வரவேற்பிதழ்
சென்னை தருமபுர ஆதீனம் சமயப்பிரச்சார நிலையம்,தியாகராய நகரில்
17.92017 அன்று நடைபெற்ற சைவசமயக் கருத்தரங்கில் முன்னிலை
வகித்த கோவை.சிரவை .ஆதீன குருமஹாசந்நிதானம் முனைவர்.
சீர்வளர் திருப்பெருந்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்களுக்கு அளித்த
வரவேற்பிதழ்
கொங்கு நாட்டுத் தங்க முனிவ!
எங்கும் புகழுடை இனிய குணத்தோய்!
சங்கத் தமிழின் தென்றல் புலவ!
தங்கும் கருணை தளிர்முகம் காட்ட
வழங்கும் கொடைகள் வளக்கரம் வழங்க,
முழங்கும் முருகா முதுசொல் பலகால்
வழங்கும் வழக்கம் தழைக்கும் தலைவ!
எளிமை இனிமை தனிமை தளிர்மை
குளிர்மை குணத்தில் இரக்கம் கொண்டோய்!
ஆலயம் அமைத்து, அரும்பெரும் பூஜை,
நாளைய தலைமுறை நன்கே வாழ்ந்திட,
ஆலயக் கல்வி நிலையம் அமைத்தோய்!
சீலம் சிரிப்பு: காலக் கணிப்பு :
நாளும் நல்கல்:நலமெலாம் கொண்டவ!
வணங்கியே வாழ்த்தி வரவேற்று மகிழ்ந்தேன்.
வருக! சான்றீர்! வணக்கம். வருகவே.
17.9.2017
சென்னை இங்ஙனம்
சென்னை தருமபுர ஆதீனம் சமயப்பிரச்சார நிலையம்,தியாகராய நகரில்
17.92017 அன்று நடைபெற்ற சைவசமயக் கருத்தரங்கில் முன்னிலை
வகித்த கோவை.சிரவை .ஆதீன குருமஹாசந்நிதானம் முனைவர்.
சீர்வளர் திருப்பெருந்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்களுக்கு அளித்த
வரவேற்பிதழ்
கொங்கு நாட்டுத் தங்க முனிவ!
எங்கும் புகழுடை இனிய குணத்தோய்!
சங்கத் தமிழின் தென்றல் புலவ!
தங்கும் கருணை தளிர்முகம் காட்ட
வழங்கும் கொடைகள் வளக்கரம் வழங்க,
முழங்கும் முருகா முதுசொல் பலகால்
வழங்கும் வழக்கம் தழைக்கும் தலைவ!
எளிமை இனிமை தனிமை தளிர்மை
குளிர்மை குணத்தில் இரக்கம் கொண்டோய்!
ஆலயம் அமைத்து, அரும்பெரும் பூஜை,
நாளைய தலைமுறை நன்கே வாழ்ந்திட,
ஆலயக் கல்வி நிலையம் அமைத்தோய்!
சீலம் சிரிப்பு: காலக் கணிப்பு :
நாளும் நல்கல்:நலமெலாம் கொண்டவ!
வணங்கியே வாழ்த்தி வரவேற்று மகிழ்ந்தேன்.
வருக! சான்றீர்! வணக்கம். வருகவே.
17.9.2017
சென்னை இங்ஙனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக