திங்கள், 18 செப்டம்பர், 2017


                                              பாராட்டுச்சான்றிதழ்.

                       சிவஸ்ரீ .பால.சர்வேஸ்வர  சிவாச்சாரியார்  அவர்கள்
                                      ஸ்ரீமத் ஸ்ரீகண்ட வேத சிவாகம வித்யா பீடம்,
                                             காரைக்கால்
   

மேதகு சான்றீர்,   வணக்கம்,எனது 75 ஆம் அகவை நிறைவு விழா தொடர்பாக,
17.9.2017  ஆம் நாள்  தருமபுரம் ஆதீனம் சமயப்பிரச்சார நிலையம்,தி.நகர்,
சென்னையில் நடைபெற்ற "சைவாகமக் கருத்தரங்கில் கலந்துகொண்டு,
"சர்யா பாதம்" என்னும் தலைப்பில் தக்க சாத்திர மேற்கோள்களுடன்,
சைவசமயக் கொள்கையைத் தாங்கள் அழகுற விளக்கிப் பேசினீர்கள்.
ஆகம விளக்கமும்,அதற்கான சான்றுகளும் அளித்து,விளக்கிய தங்களின்
சொல்லாற்றல்,கண்டு அவையோர் மெய் மறந்து கேட்டு மகிழ்ந்தனர்.
தங்களின் சிவப்பணியையும்,சைவாகம மேம்பாட்டையும் பாராட்டி,
மனமார்ந்த நன்றியோடு,பாராட்டுச் சான்றிதழாக இக்கடிதத்தையும்
தங்களுக்கு  அனுப்புகின்றேன்.

                                               நன்றியும்,வணக்கமும்.

19.9.2017                                                                                                           தங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக