வரவேற்பிதழ்
சான்றோர் பாராட்டு விழாவிற்கும், அடியேனது பிறந்த நாள் விழாவிற்கும்,
தலைமையேற்று வாழ்த்த வந்தருளிய,
டாக்டர்.திருமிகு. தோத்தாத்ரி வேணுகோபால்.எம்.எஸ்.சி.பிஹெச்டி
அவர்களுக்கு மகிழ்வுடன் பாராட்டி அளித்த ,
வரவேற்பிதழ்
பாண்டிய நாட்டுப் பைந்தமிழ் மல்லிகை;
வேண்டிய வரமளி பாண்டிமா தேவி;
தெள்ளிய தீம்புனல் தாமிர பரணி;
வெள்ளிய வீழருவிப் புள்ளினப் பொய்கை;
அறிஞர் சான்றோர் அவதரி ஆன்றபுலம்;
அறிவோ டன்பும் , நெறியோடு நேர்மையும்,
அறியா வயதிலே ஆழ்ந்து நிற்க,
அறிஞர், ஆர்வலர், சூழ்ந்து நிற்க,
பெருமைக் கல்வி, பேற்றினைக் கொடுக்கப்
பெருமைப் பதவிகள் பேரினைக் கொடுக்க
உலகை வலமாய் உவந்து வந்த
பலகலை வல்லுந! பண்புசால் வல்லுந!
கற்றோர் காண்பர்; கற்றபணிச் சிறப்பு"
நற்றவக் கடமையால் நாட்டிய சான்றோய்!
கணிதமும் கல்வியும் கண்ணெனக் கொண்டோய்!
மனித நேயமும் மனதினில் நிறுத்திப்
புனிதப் பணிகள் ஆற்றும் புண்ணிய!
சென்ற இடமெல்லாம் சேர்க்கும் புகழுடையோய்!
ஆன்ற திறத்தால் ஆளுமை வளத்தால்,
சான்றோர் மனத்தில் சாஸ்த்ர புருஷனாய்
உயர்ந்து நிற்கும் உன்னதப் பெரியீர்!
எளிய எந்தன் இனிய விழாவில்
களிப்புடன் வந்தே கலந்த பாங்கு
மனையற மாண்பாய் இனிய துணையுடன்
மனையகம் தொட்டு, மனமெலாம் மகிழ்வு
பொங்கவே வாழ்த்திய தங்கச் சான்றீர் !
வங்கக் கடலலை வாழ்த்தும் சென்னை
வாழ்த்தைத் தாழ்த்தி, வளமார் நெஞ்சால்
வாழ்கென வாழ்த்திய வேணு கோபாலரே !
ஏழிசை பயிலும் இளமை நீத்துப்
பூழி வெங்கானம் நண்ணும் காலை
ஆழிசூழ் பெருமை வாய்க்க, அடையவொணா
முனைவர் மேன்மை முயல்வில் முடுக்கிய
நினைவில் போற்றினேன்; நியதித் தலைவரே!
வருகவே வருகவே வாழ்த்தொலி முழங்க.
வருக வருகவே வளமாய்; நலமாய்;
14.10.22. தங்கள்
சென்னை-73 சுவாமி.சுப்பிரமணியன்
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக