சிங்க முகனும் சூரனும்
1,அங்கணுழை சிங்கமுகன் பங்கமிலாத் தங்கவுரைச்
செங்கடவுள் பங்கயச்சீர் போற்று,
2, எட்டியன்ன இந்தவுரை எட்டியேநில் என்றண்ணன்
கொட்டியதீ கொட்டு முரசு.
3, உதயகிரி மாயபாசம் உள்ளமர்வாய்? உந்தன்
இதயம்தான் எந்தனம்பு ஏற்பு.
4, தேவபூதர் உண்டொழித்து வந்தவனை நெற்றிமார்பு
மேவவரும் தேவகுலம் தான்,
5, உதயகிரி மீட்டுவந்த வேலன்றி வேறு?
புதுக்குலிசம் போக்கியதா வி.
6, அண்டநிறை கண்டுலகு விண்டதுயர் வீண்படைகள்
புண்டரிக த் தீப்பார்வை மாள்,
7, பானுகம்பர் சங்கூத நானழிப்பேன் தேவசேனை
வான்செல்லத் தான்சென்றும் போர்,
8, அண்டகோளை ஐந்துபடை ; சீதமாய மந்திரம்
உண்டுருத்ர பாசுபதம் கா,
9, தேர்சிங்கம் தானழியப் புள்ளாகி மாமயிலால்
வேரழியப் பல்லுருவம் தேர்,
1௦, பேரொளியாய்த் தன்னுருவம் பேதைக்குக் காட்டியகால்
சீர்பெற்றான் சிந்தனையில் சேர்,
பொருள்
1, சூரன் அழைத்ததும் ஓடோடி வந்த சிங்கமுகன் அண்ணனுக்கு அறிவுரை வழங்கினான், ஒரு தூதுவனாலேயே நம் நாடு எரிந்தது,
தாரகனை வீழ்த்திய வியனையும் கண்டோம், சிவன் கொடுத்த
வரத்தின்படி நூறு யுகங்கள் வாழ்ந்து விட்டோம், தேவர்களைச் சிறை
வைத்தது ,வேதநெறி நடவாதது போன்றவையால் துன்புற்ற தேவர்களின்
துன்பம் போக்க, அந்த சிவபிரானின் நெற்றிப்பொறி யிலிருந்து தோன்றியவன் முருகன், பரம்பொருளான அவனைப் பணிந்து, தேவர்களைச் சிறையிலிருந்து விடுதலே நாம் ஆற்ற வேண்டிய செயல்,
உடனே தேவர்களை விடுவியுங்கள்,முருகனைப் போற்றுங்கள் " என்றெல்லாம் நீண்ட அறிவுரை வழங்கினான்.
2, தம்பியின் அறிவுரை சூரனுக்கு எட்டிக்காய் போலக் கசந்தது; சினம்
பற்றிக்கொண்டு வந்தது;எனக்கு முன் மாற்றானைப் புகழ்ந்து பேசிய
தம்பி! நீ இக்கணமே வெளியே போ! எனக்கத்தினான், அண்ணன் மாற
மாட்டான், நாம் அண்ணன் வழிதான் நடக்கவேண்டும்,என நினைந்து
நால்வகைப் படை சூழ அண்ணன் ஆசியுடன் போர்க்களம் புகுந்தான்,
3, ஆரவாரத்துடன் போர்க்களத்து நுழைந்தவன் பூதர் பலரை நசுக்கினான்; சிலரைத் தூக்கி எறிந்தான்;சிலரை அப்படியே உணவாக்
உண்டான்,பூதப்படை அஞ்சி நடுங்கியது, அதைப் பார்த்த வீரவாகு
அவன் முன் வந்து போரிட்டார்,அவனது தேரை அழித்தார்,வில்லை ஒடித்தார்; சினமுற்ற சிங்கமுகன் அவனது தாய் தந்த மாயாபாசத்தை
விட்டான், அது வீரவாகு உள்ளிட்டோரை அப்படியே சுருட்டி எடுத்துக்
கொண்டுபோய் உதயகிரி என்னும் மலையிலே தூக்கிப் போட்டது;
அவர்கள் மய ங்கிக் கிடந்தனர், மகிழ்ந்த சிங்கமுகன் எங்கே? சிவகுமாரன் எங்கே? ஒடி ஒளிந்து கொண்டானா? சிவகுமரா! வெளியே வா, உன்னைக்கொன்று போட,உன்மார்பிலே பாய்ந்து உன் உயிரை எடுக்க என் வில் என் அம்பு காத்திருக்கிறது" என்று கத்தினான்.
4, சிவகுமரா! நமக்குள் எந்தப்பகையும் இல்லை;எதற்காக நீ போர்க்களம் வந்துள்ளாய்?என்று வினாவிய சிங்கமுகனிடம்,
எளியவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவுமே நான் வந்துள்ளேன் "
என்றதும், இருவருக்கும் போர் துவங்கியது, சிங்க முகனது படைகளைத்
தடுத்து அவைகளை அழித்த முருகன்,அவனது நெற்றியிலே ஒரு அம்பினை எய்தார், நெற்றியில் வழி ஏற்பட்டுக் குருதி கொட்டத் தொடங்கியது;அதன் வழியே ஆயிரக்கணக்கான பூதர்கள் வெளி வந்து
குதித்தனர்; மற்றொரு அம்பை அவன் மார்பிலே துளை ஏற்படுமாறு விட்டார்.குருதி வெள்ள அருவியில் பூதர்கள் குதித்து வெளியேறினர்,
மற்றொரு பாணத்தால் நெற்றியைத் துளைத்தார், அவன் மூர்ச்சித்தான்
ஒரு அம்பை எய்தார்; அது உதயகிரியில் உள்ளவர்களின் மயக்கம் போக்கி அவரருகே விட்டது,
5, உதயகிரி சென்று வீரவாகு முதலியோரை மீட்டு வந்தது வேல் படை,
என்பதையறிந்த சிங்கமுகன் முருகனை நோக்கி ஏளனமாகக் கேட்டான்," முருகா! வேலைத்தவிர வேறெந்தப் படையும் உன்னிடம்
கிடையாதா? இல்ல;பயன்படுத்த அச்சமா? என்றவனின் மார்பிலே முருகனின் குலிசப்படை பாய்ந்து,குருதியைக் குடித்து அவன் உயிரை எடுத்தது,
6, தம்பி சிங்கமுகன் இறந்துபட்டான்; என்ற செய்தி அறிந்த சூரன், தானே போராற்றப் புறப்பட்டான், தனது ஆளுகைக்கு உட்பட்ட ஆயிரத்தெட்டு அண்டங்களில் குவிந்திருந்த கோடிக்கணக்கான
அரக்கர் படைகளைப் போர்க்களம் நோக்கி வர ஆணையிட்டான்;
போர்க்களம் நோக்கித் திரண்டெழுந்த அரக்கர் படைகள் வழியெல்லாம்
பேரழிவை உண்டாக்கின;கோள்கள் நிலை குலைந்தன; கின்னர,கிம்புருஷர்கள் மிதிபட்டு மாய்ந்தனர்; கடல் வற்றியது; ஆங்காங்கு
நீரும் நிலனும் தீப்பற்றி எரிந்தன; மூவேழ் உலகமும் நிலை மாறித்
துன்புற்றது; விண்ணவர்களின் அவலக்குரல் எங்கெங்கும் ஒலித்தன;
திருமாலும்,பிரமனும்,இந்திரனும் அஞ்சி நடுங்கியபடி ஓடோடி வந்து
முருகனை வணங்கிச் சூரன் போருக்குப் புறப்பட்டதையும், அவனது
அண்ட கோளப் படையினர் வருகையால் தோன்றியுள்ள அழிவையும்
கூறினார்; போருக்குப் புறப்பட்ட முருகன்,தனது தாமாரைக் கண்ணிலே
நெருப்பன்ன பார்வையை அப்படையினர் மீது சிந்தினான்; அவைகள்
பொடியாகிப் புழுதியாய்க் காற்றோடு கலந்தன; மிகுந்த சினத்தோடு
போர்க்களம் வந்த சூரன் பூதப்படைகளை அழித்துக் குவித்தான்;வீரபாகு உள்ளிட்டோரால் சூரனை எதிர்க்க முடிய வில்லை;இந்நிலையில் முருகனே
சூரனோடு போர் புரிய வந்தான்;நீண்ட பொழுது இருவரும் மாறி மாறி
அம்புகளைப் போழிந்தவந்த நிலையில் சூரனது தேரையும்,வில்லையும்
அழித்த முருகன் அவனது கரங்களை வெட்டி வீழ்த்தினார்;
7, அந்த வெற்றியைக் கண்ட பூதத் தலைவர் பானுகம்பர் பாஞ்ச ஜன்யம்"
என்னும் தனது சங்கை எடுத்து ஊதினார்; அவரைப் போலவே விண்ணவர்
பலரும் ஆர்ப்பரித்தபடிச் சங்கு ஊதினார்கள்; அவ்வொலி கேட்டு வெகுண்ட
சூரன்,"இந்தத் தேவப்பதர்களை உடனே அழிப்பேன்;என்றபடித் தனது தேரை வானில் செல்லப் பணித்தான்;தேவர்கள் அஞ்சி நடுங்கினர்;
அஞ்சேல் " என்று அபயம் கொடுத்த முருகன் தானும் வான் நோக்கிப்
பறந்தான்,அங்கே இருவருக்கும் பெரும் போர் நடந்தது,
8, தேரை இழந்து,வில்லையும் இழந்த சூரன்,மாயப்போர் புரியத் தொடங்கினான்.நிலத்திலும்,கடலிலும், வானிலும், மாறி,மாறித் தோன்றிய
சூரன் தனது "இந்திர ஞாலத் தேரில் அமர்ந்து அண்ட கோளத்தின் வாயிலை
அடைந்தான்,அடைபட்டுக் கிடந்த அதன் வாயிலைத் திறந்து விட்டான்,
அங்கு குவிந்திருந்த சேனைகள் களம் நோக்கி விரைந்தன; அவற்றை
முருகன் தனது சிரிப்பால் ,தீப்பார்வையால், "ஊம்" என்னும் ஒலிக்குரிப்பால் அழித்தார்; மீண்டும் மீண்டும் வளர்ந்து கொண்டே இருந்த அசுர சேனைகளைத் தனது கைகளில் நிலைத்திருக்கும் சூலம்,மழு,தண்டு, எழு,
சக்கரம் என்னும் ஐந்து படைகளால் அழித்தார்; பல்வேறு உருவங்களைப்
பெற்ற ஐந்து படைகளும்,ஆயிரத்தேழு அண்டங்களில் உள்ள அனைத்துச்
சேனைகளையும் அழித்துக் குவித்தன, தனித்து விடப்பட்ட சூரன், சிவபெருமானை வணங்கி,அவர் அளித்த சக்கரப்படையை முருகன் மீது
ஏவினான்,தந்தையை வணங்கியபடி அச்சக்கரப் படையைத் தனது
கரத்தால் வாங்கினார் முருகன், சூரன் மாயையால் பல்வேறு உருவங்களை எடுத்துப் போர் புரியத் தொடங்கினான்; முருகனோ தனது
ஞானப் படையால் அவனது மாய உருவங்களை அழித்தார், சூரன் தனது
தாயாகிய மாயையை வணங்கி, "இறந்தோர் மீண்டேழும் வழிமுறையை
அருளுமாறு வேண்டினான், பெரும்புறக் கடலருகே அமைந்துள்ள "சீத
மலையைக் " கொணர்ந்தால் இறந்தவர் எல்லோரும் எழுவர்"என்னும் வழியை அருளினாள் மாயை, தனது இந்திரஞாலத் தேரை அனுப்பி, அம்
மலையைப் பெயர்த்து வருமாறு சூரன்,பணித்தான்;அம்மலை வந்ததும்
இறந்துபட்ட சிங்கமுகன், பானுகோபன் உள்ளிட்ட மூவாயிரவரும் உயிர்
பெற்று எழுந்தனர்: விண்ணவர் கலங்கவும், சூரன் மகிழவும் நடந்த நிகழ்வைக் கண்ட முருகன்,தனது "பாசுபதம்" என்னும் அஸ்திர த்தால்
எழுந்த அனைவரையும் ஒரு நொடிப்பொழுதில் அழித்தார்,
9, கடுமையாகப் போராற்றிய சூரன் ,தேரை இழந்தான்;வில்லை இழந்தான்; மாயங்கள் நிறைந்த சிங்கத்தையும் இழந்தான்; தனியே
நின்ற சூரன் தனது மாயத்தால் "சக்கரவாகம்" என்னும் பார்வையாய் வடிவெடுத்தான்;தனது மூக்காலும், கால் நகங்களாலும் தேவர்களையும்,
பூதப்படை களையும் அழித்துத் துன்புறுத்தினான்;வானும் கடலும்,சுற்றிச்சுற்றி வந்தான்;முருகனும் இந்திரனாகிய மயில் மீது ஏறி
அமர்ந்து சூரன் போகுமிடங்கள் எல்லாம் தானும் சென்று போரிட்டு,
அப்பறவையின் மூக்கை வெட்டினான்;சிறகை வெட்டினான்;வலியிழந்த
அப்பறவையை வெட்டி வீழ்த்தினார், சூரனோ மேலும் மேலும் பல்வேறு
உருவங்களை எடுத்தபடி நான்கு நாட்கள் முருகனோடு போர் புரிந்தான்,
மும்மூர்த்திகளாய், தேவர்களாய்,அரக்கர்களாய், காற்றாய், நெருப்பாய்,
மழையாய், மலையாய்க் கடலாய், பேயாய்,த் தாரகனாய்ச்சிங்கமுகனாய்
இன்னும் பற்பல மாய உருவெடுத்த சூரன்,அத்தனை உருவங்களோடு
முருகனைச் சூழந்துகொண்டு நின்றான், முருகனோ ஆயிரங்கோடி அப்புகளை எய்து,அவனது மாய உருவைஎல்லாம் அழித்தார்,
1௦, பேதையாகிய அவன் ஞானம் பெற அருள் பொழியும் விதமாக அவனுக்குத் தனது விஸ்வ ரூபத்தைக் காட்டினார்;பேருரு கண்ட சூரன் மனத்திலும் பண்பும்,பக்தியும் சுரந்தது,
விளக்கம்
உழை,,,,,,,,,,,,,,,,,,,,,ஏழாம் வேற்றுமை உருபு
இலாத் ,,,,,,,,,,,,,,,,,,,,இல்லா" என்பதன் இடைக்குறை
பங்கயச்சீர்,,,,,,,,,,,உவமைத்தொகை
புதுக்குலிசம் ,,,,,,,,பண்புத்தொகை
தேர்,சிங்கம்,,,,,,,,,,,உம்மைத்தொகை
மாமயில்,,,,,,,,,,,,,,,,,,உரிச்சொற்றொடர் ,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக