அவதாரம்
மணநாள் குணமாம்: மனத்துயர் மாற்றம்
கணநாதன் கண்கருணை காண்.
மன்மதன் காற்று மகேசப் பதியடையா:
பொன்னவன் போற்றல் முறை .
போற்றல் உணர்ந்தவன் நெற்றிப் பொறியொளி
ஆற்றல் உணர்ந்திட அஞ்சு..
அஞ்சிய அக்னிவாயு அஞ்செழுத்து ஆற்றல்
செஞ்சடைக் கங்கையைச் சேர் .
பொய்கைச் சரவணம் பெற்றது பொன்பொறி:
பொய்கை மலர்ந்தது பூ.
ஆறாய் அறமாய் அழகனவன் ஏற்றிடப்
பேறான கார்த்திகை ஆறு.
தவமகள் தானுணர் தண்பொறி அச்சம்
நவவீரர் உற்பத்தித் துளி.
ஆடிடப் பாடிட ஓடிடத் தேடிடச்
சூடினான் சண்முகன் ஆடல்.
வீரவாகு, கேசரி மார்த்தாண்ட தீரர்கள்
சூரநவர் சேர்ந்தார் முருகு.
அறத்தாய் அணைத்திட ஆறும் இணைந்தே
அரனவன் ஆறாய் அமை.
பொருள்
1.இறைவன் மணம் இனிதே நம் துயர் போக்கும்.என்றே இருந்தோம்.
காலம் கனியவில்லை. பூதகணங்களின் தலைவனாம் சிவபெருமானைப்
போற்றுதலே வழி வகுக்கும்" என்றே நான்முகன் ,இந்திரன் முதலிய
தேவர்கள் முடிவு செய்தனர்.
2. மன்மதனை அனுப்பி மனத்துயர் பெற்றோம். இன்று வாயுவை அனுப்பி
அவனாலும் இயலாத நிலை கண்டோம்:நமது துயர் களைய நல்லமகன்
தோன்றிட,இறைவன் போற்றுதலே முறை.அதையே புரிவோம்." என முடிவு செய்த தேவர்கள் சிவபெருமானைத் துதிக்கத் தொடங்கினர்.
விளக்கம்
காற்று= வாயு பகவான்
3. தேவர்களின் குறையை அறிந்து,அவர்களது துயரை, சூரபன்மன்
முதலிய அரக்கர்களை அழிக்கும் வல்லமை கொண்ட மகனின்
தோற்றத்திற்காக,தனது ஐந்து முகத்தோடு அதோமுகம் என்னும் ஆறாவது
முகத்தையும் சேர்த்து,அம்முக நெற்றிக்கண்ணில் இருந்து சுடர்ப்பொறியை
ஏற்படுத்தினான் இறைவன், தேவர்களாலும்,மூவேழ் உலகப் பொருட்களாலும் தங்க இயலாத தீப்பொறி தோன்றிற்று.
4. அஞ்சிய உலகமே அஞ்சி ஊட்ட, அன்னையும் ஓட,இறைவன் அக்கினியை அழைத்தார்.வாயுவைக் கூப்பிட்டார். நீங்கள் இருவரும்
இப்பொறியை ஏந்திக் கங்கையில் விடுங்கள்! உங்களுக்கு இதைத்
தாங்கும் சக்தியை அளித்தோம், என்று இறைவன் சொல்லைத் தலை
மேற்கொண்டு.நடுங்கியபடிக் கங்கையில் சேர்த்தனர். கங்கையோ
தானும் தங்க இயலாது,சரவணப் பொய்கையில் சேர்த்தாள் .
விளக்கம்
அக்கினிவாயு........உம்மைத்தொகை
செஞ்சடை .............பண்புத்தொகை
5. சரவணப் பொய்கை நெற்றிக்கண் பொறியை ஏற்று, அப்பொறியை
அழகிய ஆறுமலர்களிலே ஆறு குழந்தைகளாக மலரவைத்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக