4.33. முதல்நாள் பானுகோபன் போர்
1. சூரபன்மன் மைந்தனிடம் சூர் வெல்ல வக்குழந்தை;
சூரன் சேய் வென்றுவா போர்.
2. கந்தனைச் செந்திரு மார்பனை, நான்முகனை
இந்திரனை வென்றிடுவேன் யான்.
3. நாரதன் கூற்றறிந்து, சூர்மகன் வென்றுவா!
வீரவாகு! சென்றுவா நன்று.
4. சூரமைந்தன் தன்னோடு போரிட்டுத் தோற்றனர்
வீர நவர் தீரர் பலர்.
5. குகனும் அல்லை; மலரோன்மால் அல்லை ;
மகன்சூரன் தம்மோடு தூது!
6. அன்று பிழைத்தனை! இன்றோ அழிந்தனை.
வென்றிடு!வா! வாய்ச்சொல் வீண்.
7. காரும், கதிரும், ககனமும், நீருறும் ,
ஈரிருவர் சீர்வில் மழை.
8. வஞ்சினச் சொற்கள் வகை வகை பேசினான்,
நெஞ்சினில் தீ,வெகுளி பானு.
9. சிவப்படை வாகுகரம் பற்றியதைப் பார்த்தான்
அவம் வரும் அஞ்சியகல் ஓடு.
10. இறைப்படை தாங்கிவந்து வீரன் அழிப்பேன்;
மறைந்தனன் பானுகோபன் மற்று.
பொருள்
1. இருதிறப் படைகளும் ஆரவாரத்துடன் போர்க்களத்தில் அணிவகுத்து நிற்பப் பானுகோபனை அழைத்து வருமாறு சூரன் ஆணையிடுகிறான்.
தந்தையை வந்து வணங்கிய பானுகோபனைப் பார்த்து, மகனே! நம்மை வெல்வதற்காக, நேற்று வரை அஞ்சிக் கிடந்த தேவர்கள் முருகன் தலைமையின் கீழ் சூரனை அழிக்கப் படையெடுத்துள்ளார்கள்.
சூரனை எதிர்க்க வந்துள்ளது சிவனின் குழந்தை; அக்குழந்தையை எதிர்த்து வெல்லும் ஆற்றல் எனக்கிருந்த போதிலும், அக்குழந்தையை எதிர்த்துப் போராற்றும் பண்பு என் குழந்தை உன்னையே சாரும்.
அங்கு ஈசன் மகன்; இங்கு சூரன் மகன். இதுவே சிறந்த பண்பு என்பதால்
மகனே! நீ சென்று தேவைப்பதர்களை அழித்து இழுத்து வா! அக்குழந்தையையும் அழித்துவிட்டு வெற்றியோடு வா! என ஆசி கூறிப் போருக்கு அனுப்பினான்.
2. தந்தையே! இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தேன். நம்மை வெல்ல
நம்மோடு போர் புரிய வந்திருக்கும், அந்தக் கந்தனை அழிப்பேன்; திருமாலையும்,நான்முகனையும், இந்திரனையும் வென்று, அவர்களை இழுத்துவந்து உங்கள் கால்களில் விழவைப்பேன்; என்று கூறிவிட்டுச்
சூரனின் ஆசியோடு களம் புகுந்தான்.
3. பானுகோபன் போருக்கு வருகிறான் " என்ற செய்தியோடு முருகனின் தாள் பணிந்த நாரதர் முருகா! பானுகோபன் சூரியனையும், இந்திரனையும் திருமாலையும் வென்றவன்; மாயை அறிந்தவன்; மாயப்போர் ஆற்றுவதில் வல்லவன்; அவனை யாராலும் வெல்ல முடியாது. ஆதலின் தாங்களே அவனோடு பொரித்து,அவனை அழித்து வெற்றி பெற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார். உட னே
முருகன் வீரவாகுவை அழைத்தார். வீரவாகு! சூரன் மகன் பானுகோபன் போர்க்களம் வந்துள்ளான். அவனோடு போர் புரிந்து வெற்றிபெற்று வா!
என்று அவனையும், அவனது இளவல்களையும் அனுப்பி வைத்தார். விழித்தபடி நின்ற நாரதரைப் பார்த்து, முனிவரே! சரபக் குருளைகளை
மாபெரும் சிங்கக்கூட்டத்தாலும் வெல்ல முடியாது; பொறுத்திருந்து பாருங்கள்! என்று கூறி அனுப்பிவைத்தான்.
4. பேரண்டங்களில் உள்ள பெரும் படையுடன் ஆரவாரத்தோடு களத்தில்
நுழைந்தான் பானு. வில்லை வளைத்து அம்புகளை ஆயிரக்கணக்கில் எய்தான்; பூத, தேவப்படைகள் நொந்து நூலாயின. இதனைப் பார்த்துக் கொண்டிருந்த சிங்கன், நீலன், தண்டி போன்ற பூதப்படைத் தலைவர்கள் பானுகோபனை எதிர்த்துத் துவண்டனர். முருகன் அருளால் அவர்கள் உயிர் பிழைத்தனர்; நவவீரர்களுள் எண்மர் போரிட்டுத் தோல்வியுற்றனர். கபாலி, அந்தாலோசனன்,நிரஞ்சனன்,உருத்திரன்,
அகண்டன், போன்ற நந்திப்படை த் தலைவர்களும், வீரகோளரி,
வீ ரமார்த்தாண்டன், வீர ராக்கதன்,வீர வந்ததன்,வீர மகேச்சரன்,
போன்றோர் பானுகோபனிடம் தோற்று, முருகனால் உயிர் வரப்பெற்றவர்கள் ஆவர்.
5. எல்லோரும் தோற்ற நிலையில் பூதப்படை சின்னாபின்னமாகி அங்கும்,இங்கும் ஓடுவதைப் பார்த்த வீரவாகு தன வில்லில் நாணொலி எழுப்புகிறார். அதுகேட்ட படைகள் ஒரு நிலைக்கு வருகின்றன. பானுகோபன் முன்னால் நிற்கும் வீரவாகுவைப் பார்த்துப் பானுகோபன் ஏளனத்துடன் இவ்வாறு கூறுகிறான்.தூதனே! நீ என்ன குகனா? இல்லை;திருமாலா? இல்லை;பிரம்மதேவனா? இலை;இந்திரனா? என்னோடு போர் புரியும் தகுதி உடையவர்கள் அவர்களே. தூதுவன் நீ என்னை எதிர்த்துப் போரிட வந்துள்ளாய்! இது எனக்கே அவமானம்! எனச் சளித்துக் கொள்கிறான்.
6. வீரவாகு! அன்று மகேந்திரபுரியில் நான் உன்னை அழித்திருக்க வேண்டும். தப்பித்து விட்டாய். ஆனால் இன்றோ நீ தூதுவனே 1 நீ
அழியப் போகிறாய்! என்று பேசும் பானுகோபனைப் பார்த்து, வீரவாகு,
வீண் பேச்சு எதற்கு? வென்றிட வா! வா! என்றழைத்தார்.
7. இருவரும் விற்போர் தொட்டனர்; ஆயிரம் ஆயிரம் அம்புகள் பறந்தன; அந்த அம்பு மழையிலே கார்மேகங்கள் மூழ்கின; ஆதவன் மறைந்தான்; வானமே மறைந்தது; கடலும் மறைந்தது;சளைக்காமல் இருவரும் போராற்றினர்.
8. வீரவாகுவின் போராற்றலைக் கண்டு, சினமுற்ற பானுகோபன் உன்னை அழித்துவிடுவேன்" உன்னை உலகிவிட்டே அனுப்பிவிடுவேன்" இன்று உன்னை வென்றி கொள்ளாவிடில் என் உயிரை மாய்த்துக் கொள்வேன்" என்னும் வஞ்சின மொழிகளை வாயாரப் பேசிக் கொண்டே இஐந்தான்.
9. தேரிழந்து, வில்லிழந்து, முடியிழந்து, இருவரும் மாறி மாறி க் கணைகளை எய்தனர்; பானுகோபன் மீது ஏவுவதற்காக வீரவாகு "சிவப்படையை" க் கையில் வணக்கத்துடன் எடுத்தார். அதைக்கண்ட பானுகோபன் தானும் அதே தெய்வீகப் படையை ஏவிட நினைத்த மாத்திரத்தில் அதனை அவன் எடுத்துவர மறந்த தன்மையை உணர்ந்தான். சிவப்படையின் தன்மையை உணர்ந்த பானுகோபன் அதனால் வரும் துன்பத்தை நினைந்து காலத்தை விட்டே ஒடத் துவங்கினான். அவன் ஒடிய வேகத்தைப் பார்த்த பூதப் படைகள்
ஆரவாரம் செய்தன' வாகுவின் வெற்றியைப் புகழ்ந்து போற்ற ஆரம்பித்தன.
10. ஓடிக்கொண்டே பானுகோபன் மனத்தில் நினைத்தான்;" நாளை
தெய்வீகப் படைகளை எடுத்து வந்து இந்த வீரவாகுவை அழிப்பேன்"
என்றபடி, ஓடித் தனது மாளிகையை அடைந்தான்.
விளக்கம்
1. சூரன் சேய் = பானுகோபன்
2. செந்திரு மார்பன் = திருமால்
3. கூற்றறிந்து = பானுகோபன் ஆற்றல் அறிந்து
4. வீர நவர் = வீரவாகுவின் இளவல்கள் எண்மர்
5. மலரோன்,மால் = பிரமன், திருமால்
6. வீண் = பயனற்றது
7. காரும் = மேகமும்,
8. தீவெகுளி = சினத்தீ
9. அவம் வரும் = அழிவு வரும்.
10. இறைப்படை = தெய்வீகப்படை
இலக்கணம்
1. அல்லை ........................................முன்னிலை ஒருமை வினைமுற்று
2. காரும்,கதிரும் ......................... இணை முரண்
3. சீர்வில் ...........................................பண்புத்தொகை
4. தீவெகுளி ....................................உருவகம்.

1.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக