நன்றியுரை
வணக்கம். எனது தந்தையின் 81 ஆம் பிறந்தநாள் விழாவைச் சான்றோர்போற்றல், நூல் வெளியிடல் போன்ற அமைப்புகளுடன்,
அவர் முனைவர் பட்டம் பெற்ற அடுத்த திங்களிலேயே கொண்டாடும் அளவு நல்லருள் புரிந்த எல்லாம் வல்ல பரம்பொருள் எம்பெருமான் முருகனுக்கு,
முதல் நன்றியாக என் நமஸ்காரத்தைப் படைக்கின்றேன்.
இந்த விழாவிற்குத் தலைமை ஏற்றுள்ள சான்றோர் கல்விச்சிந்தனையாளர்; கர்நாடக மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் கல்விப்
பல்கலைக்கழகப் பதிவாளர்; தேர்வுகள் இயக்குனர்; போன்ற பனிலைகளில்
சீரிய பனி ஆற்றும் சான்றோர் ஆவார்.
1997ல் எனது தந்தையின் பிறந்த நாள் விழாவைத் தலைமை ஏற்று
நடத்திக்கொடுத்தவர்; அந்த ஆண்டே எனது தந்தை முனைவர் பட்டம்
பெற வழிவகுத்து, அதைச் செயல் படுத்தியும் காட்டியவர்.
அவரையே இன்றைய விழாவிற்கும் தலைமை ஏற்க அழைக்கவேண்டும், என்ற எனது தந்தையின் விருப்பப்படி நாங்களும் அவரோடு தொடர்பு
கொண்டு,வேண்டினோம்; மனமுவந்து அவரும் ஏற்றார். இப்படிப்
பல்லாற்றானும் பல நிலைகளில் வழிகாட்டிய டாகடர், திரு,தோத்தாத்ரி
வேணுகோபால் அவர்களுக்கு, எவ்வளவு நன்றி சொன்னாலும் அவ்வளவும்
தகுதி உடையதே ஆகும். அவருக்கும்,அவரது துணைவியாருக்கும் நன்றி
கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்விழாவின் சிறப்பம்சமாக ஆன்றோர் போற்றல் என்ற நிகழ்வில்
சிவாசார்யப் பெருமகனார் ஒருவரையும், ஓதுவாமூர்த்திகள் ஒருவரையும்
பாராட்டிப் பரிசுகள் வழங்குவதை வழக்கமாகக் கொண்டவர் என் தந்தை.
அந்த அளவில் சிவாசார்ய பூயிஷ்டராக அமைந்தவர் சிவாகம வித்துவான்.
சிவஸ்ரீ சா.கௌரீச சிவாசார்யார் கந்தன்குடி முருகனின் தொண்டர்.
சைவாகமங்களைக் கற்று, ஆலய அமைப்பும், பூஜை முறையும் நன்கு
அறிந்தவர்; தொன்மை வயது உடையவர்; அப்படிப்பட்டவர் இப்பரிசுப்பட்டத்தைப் பெறத் தனது மகன்,பேரன்,மகளுடன் வருகை
தந்துள்ளார்.இந்த வயதிலும், எனது தந்தையின் வேண்டுகோளை ஏற்று,
வருகை தந்துள்ள சிவாசார் யச்சான்றோரையும், அவருடன் வந்துள்ள
வேத மீமாம்ஸ பூஷணம் சங்கராத்மஜன் என்ற அவரது பேரனுக்கும்,எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசிகர் பாராட்டும் அமைப்பில் இன்றைய விழாவில் பங்கெடுத்துக்
கொண்டவர் , தேவார இசைமணி குடந்தை,வி லட்சுமண அய்யர் அவர்கள்.
தேவார இசைக்கே பிறந்த தருமபுரம் பி.சுவாமிநாதன் அவர்களின் முதல் சீடர்; பல மேடைகளிலும், பல ஆலயங்களிலும் இனைந்து அவரோடு
பாடியவர், அப்படிப்பட்ட தேவாரக்கலாநிதி அவர்களுக்கு எனது
மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெளியிட்ட நூலின் பெருமைகளை பட்டியலிட்டு விமர்சனம் செய்த
டாக்டர்.ஜி.கல்யாண ராமன் தனக்கே உரிய சிம்மக்குரலில் அழகொழுக விமர்சித்தார். அன்னாருக்கு எனது மனமார்ந்த நன்றி.
ஆங்கில மோகத்திலே ஆங்கில ஈடுபாட்டிலே பழகி ஊ றி யவர்கள்
தாயமொழியை மறந்து விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டைத் தவிடு
பொடியாக்கியவர் திரு.க.சேகர் அவர்கள்.
அமெரிக்க வங்கி,சத்யம் போன்ற ஆங்கில மேம்பாட்டு அலுவலகத்திலே உயர் பதவியை வகித்தும், தமிழாம் தாய் மொழியை
மறவாமல் ஓய்வு பெறும் காலம் தமிழ் எம்.ஏ பட்டமும் பெற்ற சேகர்
தமிழ் இலக்கண இலக்கியங்களிலே மிகுந்த புலமையும் வாய்ந்தவர்;
எல்லாவற்றிற்கும் மேலாக அவர் என் தந்தையின் மாணவர் ஆவார்.
அவரது நூல் பற்றிய கருத்துக்களுக்கும் அவருக்கும் எனது நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவைத் தனது மேற்பார்வையில் இந்த ஹோட்டலின் பங்கு
தாரரான திரு,ஜி,சுவாமிநாதன் உபசரிப்பு, வரவேற்பு, உணவு, போன்ற
பல பணிகளைத் தாமே முன் நின்று நடத்திக் கொடுத்துள்ளார். அவருக்கு
எனது மனமார்ந்த நன்றி.
விழாவிற்கு வருகை தந்த எனது தந்தையின் மாணவர்கள், அவர்களது
துணைவியர்கள் மற்றும் உறவினர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி.
வருகை தந்த அத்துனைச்சான்றோர்களுக்கும், உறவினர்களுக்கும்,
தனித்தனியே மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக