உ
ஆயிரம் பிறை கண்ட ஆச்சாரிய சீலருக்கு
அன்பு கலந்த வாழ்த்து மடல்
சிவஸ்ரீ . எஸ் . கௌரீச சிவாச்சாரியார்
திருமதி..ஜி .அபயாம்பாள்
நாள். .2.2018
இடம் :
விழா : சதாபிஷேகம்
அளிப்பவர்; சுவாமி.சுப்பிரமணியன்.எம் .ஏ.எம்.எட் .எம் பில்
...................................................................................................................................................................
விநாயகர் காக்க.
ஓமெனும் பிரணவ உட்பொருள் நாயகன்,
ஓதுவார் உறுதுயர் விலக்கிடும் விநாயகன்,
தூமண அருகுடன் தெள்ளிய எருக்குமே,
தன்தலை அளித்தவர் நன்மை அளிப்பவன்,
பாமணப் பாரதம் பைங்கொம்பு ஒடித்தெழுதிப்
பார்புகழ் பெற்றிட்ட கார்கருணைக் கணபதி,
தேமணத் திருப்புகலூர் சரண்ய புரீசன்
திருவடி தொழுபணி கௌரீசன் காக்கவே. 1
சிவபெருமான் காக்க
ஆகம மாகி நின்றே அண்ணிப்பான்
ஆலால மரநிழல் அமர்ந்துள்ள ஆசான்,
நாகமும் நிலவும் நற்கொன்றை சூடியோன்,
நான்மறை போற்றும் தேன்குழலி நற்றவப்
பாகத்தான் , பைந்தமிழ்த் தேவாரப் பண்ணான்,
பாலகஜன், வேல்குகன் பாசத்தான், பரம்பொருள்,
மோகத்தான் கௌரீச முழுப்பணி ஏற்றே,
வாகையாய், வரமாய், வாழ்த்துகவே வாழ்வு. 2
பார்வதி காக்க.
அன்பும், அருளும், அளித்திடும் அன்னை,
அறிவாய், நெறியாய் விளங்கிடும் அன்னை,
பொன்னும், பொருளும், போகமும் தந்தே,
பொன்னார் மேனியன் அகத்தே ஒளிர்பவள்,
விண்ணில் வெண்ணிலா பட்டர் காத்தவள்,
வண்ணமகன் வென்றிட வேலளி நற்றாய்,
மண்ணில் கூறை நாட்டில் தோன்றிய
மறைபணி கௌரீசன் நிறைவாழ்வு காக்கவே. 3
கந்தன்குடி கந்தன் காக்க.
ஆம்பல் அல்லி, அரும்பெரும் தாமரை,
அழகே மலர்ந்த பழங்குடி மூதூர்,
சாம்ப சிவமே சண்முக சிவமாய்,
சாத்திர நாயகச் சண்முகன் திருவூர்:
தேம்பலா வள்ளி, திகழ்குணத் தேவாள்
தேவர் சூழ்ந்து போற்றும் முருகன்:
சாம்ப மூர்த்தி சத்புத்ரன் கௌரீசன்
சகதர்மினி சகிதம் வாழ வாழ்த்துகவே . 4
வாழ்க வாழ்கவே
தோன்றிற் புகழொடு தோன்றிய தோன்றல்
தோன்றிய திருப்புகல் , கூறைத் திருநாடு,
ஆன்றோர் மிருத்யுஞ்சய அத்திம்பேர் பார்வையில்
ஆலயப் பூஜை ஆகம அருமறை
மேன்மேலும் கற்று, மேலை நாட்டிலும்,
மேதகு சிவப்பணி மகிழ்வுடன் ஆற்றி,
அன்பின் இல்லறம் அவயாம் பாள்"எனும்
அறத்துணை கொண்டோய்! அகமெலாம் வாழ்த்துக்கள். 5
ஆயிரம் பிறைதனை ஆன்ம உணர்வுடன்
ஆகமத் திருமுறை ஆன்ற வேதங்கள்
பாயிரம் பாடும் பழந்தமிழ்ப் பாடலுடன்,
பலப்பல பாடிப் பைங்குமரன் தாள்பணிந்து,
தேயாத் திருத்தேர் தோய்ந்த வெள்ளியில்
தீராக் காதலில் படைத்த தீரரே!
வாய்ச்சொல் அமைதி: வடிவாம் அன்புரு:
வாராக் கடுஞ்சொல் வள்ளலே! வாழ்கநீவிர். 6
ஆன்மா உறைவிடம் ஆண்டவன் முருகன்:
ஆலயப் பணிகள் அதுவே முதலிடம்:
தேன்போல் இனிக்கும் திவ்விய அருச்சனை:
தேவாரத் திருமுறை மறுபுறம் ஒளித்திடும்:
ஞானப் பொலிவால் ஞான விளக்கம்:
ஞாலம் பெற்ற ஞாயிற்றின் பேரொளி:
கானக் குறத்தி, கவினுரு தேவசேனா
கல்யாணக் கந்தனைக் கண்முன் நிறுத்தினீர். 7
அல்லும் பகலும் ஆறுமுகச் சிந்தனை:
அளிப்பான் அவனே ஆறுதலை அன்பை.
இல்லறம் சிறக்க இனிய குழந்தைகள்,
இல்லாள் அன்பு, பரிவும் பெற்றீர்.
தொல்லறம் தூய்மை தொண்டு தவநெறி
தொன்மை நிலையிலும் தொடர்ந்திடும் வாழ்க்கை.
நல்லறம் கொண்டீர்! நன்னூறு, முன்னூறு
நல்லாண்டு வாழ்க. நலமுடன் வாழ்கவே. 8
(வேறு)
சிவகுகப்புகழ் தவநிலைச்செயல் அவமறுபணி உளத்தேக,
நவமணியணி குவலயத்தலை பவகுகச்சிவன் பரிந்தாள,
அவனிபுகழில் நவநிதிமகள் குற மகளுடன் அருள்காட்ட,
அவனிதனில் அருள்நிதிசுகம் அடைந்துநலமே வாழியவே. 9
அணிவிழாஇது, மணிவிழாஇது நனிவிழாஇது சிறக்கவே .
தனிவிழாஇது தலைவிழாஇது தனிப்புகழ்விழா சிறக்கவே .
முனியெனவுயர் முதியவர்திறன் முகைமலரொடு சிறக்கவே.
கனிமலர்மணம் கவிதருகுணம் கடவுளருளில் சிறக்கவே .
ஆயிரம் பிறை கண்ட ஆச்சாரிய சீலருக்கு
அன்பு கலந்த வாழ்த்து மடல்
சிவஸ்ரீ . எஸ் . கௌரீச சிவாச்சாரியார்
திருமதி..ஜி .அபயாம்பாள்
நாள். .2.2018
இடம் :
விழா : சதாபிஷேகம்
அளிப்பவர்; சுவாமி.சுப்பிரமணியன்.எம் .ஏ.எம்.எட் .எம் பில்
...................................................................................................................................................................
விநாயகர் காக்க.
ஓமெனும் பிரணவ உட்பொருள் நாயகன்,
ஓதுவார் உறுதுயர் விலக்கிடும் விநாயகன்,
தூமண அருகுடன் தெள்ளிய எருக்குமே,
தன்தலை அளித்தவர் நன்மை அளிப்பவன்,
பாமணப் பாரதம் பைங்கொம்பு ஒடித்தெழுதிப்
பார்புகழ் பெற்றிட்ட கார்கருணைக் கணபதி,
தேமணத் திருப்புகலூர் சரண்ய புரீசன்
திருவடி தொழுபணி கௌரீசன் காக்கவே. 1
சிவபெருமான் காக்க
ஆகம மாகி நின்றே அண்ணிப்பான்
ஆலால மரநிழல் அமர்ந்துள்ள ஆசான்,
நாகமும் நிலவும் நற்கொன்றை சூடியோன்,
நான்மறை போற்றும் தேன்குழலி நற்றவப்
பாகத்தான் , பைந்தமிழ்த் தேவாரப் பண்ணான்,
பாலகஜன், வேல்குகன் பாசத்தான், பரம்பொருள்,
மோகத்தான் கௌரீச முழுப்பணி ஏற்றே,
வாகையாய், வரமாய், வாழ்த்துகவே வாழ்வு. 2
பார்வதி காக்க.
அன்பும், அருளும், அளித்திடும் அன்னை,
அறிவாய், நெறியாய் விளங்கிடும் அன்னை,
பொன்னும், பொருளும், போகமும் தந்தே,
பொன்னார் மேனியன் அகத்தே ஒளிர்பவள்,
விண்ணில் வெண்ணிலா பட்டர் காத்தவள்,
வண்ணமகன் வென்றிட வேலளி நற்றாய்,
மண்ணில் கூறை நாட்டில் தோன்றிய
மறைபணி கௌரீசன் நிறைவாழ்வு காக்கவே. 3
கந்தன்குடி கந்தன் காக்க.
ஆம்பல் அல்லி, அரும்பெரும் தாமரை,
அழகே மலர்ந்த பழங்குடி மூதூர்,
சாம்ப சிவமே சண்முக சிவமாய்,
சாத்திர நாயகச் சண்முகன் திருவூர்:
தேம்பலா வள்ளி, திகழ்குணத் தேவாள்
தேவர் சூழ்ந்து போற்றும் முருகன்:
சாம்ப மூர்த்தி சத்புத்ரன் கௌரீசன்
சகதர்மினி சகிதம் வாழ வாழ்த்துகவே . 4
வாழ்க வாழ்கவே
தோன்றிற் புகழொடு தோன்றிய தோன்றல்
தோன்றிய திருப்புகல் , கூறைத் திருநாடு,
ஆன்றோர் மிருத்யுஞ்சய அத்திம்பேர் பார்வையில்
ஆலயப் பூஜை ஆகம அருமறை
மேன்மேலும் கற்று, மேலை நாட்டிலும்,
மேதகு சிவப்பணி மகிழ்வுடன் ஆற்றி,
அன்பின் இல்லறம் அவயாம் பாள்"எனும்
அறத்துணை கொண்டோய்! அகமெலாம் வாழ்த்துக்கள். 5
ஆயிரம் பிறைதனை ஆன்ம உணர்வுடன்
ஆகமத் திருமுறை ஆன்ற வேதங்கள்
பாயிரம் பாடும் பழந்தமிழ்ப் பாடலுடன்,
பலப்பல பாடிப் பைங்குமரன் தாள்பணிந்து,
தேயாத் திருத்தேர் தோய்ந்த வெள்ளியில்
தீராக் காதலில் படைத்த தீரரே!
வாய்ச்சொல் அமைதி: வடிவாம் அன்புரு:
வாராக் கடுஞ்சொல் வள்ளலே! வாழ்கநீவிர். 6
ஆன்மா உறைவிடம் ஆண்டவன் முருகன்:
ஆலயப் பணிகள் அதுவே முதலிடம்:
தேன்போல் இனிக்கும் திவ்விய அருச்சனை:
தேவாரத் திருமுறை மறுபுறம் ஒளித்திடும்:
ஞானப் பொலிவால் ஞான விளக்கம்:
ஞாலம் பெற்ற ஞாயிற்றின் பேரொளி:
கானக் குறத்தி, கவினுரு தேவசேனா
கல்யாணக் கந்தனைக் கண்முன் நிறுத்தினீர். 7
அல்லும் பகலும் ஆறுமுகச் சிந்தனை:
அளிப்பான் அவனே ஆறுதலை அன்பை.
இல்லறம் சிறக்க இனிய குழந்தைகள்,
இல்லாள் அன்பு, பரிவும் பெற்றீர்.
தொல்லறம் தூய்மை தொண்டு தவநெறி
தொன்மை நிலையிலும் தொடர்ந்திடும் வாழ்க்கை.
நல்லறம் கொண்டீர்! நன்னூறு, முன்னூறு
நல்லாண்டு வாழ்க. நலமுடன் வாழ்கவே. 8
(வேறு)
சிவகுகப்புகழ் தவநிலைச்செயல் அவமறுபணி உளத்தேக,
நவமணியணி குவலயத்தலை பவகுகச்சிவன் பரிந்தாள,
அவனிபுகழில் நவநிதிமகள் குற மகளுடன் அருள்காட்ட,
அவனிதனில் அருள்நிதிசுகம் அடைந்துநலமே வாழியவே. 9
அணிவிழாஇது, மணிவிழாஇது நனிவிழாஇது சிறக்கவே .
தனிவிழாஇது தலைவிழாஇது தனிப்புகழ்விழா சிறக்கவே .
முனியெனவுயர் முதியவர்திறன் முகைமலரொடு சிறக்கவே.
கனிமலர்மணம் கவிதருகுணம் கடவுளருளில் சிறக்கவே .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக