செவ்வாய், 17 செப்டம்பர், 2019

                                  சூரனும், பானுகோபனும்

1,சிவகுமரா! சிந்தனை   இல்லாது மூவர்
   அவலநிலை  கொள்ளாத  கூற்று!

2,  வரபலம்  போக்கச்    சுரத்துயர்    போக்கக்
      கரபலம்    காட்டிட    மாறு.

3, சூரன்   எறிந்தநல்   திவ்யப்  படையெல்லாம்
    வீரன்    கரத்தில்   மலர்,

4, சிவப்படை  வீசினான்;  செந்தா   மரைபோல்
     சிவமெனச்  சேர்ந்தது   நாண்,

5,  மறைந்தனன்    மாயையால் ;  மாப்புதல்வன்    வந்து
     குறைபொறு;   வெற்றியே   காண்,

6,  மாயை    தந்தருள்   மாயப்    படையுடன்
     சேயவன்  தூதும்    மயக்கு.

7.  வேற்படை   காத்திட    வெம்மன    வீரபாகு
      காற்றக்னி   தீய்க்க   நகர்.

8,   இரணியன்   நீரினுள்   அக்னிமுகன்   மாள.
      உரமுடைமூ    வாயிரவர்   வேகு,

9,  தருமகோபன்   தான்மறையப்    புண்டரீகம்   இடத்தில்;
     அரும்பானு    ஆன்றவுரை   நீங்கு,

1௦, கடும்போர்    நெடும்போர்   நில்லாத    மாயை
      விடுத்தவாள்   வீழ்ந்தபானு   பா  கு.
   

                                            பொருள்

1,போர்க்களத்தில்   போர்ப்படைத் தலைவனாய்த்   தன்முன்  வந்துநிற்கும்
முருகனைக் கண்ட   சூரன்," சிவகுமரா!  மூவரும்  என்னோடு   போர்   தொடுக்காது  அமைதியாய்   இருக்க, நீ மட்டும்  இந்நிலையை   ஏன் கொண்டாய் ?துன்பமும்  துயரும்  பட்டு, இறக்க  முடிவு   செய்து விட்டாயா!
என்று  கூறி, ஏளனமாகச்  சிரித்தான்,

2,  சூரனே!  வரங்கள் பல  பெற்றதால்  உன்னை யாரும்   வெல்லமாட்டார்கள்  என்ற உனது  எண்ணத்தை   அடியோடு   மாற்றவும்,உன்னால்    சிறைபிடிக்கப்பட்டுத் துன்பத்தி ல்   உழலும்  தேவர்களின்  துயரைப் போக்கவும், எமது    வீரத்தன்மையை   உணர்ந்து  நீ   நல்வழியில்   மாறவுமே
உன்னோடு   போர் புரிய வந்துள்ளேன்"  என்றார்   முருகன்,

3,  ஆணவம்   சற்றும் குறையாத   சூரனும்,  அழகே  உருவான   முருகனும்
கடுமையாகப்   போரிட்டனர்,பல்வேறு   படைகளை  வீசினான்   சூரன்,
அவைகளைத்  தன்வில்லாலேயே தடுத்து   அழித்தார்,பிரும்மப்படை
விஷ்ணுப்படை, அக்நிப்படை   போன்ற  தெய்வீகப்  படைகள்   எல்லாம்
அவரை   வணங்கிவிட்டு   விலகின;அவருடைய   கரத்தில்  மலராக விழுந்தன;


4,   வியந்துபோன   சூரன்  யாராலும்   வெல்ல   இயலாத   "சிவப்படையை"
எய்தான் ,  தன்னை  நோக்கி  வரும்   அப்படையைப்   பார்த்த   முருகன் "இது
என் தந்தையின்  படை   ஆகுமே" என நினைந்து  கையை   நீட்டினான்,
அவரது   கரத்தை   சிவன் கரம்   என உணர்ந்து  மலர்  மலைபோல்  அவர்
கையில் விழுந்தது,

5, கூட வந்தவர்கள்    மாண்டார்கள்; சைனியம்   முழுவதும்   எறிந்து  சாம்பல்
ஆயிற்று;தேர்    அழிந்தது;மாமுடி    மண்ணில்   விழுந்தது;தனியனாய்   வெறும் மண்  தரையில் நின்ற   சூரன்  தனது   மாயா   சக்தியால்  அவ்விடம்
விட்டகன்றோடினான்,     நொந்து போயிருந்த    தந்தையைத்    தேற்ற  மகன்
பானுகோபன்   ஓடோடி   வந்தான்;தந்தையே!   நேற்றைய   போரில்   திவ்யப்
படைகளை  எடுத்துச்   செல்வதற்காகவே   வந்தேன்;  அதற்குள்  தாங்கள்
போர்க்களம்   சென்று விட்டீர்கள்!  இன்றுபோய்   தேவப்படைகளை   அழித்து,
அந்தத்   தூதனையும்   குழந்தை   முருகனையும்   அழிப்பேன்" வெற்றி   நமது
பக்கமே,   கலங்காதீர்கள்,என்று   கூறித்  தேற்றினான்,

6,  புறப்பட்ட   மகனிடம்,  "பானுகோபா!  அந்த  முருகன்   அளவிலாத   திறன்
கொண்டவன்; அவனை  நான் பார்த்துக்   கொள்கிறேன்,  நீ அந்தத்   தூதனை
மட்டும் சிறைப்பிடித்து    வா   போதும்'   என்று தந்தை சொன்ன   சொற்களை
மனத்தில்   நினைத்தபடியே   புறப்பட்ட   பானுகோபன்   மாயை   என்னும் தன்   பாட்டியை நினைத்தான்,  வந்தவள்   பேரன்   மனம்   மகிழுமாறு
மாயா மந்திரத்தை அருளினாள்,  அப்படையுடன்   போர்க்களம்   செல்லும்
வழியில்   ஒற்றர்   வழியே   வீரபாகுவை   இன்று  பானுகோபன்   கொல்வான்
என்ற செய்தியை   அனுப்பினான், வீரபாகு   சினத்தோடு   போர்க்களம்
வந்தான்,இருவரும்    கடும்போர்   புரிந்தனர்;எல்லாத்    தெய்வீகப்   படைகளையம்   இழந்த   பானுகோபன் பாட்டி   அளித்த   மாயா   மந்திரத்தை   உச்சரித்தான்,தோன்றிய   மாயக்கணைக்கு  ஆணை இட்டான்,
நீ   யாரும்   அறியாமல் சென்று,வீரபாகுவையும், அவனது   படை வீரர்களையும்  மயக்கி,உணர்வற்ற   அவர்களை   ஏழு  கடல்  தாண்டி
நாற்கடல்   கரையிலே   வீசு; அவர்களை   யாரும்   அண்டாமல்   காவல்
காத்து வா" என்ரான், அதுவும்   அவன்  இட்ட   பணியைத்   தலைமேற்கொண்டு  அனைவரையும்  மயக்கி   வீசி   எரிந்தது,


7,  நாரதர்   வாயிலாகச்   செய்தி   அறிந்த   மாமுருகன்  தனது    வேற்படையை
அனுப்பி,வீரபாகு   முதலியோரின்   மயக்கம்   போக்கி,உணர்வு   கூட்டி 
அழைத்து வர  ஆணையிட்டார்,மாயையால்   தன்னை   மயக்கிய   பானுகோபன்  மீது   கொண்ட  அளவிறந்த   சினத்தால்  வீரவாகு   காற்று,அக்னிக் கணைகளை    ஏவிச்    சூரன்  நகரை எரியூட்டி   அழித்தார்,


8,  தேவதச்சனை   அழைத்துத்   தன்  நகரை முன்போலாக்கிய   சூரனை  அவன் மகன்  இரணியன்   சந்தித்தான்;  தேவர்களை   விடுவிக்க   வேண்டுகோள்  விடுத்தான்; சினந்த   தந்தையின்   மனத்தை   அறிந்து
அவர்  வழியே  செல்ல முற்பட்டுப்   போர்க்களம்  புகுந்தான், நீலர்   என்ற
பூதத்லைவர்   எதிர்த்தார்;  மாயவழியில்   போராற்றிய  இரணியனை   வீரபாகு எதிர்கொண்டார்.அவனது   மாயைகளை   ஞான  அம்பு  எய்தி
மாற்றினார், இனி இங்கிருந்தால்   உயிர்   போய்விடும், எல்லோரும்   இப்போரில்   மடிவர்; தந்தைக்கு    ஆற்றவேண்டிய   ஈமச்சடங்குகளை
நிறைவேற்ற   மகன்கள்   யாரும்   இருக்க மாட்டார்கள், நானாவது   இருக்க்ச்வேண்டும்  என்றெண்ணி  மாயையால்   கடலுள்   மூழ்கி  அங்கு மீனின்  உருவத்தில்  உலவினான்.
அக்நிமுகன்   மாள ,,,,,,,,, 
 சூரனுடைய   மற்றொரு   மகனான   அடுத்துக்  களம்   புகுந்தான்;அவனை   வீரபாகுவின்   தம்பியர்   எழுவரும்   எதிர்த்தனர், கடுமையான   போரிலே
அவர்கள்     மீது   சிவப்படையை   ஏவினான் அக்நிமுகன், அதை   வருனப்படை  எனக்கருதிய   எழுவரும்  அக்நிப்படையைத்  தொடுவதற்குள்
சிவப்படை  அவர்களை   மரணமடையச் செய்தது,அதுகண்டு    தேவப்படையினர்    படும் துன்பத்தைக்   கவனித்த   வீரவாகு 
அக் நிமுகனை   எதிர்த்தார்.அவனை  அழித்தார் வீரவாகு.

         தனது   தம்பியர் எழுவரின்   உயிரைப் பறித்த   யமனைப்  போருக்கு  அழைத்தார்   வீரவாகு, நடுங்கிய   யமன்   எழுவருடைய   உயிரையும்
உடலோடு  சேர்த்து, உயிர்ப்பித்தான்,
         அடுத்து   சூரனின்   மூவாயிரம்   புதல்வர்கள்  போர்க்களம் புகுந்து,
 பூதப்  படையை அழிக்க   முற்பட்டனர், பூதத்   தலைவர்   விஜயர்   என்பவர்
முதிர்த்தார்,  அவர்களது   கை,கால்,தலை   எல்லாம்   வெட்ட வெட்ட  மீண்டும்
உயிர் பெறேழுந்தன, விஜயர்   முருகனை  வேண்டி வைரவப்   படையைப்
பெற்று   மூவாயிரவரையும்   அழித்தார்,


9,  சூரனின்   அமைச்சர்  தருமகோபன்   தன்னுடைய   ஊர்தியான "புண்டரீகம்" என்னும்  யானையோடு   போரிட்ட வந்தான், வீரவாகு   அவனை வாளால்    வெட்டி   வீழ்த்தினார்,அவன்   மாண்டான், அதுகண்டு   புண்டரீகம் 
என்ற   அவனது   வீரவாகுவை   எதிர்த்துப்  போரிட்டது, அதன்   தந்தத்தை ஒரு
கையால்   பற்றிக்கொண்டு,அதன் கன்னக்   கதுப்பில்   ஓங்கி  ஓர்   அறை
விட்டார்  வாகு, தன்னிலை   உணர்ந்த   அவ்யானை  தான்   திசை காக்கும்
யானை  என்றும்,தன்னை  அடிமைப்படுத்திப்   பணிபுரிய   வைத்திருந்தான்
தருமகோபன்  என்றும், வீரப்பாகுவால்    விடுதலை   பெற்ற   நான்   எனது
திசைக்குச்  செல்வேன்" என்றும்  கூறி  வெளியேறியது.
   அமைச்சரை   இழந்து   தவிக்கும்   தந்தையைத்   தேற்ற   வந்த   பானுகோபன்  தேவர்களை   விடுவிப்பதே   நன்மை   பயக்கும் " என்று கூறியதும்,சினந்த   தந்தையின்   அழிவு   காலம்   நெருங்கி விட்டது   என
மனதில் நினைத்து,  அவர் வழியே  நடப்பான், என்று  போர்க்களம்   புகுந்தான்,

1௦,  புதிய   பொலிவோடு   போர்க்களம்  புண்தான்   பானுகோபன்,வீரவாகு   அவனை   எதிர்த்தார், இவ்விருவர்   ஆற்றும்   போர்   போல்  இதுவரை  கண்டதில்லை"  இனியும்  காணப்போவதில்லை"  எனக்கன்டோர்   வியக்கும்படி  இருவரும் தேரிழந்து,வில்லிழந்து போரிட்டனர், பானு கோபன்
வீரவாகுவின்    தோளில்  வாளால் வெட்டினான்; வெகுண்ட   வீரவாகு
பானுகோபனின்    வலக்கரத்தை   வெட்டினார், அவன்   தனது   இடக்கரத்தால்  வாளெடுத்துப்   போர் புரிந்தான், இடக்கரத்தையும்  வெட்டி வீழ்த்தினார்   வாகு,   மாயமந்திரத்தை   அவன்  உச்சரிக்க   எண்ணுகையில்
அவன்   தலையை   வெட்டி   வீழ்த்தினார்.,பானுகோபன்   மாண்டான்,


                                                                   விளக்கம்
கொள்ளாத,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,  எதிர்மறை ப்பெயரெச்சம்
வரபலம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,  மூன்றாம் வேற்றுமை   உருபும் பயனும் உடன்
                                                              தொக்க தொகை
கரபலம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,நான்காம்  வேற்றுமைத் தொகை
செந்தாமரை
கடும்போர் ],,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, பண்புத்  தொகை
மாப்புதல்வன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,  உரிச்சொற்றொடர்
நெடுபோர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக