திருப்பெருந்திரு.குமரகுருபரசுவாமிகள்
சிரவை ஆதீனம்
கோவை
அறமும் அன்பும் இணைந்த சான்றீர்!
திறனறி தீந்தமிழ் நிறைமிகு முனிவரே!
எந்தன் பொருட்டு ஏற்றீர் துயரே.
வந்தீர்,வழியெலாம் வளவுடல் வருத்தி,
தந்தீர் நல்லருள்.சந்தத் தமிழில்
வாழ்த்தி அருளிய வளமுடைச் செயலினை,
வாழ்த்தி வழங்கிய வளமுடைப் பரிசினை,
எண்ணி எண்ணி இறும்பூ தடைகிறேன்,
பொன்னார் திருவடி போற்றி மகிழ்கிறேன்.
நன்றி.என்றே நானும் குடும்பமும்.
நாளும் சொல்கிறோம். நன்றி.நன்றி,
18.9.2017 தங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக