6.8. மீள்பிறவி
1. மண்மீது தக்கன் சிதையுடல் கண்ட,தாய்
வன்சினம் நீங்கி வளம்.
2. அருள்காட்டி அன்புவேண்ட அண்ணல்தம் பார்வை
இறந்தகூட்டம் எழவைத்த தாங்கு.
3. படையாவும் மீள்பிறவி; பண்டுதீய செய்கை
கடையானோர் கால்பணிந்து வேண்டு.
4. வேண்டினான் நான்முகன் நன்மகன் தன்னுயிர்
தாண்டவன் தண் கருணை தான்.
5. பானுகம்பன் கொண்டுவந்த ஆட்டின் தலையை
ஊனுகந்து வீரர் எழுப்பு.
6. வழிகாட்டத் தந்தை; விழிபோற்றும் தக்கன்;
அழிவில்லாச் சைவபூசை ஆற்று.
7. சிவனுயர்வு சிந்திக்கா என்வாழ்வு சொல்வேன்;
அவச்செருக்கு ஆளானோம் அன்று.
8. மால்முதல் நான்முதல் மற்றிருவர் போட்டியில்
கால்முடி காணாச் சுடர்.
9. அடிமுடி தேடினோம், விண்பறவை, ஏனம்;
பொடியான பின்னர் துணிபு.
10. நலம்காண நற்பூசை மாச்சிவன் கந்தன்
வளம்கூட்டும் நோன்புமே கொள்.
பொருள்
1.வானத்தே வந்துநின்ற உமாபதி, மாள்வதிலிருந்து திருமாலை மீட்டு,
அப்படியே களத்தை வலம் வந்தார். அங்கே மண் தரையில் வெட்டுண்டு தலையிழந்து முண்டமாகக் கிடக்கும் தக்கனது உடலைப்
பார்த்த தாக்ஷாயணி அம்மை மனத்திலே இருந்த சினத்தைக் குறைத்தாள். வளம் கொண்ட சிந்தனை மனத்திலே தோன்றிற்று.
2. ஐயனே! செருக்கினால் அழிந்த தக்கனை அச்சத்தினால் பின்பற்றி,அழிந்த விண்ணவப்படையை மன்னித்து, உயிர்ப் பிச்சை அளியுங்கள்! அன்பு காட்டுங்கள்! என அம்மை வேண்டியதும், அய்யன்
தனது கருணைக் கண்ணால் களத்தை நோக்கினார். அங்கே மடிந்து கிடந்த அத்தனை உடல்களும் உயிர் பெற்று எழுந்தன.
3. அழிந்தோம் என்றிருந்த விண்ணவப் படை முழுவதும்,மீண்டும் வாழ்வதற்கான அருளை இறைவனிடம் பெற்று எழுந்தன. எழுந்தவுடன் தக்கனோடு சேர்ந்துகொண்டு, இறைவனைப் போற்றாது கடையர்களாக மாறிவிட்டோம்" என நினைந்து, அழுது, வெட்கப்பட்டு, அப்படியே ஆண்டவன் கால்களில் விழுந்து மன்னிப்பை வேண்டினர்.
4. எல்லோரும் எழுந்திருக்கத் தனது மகன் தக்கன் மட்டும் தரையில் கிடக்க, மனம் நொந்த நான்முகன், இறைவனாம் சிவபெருமானை வணங்கி ஐயனே! என்மகன் உயிர்பெற்று எழுந்திருக்க அருள் புரிய வேண்டும்" என வேண்டினான். கருணையே வடிவான எம்பெருமான்
அவன் உயிரையும் அளிப்பாய்"! என்பதுபோல் வீரரைப் பார்த்தார்.
5. அதைப் புரிந்துகொண்ட வீரபத்திரர் பூதப்படைத் தலைவன் பானுகம்பனைப் பார்த்தார். ஓடிச்சென்ற பானுகமபன் வேள்விக் களத்தில் வெட்டப்பட்டுக் கிடந்த பசுமையான "யாகப்பசு" என்னும்
ஆட்டின் தலையைக் கொண்டு வந்தார். வீரர் அத்தலையை, தக்கனின்
முண்டமான உடலில் கழுத்தில் பொருத்தினார். அது இணைந்தது;
தக்கனும் உயிர் பெற்று, ஆட்டுத் தலையோடு எழுந்து நின்றான்.
6. எல்லோரையும் வாழ்த்தி ஆசிகள் வழங்கிவிட்டு இறைவன் மறைந்தருளினார். மீண்டும் தக்கனுக்கு உபதேசம் பண்ணினார் பிரமன். சிவனே உயர்ந்தவர்; அவரைப் போற்றுதலே உயிர்களுக்கு நன்மை அளிக்கும்" அதனால் முறைப்படி நீயும் சிவபூசை செய்யத் தொடங்கு"! என்கிறார். தக்கனும் அன்றுமுதல் சிவபூசை ஆற்றத் தொடங்கினான்.
7. மேலும் நான்முகன் தக்கனுக்கு இறைவன் சிவன் பெருமையை உரைக்கத் தொடங்கினார். அவரே உயர்ந்தவர் என்பதை உணராத பெருக்கினால் நானும் திருமாலும் அடைந்த துயரைக் கூறுகிறேன் கேள்"
என்று சொல்லத் தொடங்கினார். ஒருசமயம், படைத்தல் தொழிலாற்றும் நானே உயர்ந்தவன்" நீ தாழ்ந்தவன் எனத் திருமாலைத் தாழ்த்தினேன்.
திருமாலும், நானே உயர்ந்தவன்; காத்தல் தொழிலைப் புரிபவன் ;அது மட்டுமல்ல; உன்னையே என் தொப்புளுள் உருவாக்கியதே நான்தான்.
நானே உயர்ந்தவன்"என்று சொன்னார். இருவருக்கும் நெடுங்காலம் போர்
நடந்தது; எங்களின் போருக்கு இடையே களத்தில் மண்ணையும், விண்ணையும் தொட்டுக்கொண்டு ஒரு அழற்பிழம்பு; சோதி ஒளி;
தோன்றியது. வானிலே அசரீரியாக ஒரு சொல்லும் எழுந்தது; "இந்த
சோ தியின் அடியையும், முடியையும் யார் முதலில் காண்கிறார்களோ அவரே முதல்வர் ஆவார்" என்று.
நான் அன்னப்பறவை உருவெடுத்து வானில் சாதியின் முடியைத்
தேடிப் போனேன். திருமால் பன்றி உருவெடுத்து, மண்ணைத் தோன்றியபடி அந்த சோதியின் அடியைத் தேடிப் போனார்.
காலங்கள் ஓடின; யுகங்கள் மறைந்தன; நாங்களும் தேடுகிறோம் காண
முடியவில்லை; துவண்டு, நொந்து, வாடி,வதங்கி, இறைவன் கால்களில்
விழுந்தோம். அவரும் ஆணவம் அழித்துப் பணியைச் செய்யுமாறு அருளினார். அவரே முதல்வர் என்பதை உணர்ந்தோம். என்றார் பிரமன்,
10. தக்கனே! நலம் பயக்கும் சிவா பூசையை ஒருபோதும் கைவிடாதே.
அதேபோல் அவரது மகன், முருகன் அவரையும் பூசனை செய்ய மறக்காதே. அதிலும் கந்தர் குறித்த விரதம், நோன்பு போன்றன
ஆற்றிப் பயன் அடைந்த பராசரர், பகீரதன் போன்றோரை நினைவில் கொண்டு நீயும் அவ்வழிபாடு நடத்தி நற்கதி அடைவாய்" என்று உபதேசம் செய்தார் நான்முகன்.
விளக்கம்
1.வளம்.........................................= நல்ல மனம் கொண்டாள்
2. நோக்கு = கருணைப்பார்வை
3. கடையானார் = தேவர்கள்
4. நன்மகன் = தக்கன்
5. ஊனுகந்து = முண்டத்த்தை யும் தலையையும் சேர்த்து
6. விழிபோற்றும் = உறக்கமின்றி
7. அவச்செருக்கு = பாவம் தரும் ஆணவம்
8. கால் தலை = தொடக்கம், முடிவு இல்லாத தீச்சுடர்
9. பொ டியான பின்னர் = துனப்பபட்டுத் தெடிக் கிடைக்காத பொழுது
10...நோன்பு = விரதம்
இலக்கணம்
மீள்பிறவி.............................................வினைத்தொகை
காணா ...................................................ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக