அணிந்துரை .
திருப்புகழ்ச்செல்வர், உபன்யாசத்திலகம், திருத்தொண்டர் மாமணி.
திரு. எம். முத்துகிருஷ்ணன் எம்.ஏ. எம். எட்.
கிழக்கு ,தாம்பரம் சென்னை...600059 .
----------------------------------------------------------------------------------------------------------------------------
ஞானமே வடிவாகிய முருகப்பெருமான் ஞானமலை ஸ்வாமியாக,
"நாரண ஸ்வாமி ஈனும் மகளோடு " இமையவர் துதிப்ப உறைகின்ற மலை,
ஞானமலை ஆகும். இத்தலத்தில் அருணகிரி நாதருக்கு, முருகன் முன்
அணிந்த பாதம் அருளினான்.இத்தலத்து முருகனுக்கு, முனைவர். திரு.
சுவாமி.சுப்பிரமணியன் அவர்கள், "ஞானமலை அலங்காரம்" என்ற
அற்புதமான மாலையைப் புனைந்து, அளித்திருக்கிறார்.
"சொல் ஏற்றான் தொல் குகனே" என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளபடி,
முருகப்பெருமான் "மல்லேபுரி பன்னிரு வாகுவில்" இவர் சொல்லையும்
ஏற்றிருக்கிறார். அலங்காரமாகிய இந்நூலை, ஆசிரியர், நேரிசை வெண்பா,
ஆசிரிய விருத்தம் முதலிய பா வகைகளோடு, அந்தாதியாகவும்,
அருமையாக அமைத்திருக்கிறார்.
அலங்காரம் என்பது, பா வகைகளுள் ஒன்று;அலங்காரம்
என்றால் அழகு படுத்தப்படுதல் என்று பொருள்.'
"காரியம்" என்று பொருள் படும் "காரம்" "அலம் " என; போதும் என்று
நினைத்து, உலக காரியங்களைப் போதும்' என நிறுத்தி,இறைவனைக்
கருதிப் போற்றுவது அலங்காரம். நம்மைச்சிங்காரித்து, நம் அழகை
வியக்காமல் முருகனைச் சிங்காரித்து,முருகனை அழகுபடுத்துவதே
ஞானமலை அலங்காரம்.
"வேலவர் அலங்காரத்துப்பொருளை
ஆய்வதுவே தேகங்கலங்கா அலங்காரம்"
என்று உரைக்கிறது தணிக்கை உலா. நூலாசிரியர் திரு,சுவாமி
சுப்பிரமணியன் அவர்கள்,இந்நூலைப் பக்திக் சுவையோடு இனிய
தமிழ்ச்சுவை பெருக, அருமையாய்ப் படைத்திருக்கிறார்.
ஞான பண்டித ஸ்வாமியை " தெய்வஞானத்தேசிகன்"(பாடல்.35)
"கரைச்சின்முத்திரையோடு காட்சி அளிப்பவன்"(பாடல்.14) என்று காட்டி,
அவன் ஞானம் எப்படிப்பட்டது என்பதையும்,(பாடல்.40) எடுத்துரைக்கிறார்.
வள்ளியை மணம் முடித்துத் திருத்தணி செல்லும் வழியில் முருகன்
இம்மலையில் தங்கியவன்,அகத்தியர் போற்றிய இம்மலைக்கு,
முருகனைக் காணத் திருமால் எழுந்தருளினார்,(பாடல்.70)
ஞானபண்டிதனாகத் தேவர்களுக்கு முருகன் உபதேசம் செய்த மலை,
(பாடல்.50) போன்ற வரலாற்றுச் செய்திகளை வழங்கி,
"ஞானமலை ஜகத்தின் நேயமலை"
"மோனமலை மோகத்தின் மீட்சி மலை"
"கிரியோ ஞானம்; கிடைத்தது பாதம்" (பாடல்.58)
என்ற வரிகளில் இத்தலத்தின் பெருமையை விளக்குகிறார்.
இங்குள்ள தீர்த்தமாகிய சுனையை, "காயாத நற்சுனை" (பாடல்.32)
என்று குறிப்பிடுகிறார். இத்தலத்து வழிபாட்டு விழாக்களை விளக்கி.
(பாடல்78) இவற்றில் நான் பங்கு பெறவில்லையே" (பாடல் 85) என
ஏங்குகின்றார். இம்மலையின் இயற்கை அழகில் மயங்கி,
"குலைத்தெங்கு குரங்காடும் அலைமேகக் கலைக்குன்று" என்று
வியக்கிறார்.
இந்நூலில் அமைந்துள்ள இலக்கிய நயத்தையும்,சொல்லாட்சியையும்,
எவ்வளவு பாராட்டினாலும் தகும். செவ்வாய்" (பாடல் 47) "ஆறு" (பாடல் 100)
என்ற சொற்களில் அமைந்த அழகான கவிதைகள்.
"ஆர்த்ததுவே ஆற்றுப்படை; ஈர்த்ததுவோ ஞானமலை"( பாடல்.19)
என்று கூறி,ஆறுபடை வீடுகளின் பெருமை,இந்த ஏடுமலைக்கு
உண்டு என்று உறுதிப்படுத்துகிறார். ஆறுபடை வீடுகளைத் தரிசித்த
பலன் இ2 என்செயும்?சூது என்செயும்?என்றெல்லாம் வினவி,ம்மலையைத்
தரிசிப்பதால் கிட்டும்"என்பதையும் பல
பாடல்களில் விளக்குகிறார். (பாடல், 18,42,97,98,99.)
ஏரழகு, ஊரழகு,தேரழகு,பேரழகு
ஏரகத்தாரழகன் இலங்குமலை "என்ற அழகான வரிகள் போற்றத்தகுந்தன.
முழுதும் அழகிய பெருமான், முத்தழகன்" விரும்பும் வரிகள் (பாடல்.31)
மாமரம், மாங்கனி, மாம்பிஞ்சு, மாவிலை,மாம்பூ, மாம்பழம், மாங்கொட்டை
மாஞ்சோலை,என்ற சொற்களை அழகாக அமைத்து, " மாமலையே"
ஞானமலை,என்று பாடலை முடிக்கும் முறை அருமை. (பாடல்.48)
" தீதென் செயும் ? வாது என்செயும்? சூது என்செயும்? என்றெல்லாம்
வினவி,(பாடல்.54) ஞானமலை முருகனை வழிபட்டால் வரும்பயனை,
"அரு ஞான மாமலை அருகடை நாள்
அகந்தை,ஆணவம், அடிமரம் அற்றதே" என்று
அற்புதமாக முடிக்கிறார்.(பாடல்.20)
38 ஆம் பாடல் அகத்துறையிலே அமைந்த அற்புதமான பாடல்.
பல அழகான சொற்றொடர்கள் ஆசிரியரின் சொல்லாட்சித் திறனை
வெளிப்படுத்துகின்றன .
தேமாலைத் தீந்தமிழ் (பாடல் காப்பு) தமிழ்வேடா (10) பவமான சேவல்"
அவமான மயில்"(82) தெற்காளும் தேவன் (94) அறம்பல திறக்கனி (37)
போன்ற சொற்றொடர்கள் படித்து,இன்புறத்தக்கவை.
"விதிமதி" நதி அதிபதி" என்ற அழகான வரிகளைக் கொண்ட 11 ஆம்
பாடல் சிறப்பானது. 21,42 ஆம் பாடல்களில் உபதேசம் இடம் பெற்றுள்ளது.
39 ஆம் பாடலில் ஸம்ஸ்க்ருதச் சொற்களை எடுப்பாகப்
பயன்படுத்தியுள்ளார்.
முருகன் அடியார்களின் பெருமையே 44 63,81, ஆம் பாடல்களில்
அளித்துள்ளார்.
25 ஆம் பாடல் கந்தபுராணச் சுருக்கமாக அமைந்துள்ளது.
" நாமகளுக்கு நாவிலே நவின்றேத்தியவன்" (பாட் 68,9.) போன்ற புதிய
செய்திகளும் உண்டு.
இந்நூலைப் படிப்பவர்கள் , முருகனின் காவிய நூலாய்வராக
இருந்துவிட்டால் விருந்து கிடைக்கிறது.
பக்தியோடு படிப்பவர்க்கு முருகன் அருள் கிடைப்பதைத் திருக்கடைக்
-காப்பால் தெளிவு படுத்துகிறார்.
நூலாசிரியரால் "நாள் பணியும் நல்லடியார் நாவிலூறும் தாசனாகக்
காட்டப்படும் முருகன்,பாடல், காதல் புரிவோனாக,பாலைத் தேனை
ஒத்து,அருள்வோனாக இருப்பவன்.,
ஏற்கெனவே பல நூல்களை வழங்கியுள்ள நூலாசிரியர்,
முனைவர். ஸ்வாமி. சுப்ரமண்யன் அவர்கள் இப்பனுவலையும் பக்தியோடு
படைத்துள்ளார்.திருமுருகன் திருவருளால் இவர் பல்லாண்டு வளமோடு,
உடல் நலமோடு வாழ்ந்து, இது போன்ற பக்திப்பனுவல்களை மேலும்
படைக்க முருகன் அருள் முன்னிற்கும்.
வாழ்க இவர் பல்லாண்டு.
வாழ்க இவர்தம் தொண்டு.
முருகா சரணம்.
சென்னை--59. எம்.முத்து கிருஷ்ணன்.
10.8.23
'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக