இராமேஸ்வரப்பயணம்
ஐப்பசித்திங்கள் தந்தையின் திவசத்தை,இராமேஸ்வரத்தில் இயற்ற எண்ணிப் புறப்பட்டோம்,நானும்,என் மனையாளும்,19,1௦,அன்று காலை
9 மணிக்குப் புறப்பட்டோம், நேராக மதுரை சென்றோம், மதுரை ரெசிடன்சி
லாட்ஜில் தங்கினோம்.மாலை,5 மணியளவில் ஆட்டோவில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றோம்.பாதுகாப்பு என்ற போர்வையில் துன்புறுத்தும் வாயில்கள் வழியே அம்மையப்பனைத் தரிசித்தோம்.ஒரிஜினல் நாகப்பட்டினம் அல்வா சாப்பிட்டோம்.பிராம்மநாளுக்காக ஒன்பது xஐந்து
வேஷ்டிகள் வாங்கினோம்.பிச்சைக்கு மாட்டிக்கொள்ளும் பேக் வாங்கினோம்.
2௦,1௦ அதிகாலை திருப்பரங்குன்றம் முருகனைத் தரிசித்தோம், இராமேஸ்வரம் செல்லும் வழியில் திருப்பூவணம் சுவாமி தரிசனம்,அங்கும்
பித்ருக்கள் தர்ப்பணம் விசேஷமாம்,
உத்தரகோச மங்கை வாதவூரடிகளின் ஞான சுவாமியைக் கண்டோம்,மரகத நடராஜர்,மரகத,ஸ்படிக லிங்கங்கள் தரிசித்துவிட்டு,நேரமாகிவிட்டபடியால் திருப்புல்லாணி செல்ல இயலவில்லை,இராமேஸ்வரம் தங்கினோம்,
மாலை இராமநாதஸ் வாமி தரிசனம்,பர்வத வர்த்தனி அம்மன் தரிசனம்.
கெடுபிடிகள் மிக மிக அதிகம்,கேட்டால் பக்கத்தில் இலங்கை இருக்கிறதாம்,
21,1௦, காலை 9 முதல் 12,3௦ வரை சிரார்த்தம்,நல்ல சாஸ்திரிகள் நல்ல மாமி
சமையல், பிண்டங்களை ஒரு பையில் எடுத்துக் கொண்டு,பாம்பன் சங்கமத்தில் கரைக்கச் சென்றோம்.அக்னி தீர்த்தம் மஹா கெடுபிடி,
அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாத சூழலில் கடலில் பிண்டன்களைக் கரைத்து விட்டுப் படகில் ஒரு சுற்று பயணித்தோம்,
வழியில் கருப்பட்டி வாங்கினோம்; தேவிபட்டினம் கடற்கரைச்சாலை வழியாக ருணபலி முருகன் கோயில் கொண்டுள்ள பெருவயல் கிராமம் சென்று முருகனுக்கு நானே தீபாராதனை காட்டினேன்.இடும்பனையும் தரிசித்தோம். கொட்டும் மழையில் குன்றக்குடி நோக்கிப் பயணமானோம்.மழையில் மலையேறி இடும்பனை வணங்கியபடி மேலே சென்று அழகிய ஆறுமுகனைத் தரிசித்தோம்,பிள்ளையார் பட்டி நோக்கிப் பயணித்தோம்,மழை விட்டபாடில்லை,கோயில் வாயிலில் நின்று நனைந்த படியே உள்ளே சென்று விநாயகப் பெருமானைத் தரிசித்தோம்,அதே மழையில் புதுக்கோட்டை நோக்கிப் பயணமானோம்.
22,1௦, புதுக்கோட்டை ஆபத்சஹாயே ச்வரர்,பாண்டுரங்கர் தரிசித்தோம்.தெப்பக்குள வெள்ளம் சிவன்கோயில் முழுவதும்வேள்ளக்காடாக்கியது.திருக் கோகர்ணம் இறைவனைத் தரிசித்தோம்.குடை வரைக் கோயில்;பழமை,பளிச்சிட்டது,அழகிய சிற்பங்களைக் கண்டோம்,
குடுமியான்மலை தனது பக்தனைப் பூஜை செய்யும் சிவாசார்யாரைக் காக்கத் தன் தலயிலே குடுமியை,முடியை வளரவிட்ட சிவபெருமான் வீற்றிருக்கும் மலையைக் கண்டு வணங்கினோம்,அங்கு அமைந்துள்ள அழகிய வேலைப்பாடுகள் மிக்க குகைக்கோயிலைக் கண்டோம்,அங்குள்ள துவாரப்பா லகர்கள் சிரிப்பு தவழும் புன்னகை முகத்துடன் விளங்கும் அதிசயச்சிற்பம் கண்டு போற்றினோம்.
குமரன்மலை,,,,,, மதியம் நடை சார்த்துவதற்குள் செல்ல விரைவாய் விரைந்தோம்,குமரன் மலைக் குமரன் அழகே உருவாய் ஆசிகள் வழங்கினார்,சுனைக்குளத்தில் தாமரைகள் மலர்ந்திருந்தன,
நார்த்தா மலை நகரத்தார் மலை என்பது நாளடைவில் நார்த்தா மலையாக மருவியது,தொன்மை மிக்க குடைவரைக் கோயில்;சிவபெருமான் காண
மலையின் மீது தட்டுத்தடுமாறி நடந்தோம்,படிகள் இல்லை;சொரசொரப்பான கற்கள் மேடும் பள்ளமும்,ஆர்வக்கோ ளா ற்றின்
காரணமாகவும்,பிரேமாவின் அதீத தைர்யத்தினாலும் ஒருமணி நேரம் சாகசப் பயணம் மேற்கொண்டு அழகிய சிதைந்த கோயில்கள்;சிற்பங்கள்,போன்றவற்றைக் கண்டோம்,சுனைகள்;சுனையுள் ஒளிந்து காட்சிதரும் "லிங்கேஸ்வரர்"இனிய சுனை நீர் இவைகளைக்காண்பதற்கு ரம்மியமான சூழலை வானம் அளித்தது,வெயில் இல்லை;குளிர்ந்த காற்று;களைப்பே தெரியவில்லை;நன்றி இறைவனுக்கு,
வயலூர்,,,,, அருள்முருகன் குடிகொண்ட வயலூர் சென்றோம்,முருகனைக் கண்ணாரக் கண்டு போற்றினோ,
செட்டிய குளம்,,,,, மாலை 6 மணி, 7 க்குள் பெரம்பலூர் செல்ல விரைந்தோம்
நடை சாற்றத்தொடங்கும் , நேரம் உள்ளே சென்று பாலமுருகனைப் பணிந்தோம்,மூன்று நாட்கள் முத்தான நாட்கள் ஆக மனத்தில் நிற்கிறது,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக