புதன், 12 அக்டோபர், 2022

 அறிமுகம்     திருமதி. எஸ்.தேவிவித்யா 

   வணக்கம். எனது     தந்தையின்  83ஆம்  பிறந்த   நாள்  விழா   இறைவணக்கத்துடன்   துவங்குகிறது.

1  இறைவணக்கம். 

   திருமுறைஇசைமணி.மயிலை.குருஜி. நாகநாத  ஓதுவார்  

2.  வரவேற்புரை   வரவேற்புரை   வழங்க   நானே   வருகிறேன்    

3.    தலைமையுரை ...  தகைமை  சால்  தலைவர் - முனைவர். 

உலகத்தமிழ்க்கழகத்தலைவர், திருக்குறள்  பேரவைத்தலைவர்,வி.ஜி.பி.

குழுமங்களின்  தலைவர், எல்லோராலும்  அன்புடன்  அண்ணாச்சி  என்று 

அழைக்கப்படும் தொழில்மேதை,எழுத்தாளர்,கவிஞர். திரு. 

வி.ஜி. சந்தோசம்   அய்யா  அவர்கள் தலைமையேற்று, உரையாற்ற 

வருகிறார்.  

அன்னாருக்கு, திரு.ஜி  சுவாமிநாதன்  அவர்கள்  மாலை அணிவிப்பார் .

திரு.கே.சரத்பாபு  பொன்னாடை   போர்த்துவார்.

திருமதி, சுபலதா   நினைவுப்பரிசு    வழங்குவார்.


4. திரு.சுவாமி.சுப்பிரமணியன்   வரவேற்பிதழ்      வாசித்தளிப்பார்.


5.  தலைவர்   அவர்களின்    தகைமை   சால்   உரை.....


     மிகச்சிறந்த   தலைமையுரை   ஆற்றிய  சான்றோருக்கு  நன்றி.

6.  சான்றோர்  போற்றல்.

  சிவாசார்யார்   பாராட்டு. - ஒவ்வொரு ஆண்டும் எனது தந்தை தனது பிறந்த நாள் விழாவில் அவரது மாமா  தலைஞாயிறு சிவஸ்ரீ ந . வெங்கடேச குருக்கள் அவர்களை போற்றும் வகையில் அவர் பெயரில் நினைவுப் பரிசு வழங்கி வருகிறார்.

அவ்வண்ணம் இவ்விழாவில்   பாராட்டு  பெறும்  சான்றோர்..சிவாகம  

 வித்துவான்.சிவஸ்ரீ. மாதுபுரீஸ்வர    சிவாசார்யார்   அவர்கள்.  

திருமாகாளம்    என்னும்  சிவபெருமான்     புகழ்   பாடும்   தலத்தின் அமைந்த 

ஆலயத்தின்  பரம்பரை   அர்ச்சகர்   ஆவார்.சைவாகமங்களையும் 

தேவார  திருவாசகங்களையும்  கற்றுயர்ந்த  பெருந்தகை   ஆவார்.


அவருக்கு,   திரு.ஜி.சுவாமிநாதன்.  அவர்கள்  மாலை   அணிவிப்பார்.

திரு.கே.சரத்பாபு  பொன்னாடை   போர்த்துவார்.

மதிப்புகெழுமிய   தலைவர்  அவர்கள் 

'நிறை சிவப்பணிச்செல்வர்"  என்ற   பட்டம்   பதித்த  பதக்கத்தை  

அணிவிப்பார் . அன்னாருக்கு   ஐயாயிரம் ரூபாய்  கொண்ட  பொற்கிழியையும்   

 வழங்குவார்.

திரு,சுவாமி.சுப்பிரமணியன்  பாராட்டிதழைப்  படிக்கத்   தலைவரும்,

அவரும்   அதனை,  சிவாசார்யாருக்கு   வழங்குவார்கள்.

மரியாதை  கலந்த   பையை  திரு.அபிஷேக்    அவருக்கு   வழங்குவார்..

7.  சிவாசார்யாரின்   அருளுரை.


    சிவாசார்யார்   அவர்களுக்கு   நன்றி.

8.  சான்றோர்  போற்றல்  2  

     ஓதுவா   மூர்த்திகள்  பாராட்டு.   சிவாச்சாரியாரைப்  போற்றுவதைப்  போலவே ஓதுவா மூர்த்திகளையும் வருடாவருடம்  போற்றும் எனது தந்தை   மறைந்த தனது தம்பி சிவஸ்ரீ திருக்கடையூர் s. நடராஜ குருக்கள் அவர்களைப்   போற்றும் வகையில் அவர் பெயரில் நினைவுப் பரிசு வழங்குகிறார்.

பாராட்டு   பெறுபவர்  "திருமுறைக்கலாநிதி"திரு  மயிலை.குருஜி. நாகநாத 

ஓதுவார் அவர்கள்.மயிலாப்பூர்  கபாலீஸ்வரர்  கோயிலில்  தேவார 

இசைப்பணி புரிந்தவர்; தற்போது லஸ்  கார்னர்  விநாயகர்  கோயிலில் 

பணியாற்றுபவர்; பல்வேறு  பட்டங்களையும், பதக்கங்களையும்  பெற்றவர்;

தேவாரவகுப்புகள்  நடத்துவதால் மயிலைப்   பகுதிமக்கள்   இவரை 

குருஜி  என்றே  அழைப்பார்கள்;சென்னை   விருகம்பாக்கத்தில்  வசிப்பவர்.

    அவருக்கு.  திரு.ஜி.சுவாமிநாதன்  அவர்கள்   மாலை   அணிவிப்பர்.

திரு.கே. சரத்பாபு  அவர்கள். பொன்னாடை   போர்த்துவார்,

மதிப்பு கெழுமிய  தலைவர்  அவர்கள்   "திருமுறைச்செல்வர்"  என்ற 

பட்டம்   பொறி த்த  பதக்கத்தினை  அன்னாருக்கு   அணிவிப்பார்.

  ரூபாய்   ஐயாயிரம் கொண்ட   பொற்கிழியையும்   அவருக்கு    வழங்குவார்.

திரு.சுவாமி.சுப்பிரமணியன்   சான்றிதழைப் படிக்க .  அதனைத் 

தலைவரும்,  அவரும்  ஓதுவா  மூர்த்திகளுக்கு     வழங்குவார்கள்.

மரியாதை  கலந்த  பையை   திருமதி. சுபலதா  அவருக்கு   வழங்குவார்.

 9. திருமுறைச்செல்வரின்  அருளுரை.  அல்லது  திருமுறை  பாடுதல்.

     மிக்க  நன்றி   திருமுறைக் கலாநிதி  அவர்களே.

10.   நூல்   வெளியீடு 

  ஒவ்வோர்  ஆண்டும்   தனது  பிறந்த  நாளிலே  நூல் வெளியிடும்  மரபினைக் 

கொண்ட  என்   தந்தையார்  திருச்செந்தூர்   முருகன்  மீது   பாடிய  

"மகேந்திரபுரப்பரணி "  என்ற   சிற்றிலக்கிய  வகை   நூலை,

மதிப்பு கெழுமிய  மலேசியநாட்டுத்  தலைமைப்பேராளர்   திரு,  சரவணக்குமார் குமாரவாசகம்  அவர்கள்  வெளியிடுவார்கள்.

அன்னாருக்கு,  திரு. ஜி. சுவாமிநாதான்  அவர்கள்   மாலை  அணிவிப்பார்கள். 

திரு.கே. சரத்பாபு   அவர்கள்   பொன்னாடை   போர்த்து வார்கள்.

செல்வி. அபிலாஷா  நினைவுப்பரிசை   வழங்குவார்கள். 

திரு. சுவாமி. சுப்பிரமணியன்.  அவர்கள்  வரவேற்பிதழை  வாசித்து 

அளிப்பார். 

11. திரு. சரவணக்குமார்  அவர்கள்  நூலை   வெளியிடுவார்;

முதல் நூலை  முனைவர். கோ. விசயராகவன்   ஐயா  அவர்கள்  பெற்றுக் 

கொள்வார்கள்.  திரு. முனைவர். பி. சத்தியமூர்த்தி ஐயா   அவர்கள்  பெற்றுக் 

கொள்வார்கள். திருமதி.பிரேமா  சுப்பிரமணியன்  அவர்கள்  பெற்றுக் 

கொள்வார்கள்.

12.  திரு.சரவணக்குமார்  ஐயா  அவர்கள்  வாழ்த்துரை  வழங்குவார்.

நூலை  வெளியிட்டருளிய, நல்வாழ்த்துரை  வழங்கிய  அன்னாருக்கு   மிக்க  நன்றி.

13. விழாச்சிறப்புரை

விழா  பற்றியும்,நூல்.நூலாசிரியர்   பற்றியும் , சிறப்பு வாழ்த்துரை  வழங்க  வருகிறார்   முனைவர்.திரு. கோ. விஜயராகவன்  அவர்கள். 

தமிழ்  வளர்ச்சிக்கழகத்தின்   தலைவராக  அவர்  ஆற்றிய  பணிகள் 

காலத்தால்  போற்றக்கூடியவை.ஆகும்.  அகரமுதலித்  திட்டத்தில்  தமிழ் 

நிலைத்துநிறக   அவரது  பணிகள்  போற்றக்கூடியவை. முத்தமிழ்  மேதை 

அவர்; அவர் இப்பொழுதுசிறப்பு   வாழ்த்துரை  வழங்க  வருகிறார்.

ஐயா  அவர்களுக்கு, திரு.ஜி.சுவாமிநாதன்  அவர்கள்   மாலை  அணிவிப்பார் 

திரு.கே. சரத்பாபு   அவர்கள்   பொன்னாடை  போர்த்துவார்.

திருமதி. மதுஅபிஷேக  அவர்கள்   நினைவுப்பரிசை  வழங்குவார்.

ஐயா  அவர்களின்  பொன்னுரை ..

ஐயா  அவர்களுக்கு  மிக்க நன்றி.

14.  எங்களின்   குடும்ப  நண்பரும், இவ்விழாவின்  நிகழ்ச்சிகளுக்காக  எங்களோடு 

இணைந்து  பாடுபட்டவரும், தமிழ்ச்செம்மலும்   மதுரைக்காமராசர்  

பல்கலைக்கழகத்   தமிழியல்  தலைவரும்   ஆன, முனைவர். திரு.

பி.சத்தியமூர்த்தி  அவர்கள்  சிறப்புரை   ஆற்ற வருகிறார்.

அன்னாருக்கு.. திரு.ஜி.சுவாமிநாதன், அவர்கள்  மாலை  அணிவிக்கிறார்.

திரு.கே.சரத்பாபு  அவர்கள்  பொன்னாடை   போர்த்துகிறார்.

செல்வி.அர்ச்சிஷா  அவர்கள்  நினைவுப்பரிசை   வழங்குகிறார்.

ஐயா   அவர்களின்   அன்புரை 

ஐயா  அவர்களுக்கு   மிக்க நன்றி.




15.  நூலைப்பற்றி..... 

    இந்த  நூல்   என்ன  நூல்? எப்படிப்பட்ட   நூல்? என்பதைத்  திறனாய்வு 

நோக்கில்  நூலை பற்றிப்   பேச  வருகிறார்கள்  இருவர். திரு.இரத்தினசாமி 

எனது   தந்தையின்   மாணவர்   என்பது  சிறப்புச்செய்தி.

முதலில்  திரு.இரத்தினசாமி  பெங்களூர் . 

   அவர்களுக்கு. திரு.ஜி.சுவாமிநாதன்  அவர்கள்  

பொன்னாடை   போர்த்துவார்.திரு.அபிஷேக்  அவர்கள்  மாலை  அணிவிப்பர்.

திரு.கே.சரத்பாபு  அவர்கள் நினைவுப்பரிசை  வழங்குவார்.

திரு.இரத்தினசாமி  அவர்களின்  ஆய்வுரை 

நன்றி  

16.  நூலின்   இலக்கிய மேம்பாட்டை,வருணனைகளை    விளக்கி, நூல்பற்றிப்

பேச வருகிறார்   திரு.க.  சுந்தர் பெங்களூர்  

திரு.சுந்தர். நமக்கெல்லாம்  நன்கு தெரிந்த  திரு.ஜி.சேகரின்   இளவல்;என்பது சிறப்புச்செய்தி. 

திரு.சுந்தர்    அவர்களுக்கு,  திரு.சரத்பாபு  அவர்கள்  மாலை  அணிவிப்பர்.

திரு.ஜி.சுவாமிநாதன்  அவர்கள்  பொன்னாடை    அணிவிப்பார் . திரு;அபிஷேக் 

அவர்கள் நினைவுப்பரிசை  வழங்குவார்.

திரு.ஜி.சுந்தர் அவர்களின்  ஆய்வுரை.

நன்றி.

17.  விழாவின்   முத்தாய்ப்பாகத்    தலைவர்   அவர்களின்  நிறை  உரை.

 தலைவருக்கு  மீண்டும்   நன்றி.

18.  நன்றியுரை.    திரு.ஜி  சுவாமிநாதன்   அவர்கள்  நன்றிசொல்ல  வருகிறார்.

19.  ஆறிரு  தடந்தோள்  வாழ்க.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக