தவநிலை அறிதல்
ஐந்திலே ஐக்கியமாய், ஐந்தின் தவநிலை
ஐந்தும் அடக்கமாம் ஐந்து.
பைந்தளிர் நைந்தவம் ஐந்தெழுத்தான் கண்டிடப்
பைந்தமிழ் மூத்தோன் உரு.
குடைமாலை வற்றுடல் பூணூல் தளர்ந்த
நடைநீற்று நல்முனியாய் நில்.
மூத்தவள் முத்திய முத்தவக் காரணம்
மாத்தவன் மாமணம் மன்.
அறிவொண்ணான் அம்மைதன் ஆற்றுதவ நோக்கம்
அறிந்ததும் அன்னவன் தூற்று .
அடையவே ஆன்ற,தவ ஆசான்கள் அல்லல்:
இடையிலே இந்த,தவம் ஈடு.
பற்றுற்ற பெண்ணணங்கே! பைந்தோல் பட்டாடை ;
உற்றிடம் காடே : உணர்.
உண்ணுணவு பிச்சை:உடலணி ஊமத்தை,
மண்,மான்,தீ மாநாகம் மன்
சினந்து வெகுண்டவள் செல்கெனச் சீறி,
மனைநில்லேன் மாசே இவர்.
காணவே வந்தேனைக் கண்குளிரக் கண்டிடுவாய்:
நாணத்தாள் நன்மங்கலம் நாண்.
பொருள்
1, ஐந்தெழுத்தாம் நமசிவாய என்னும் மந்திரத்தைத் தாரகமாய்க் கொண்டு,
மனமெல்லாம் நிறைத்து,ஐந்து வயதில் ,ஐம்புலன்கள் அடக்கி,மாத்தவம்
புரியத் தொடங்கினாள்,ஐந்தே(நமசிவாயமே ) உருவான மலைமகள்.
2. இளம் வயதிலேயே தவம் மேற்கொண்ட மலைமகளின் தவத்தைக் காண,
முதுமை வாய்ந்த தமிழ்ப்புலவன் போல,மறையோதும் அந்தண வடிவம்
தங்கி,இமயத் தவச்சாலை நோக்கிப் பரமன் பயணித்தார்.
3. மார்பிலே உருத்திராக்க மணிமாலை,தோளிலே பூணூல், கையிலே
மழை,வெய்யில் தாங்கும் பனந்தாள் குடை, மேனியெல்லாம் திருநீறு
பூசிய, வற்றிய உடல்,தளர்ந்த நடையுற்ற முனிவனாய்த் தவச்சாலை முன்
நின்றார் இறைவன்.
4. வரவேற்ற பணிப்பெண்கள் பார்வதி தேவியிடம் அழைத்துச்செல்ல,
இளம்பிராயத்தில் அம்மை ஆற்றும் தவத்தின் நோக்கம் சிவபெருமானை மணம் செய்து கொள்வதே " என்றறிந்தார் இறைவன்.
5. மும்மூர்திகளாலும் , கண்டறிய முடியாத, சிவபெருமான்,அம்மைக்கு
தானே அளித்த அருட்படி,அம்மை தவம் ஆற்றியது கண்டும்,
காணாதவன்போல் அம்மை கருத்தறிந்து, அம்மையையும் தடுத்தாட்
கொள்ள நினைந்து,அம்மை கணவனாக வரித்துள்ள சிவனை,இழிவாகப் பேசத் துவங்குகிறார்.
6. இறைவனாம் சிவபிரானைக் காணவும், அவனருள் பெறவும்,
மாமுனிவர்களாலேயே இயலமுடியாத நிலையில் அல்லல் படும்.
காட்சி பல கண்டபின்னரும்,இந்த இளம் வயதில்,விளையாட்டாய்
இறைவனை மணப்பேன் " எனத்தவம் புரியும் செயல் ஒருபோதும்
பயனைத் தராது.
7. சிவனின் மீது பற்றுகொண்டு அவனை மணக்கும் அவாவில்
பெருந்தவம் புரியும் பெண்ணே! அவனைப்பற்றிக் கூறுகிறேன் கேள்.
அவன் அணிகின்ற பட்டாடை என்ன தெரியுமா! தோலாடை.அதுவும்
யானையின் தோல்.அவன் விரும்பி நடனமாடும் இடமோ சுடுகாடு.
இதன் பின்னரும் அவனை நீ விரும்புவாயோ!
8. இன்னும் கூறுகிறேன் அன்றாடம் அவன் உண்ணும் உணவு
பிச்சை ஓட்டில் பிட்சாடனாய்த் தெரு வலம் வந்தெடுக்கும் பிச்சை.
அவன் உடலில் அணியும் அணிகலன்களைப் பார்த்தபின் அவன்மீது
பற்றுவைப்பாய்.ஊமத்தை மலர்களே அவன் அணிமலர்: உடலெல்லாம்
சுடுகாட்டுப் பொடியாம் மண்ணே பூசிக்கொள்வது: கையிலோ
நெருப்பையும்,குரல் வளமற்ற மானையும் தாங்கி நிற்பான்.கை ,இடுப்பு,
தலை எங்கிலும் விடப்பாம்பே அணிகலனாய் அமைந்திருக்கும், அவனை
இதன் பின்னும் மணக்க விரும்புவாயோ!என ஏளனமாகக் கேட்டார்
முனிவ வடிவத்தில் வந்த சிவபெருமான்.
9. முதியவர் என சிவனடியார் என வாங்கிப் போற்றிய மலைமகள் .
அவரது இழிவான பேச்சைக் கேட்டதும்,சினந்தாள்:வெகுண்டாள் :
இவரைப் பார்க்கவே,எனக்குப் பிடிக்கவில்லை.அவரைப் போகச்சொன்னால்
போக மாட்டார்,நானே இவ்விடம் விட்டு அகல்வேன் "எனக் கோபத்துடன்
கூறியபடி,அங்கிருந்து உள்ளே போக முற்பட்டாள்.
10. தடுத்தாட்கொள்ளும் இறைவன், அவளைத் தன் கரங்களால்
தொட்டுத் தடுத்து,நிறுத்தி, உமையே! உன்னைக் காணவும், உனக்குக்
காட்சி கொடுக்கவும் வந்த என்னைக் காணாமல்,சினத்துடன் இப்படிப்
போகலாமா? என்று தடுத்து நிறுத்திய ஈசனைக் கண்டு,மகிழ்ந்து,ஆனந்தக்
கண்ணீர் வடித்து,அவர் பாதங்களில் விழுந்து வணங்கினாள் மலைமகள்
.நாளையே நின்னை மணப்பேன் " என்று இறைவன் கூறியதும்,
நாணத்தால் தலைகுனிந்து நின்றாள் இறைவி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக