புதன், 12 அக்டோபர், 2022

                                வரவேற்புரை 

1  மாமுருகா.....

2.  விழாத்தலைவர்            கல்வியாளர்    படிப்பு    பதவி    பண்பு   

  மூன்றிலும்   உயர்வு.

3.   எளிமை    நேர்மை     இனிமை     மூன்றும்   கவசம் 

4.    நெடுநோக்கு     நடுவுநிலைமை     கடுகடுப்பின்மை    மூன்றும்  மூச்சு 

5.   தமிழ்     ஆங்கிலம்     தூண்கள் 

6.     ஆரவாரம்   அலட்சியம்   அதிகாரம்   தீண்டாமை 

7  நட்பு    நகைமுகம்    நலம்நாடல்    தோற்றப்பொலிவு  மூன்று 

 8.  உலகநாடுகள்   முழுவதிலும்   தமிழ்மொழி  வளர  அயராது  பாடுபடுபவர்;

9. உலகத்தமிழ்க்கழகப் பெருந்தலைவர்.

10. திருக்குறளின்  பெருமையை  வளர்க்கும்  நோக்கில்  திருக்குறள் பேரவை 

என்னும்  அமைப்பைத்  தோற்றுவித்துத்  தானே   தலைவராக  நின்று 

பைந்தமிழ்  வளர்ப்பவர்.

11.விஜிபி   குழுமத்தின்  தலைவர்,

12. எழுத்தாளர், கவிஞர்  ஆராய்ச்சி வல்லுநர். அன்னாரை  வரவேற்பதில் 

பெருமை   அடைகிறேன்  இருகரம் கூப்பி  ஐயா  அவர்களை   வருக வருக  என....


2,   சான்றோர்  1     சைவ  ஆகமங்களில்  பாண்டித்யம்   பெற்றவர்;  

வாசஸ்பதி,பிரதிஷ்டா  பூபதி  போன்ற  பட்டன்கள்   பெற்றவர்;

திருமாகாளம்  என்னும்  சைவப்பதியில்   அமைந்துள்ள  சிவாலயத்தில் 

தலைமை  அர்ச்சகராகப்  பணிபுரிபவர்  திரு.தி.மாதுபுரீஸ்வர  சிவாசார்யார் 

அவர்களை...

3.  சான்றோர்.2.  மயிலை  மக்களால்  குருஜி   என  அழைக்கப்படும் 

திருமுறை  இசைமாமணி  திரு.நாகநாத  ஓதுவார் ; கபாலீஸ்வரர் 

கோயிலில்  தேவார  இசைப்பணி  புரிந்து  ஒய்வு பெற்றவர்; தற்பொழுது  

லஸ்கார்னர்  விநாயகர்  கோயிலில்  இசைப்பணி  புரிபவர்; பலப்பல 

பட்டங்கள்   பெற்றவர்; இன்றும்  தேவார  வகுப்புகள்  நடத்திவருபவர்.

அவர்களை ....

4.  இன்றைய   விழாவின்  சிறப்பு   அம்சம்  ஒரு முருக பக்தர்  முருகன்மீது 

இயற்றப்பட்ட   மகேந்திரபுரப்பரணி  என்னும்  நூலை  வெளியிட   வைத்த 

அந்த   முருகனின்  பேரருள்   எனலாம். அப்பேரருளுக்கு  உரித்தானவர் 

மலேசியநாட்டின்   தலைப்பேராளர் .திரு.கு.சரவணக்குமார்  குமாரவாசகம் 

அவர்கள். தமிழ்நாட்டின்  பாரம்பரியமிக்க  அவர்  நம்  விழாவிற்கு  வந்துள்ளது 

நமக்கெல்லாம்  பெருமை   தரக்கூடியதாகும். அன்னாரை  வரவேற்பதில் 

பெருமை   அடைகிறேன்;

5. இன்றைய விழாவின்  மற்றுமொரு சிறப்பு  நம்   விழாவின்  சிறப்புரை ஆற்ற 

வந்துள்ள  தமிழ்  வளர்க்கும்  சான்றோர், அகரமுதலித்திட்ட  மேனாள் 

இயக்குனர், தமிழ் வளர்ச்சிக்கழக  முன்னாள் இயக்குனர். ஆகிய 

தமிழ்ப்பேரறிஞர் திரு.கோ. விஜயராகவன்   அவர்கள் ...

6.  இன்றைய  விழாவின்  முதல்நிலை  முனைவுகள்  அனைத்தையும் 

ஆக்கித்தந்தவர், அருந்தமிழ்ச்செல்வர், மதுரைக்காமராசர்  பல்கலைக் கழகத் 

தமிழியல்  தலைவர், முனைவர், திரு.பி.சத்தியமூர்த்தி  அவர்களை ...

7. இன்று   நூல்  பற்றிய  ஆய்வுரை  வழங்க  வந்துள்ள  எனது  தந்தையின் 

மாணவர்கள்; திரு.இரத்தினசாமி, திரு.சுந்தர்   இருவரும்  பெங்களூரில் 

இருந்து  இவ்விழாவில்  கலந்துகொள்ள  வந்துள்ளனர்; தமிழிலும், தமிழ்ப் 

பயில்விலும்  முதன்மையில்  விளங்கும்   இருவரையும்     

8.  எனது தந்தையின்  மாணவர்கள்    பலர்  இங்கு வந்துள்ளனர்   அனைவருமே  உயர்ந்த நிலையில்   உள்ளவர்கள்   ஆயினும்   என்தந்தை  மீது   கொண்ட  அன்பு  காரணமாக  வந்துள்ளனர். அவர்களையெல்லாம்    

9.எனது   உறவினர்கள்   மணி   மாமா   என்ற   மகத்தான   அன்போ,

மரியாதையோ  ஈடுபாடோ  அவர்களை   இங்கு   வரவழைத்திருக்கிறது 

அவர்களையெல்லாம்    

10. இந்த   மாபெரும் ஹோட்டலின்  பங்குதாரர்கள்  அவர்கள்  எல்லாம் எனது 

தந்தைமீது கொண்ட   அன்பு  காரணமாக  வந்துள்ள  அவர்களை  ..

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக