குருஸ்ரீமத்.மஹா சன்னிதானம் அவர்கள்
கல்யாணபுரி ஆதீனம்
கூனம்பட்டி
மணியாம் வாசக மணிவாசக சுவாமிகள்
மணியொளிச் சேவடி மகிழ்ந்து பணிந்து,
மணியே! முத்தே! மங்கள விளக்கே!
பணிந்தேன் உம்மை, பலவாறு போற்றி,
அணிதிகழ் பாதம் அடியேன் குறித்து,
மணிக்கணக்காய் மகிழ்ந்து பயணித்து, வந்து,
தனிநிலைத் தலைமை அவையினில் ஏற்று,
நல்லாசி புரிந்த நன்மைச் செயலை,
தொல்லை களைந்த தூய்மை நிகழ்வை
என்றும் மறவேன்:என்றும் இனிமை:
நன்றி நன்றி. நாளும் வாழ்த்தும்
பொன்னார் திருவடி, போற்றினோம் வாழ்க.
18.9.2017 தங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக