  இல்லறக்கிழத்தி, பெரியபுராண 

வகுப்பில்  மாணவி, வங்கி  மேலாளராகப் பணிபுரிந்து  ஒய்வு  பெற்றவர்,

திருமதி. சித்ரா  ராமஸ்வாமி   அவர்களுக்கும்  எனது  மனமார்ந்த   நன்றி,

7.எனது தந்தையின்   நூலுக்கு  அழகே   உருவான  அணிந்துரை  அளித்ததோடு,

வாழ்த்தவும்   நேரில்  வந்த  ஆசிரியர். திரு. எம்.முத்துகிருஷ்ணன்  எம் ஏ பிஎட் 

அவர்களுக்கும்  அந்த  நன்றியை   உரித்தாக்குகிறேன்.

8.  விழாவிற்கான  ஏற்பாடுகளை, அழகுமேடை, உணவு,உபசரிப்பு, வரவேற்பு 

போன்றவற்றைச்  செம்மையாக   ஆக்கிக்   கொடுத்த   இந்த விபைவ் 

ஹோட்டலின்  பங்குதாரர்களில்   ஒருவராகிய  திரு,ஜி  சுவாமிநாதன் 

அவர்களுக்கும்  மிக்க  நன்றி.

   மாற்றும்,  இவ்விழாவில்   கலந்துகொண்ட  உறவினர்களுக்கும், 

நண்பர்களுக்கும், என்தந்தையின்  சிறப்புமிக்க   மாணவர்களுக்கும், 

எனது   நன்றியைத்  தெரிவித்துக்   கொள்கிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக