நன்றியுரை
எல்லாருக்கும் நமஸ்காரம்.மிக நன்றாக நடைபெற்ற இவ்விழாவின் கடைசிக் கட்டமாக நன்றியுரை என்னும் அமைப்பினை ஆற்ற உங்கள்முன்
நிற்கின்றேன்.
இவ்விழா சீரும் சிறப்புமாய் அமைவதற்குப் பேரருள் புரிந்த பரம்பொருளாம் முருகப் பெருமானுக்கு முதல்வணக்கமும்,நன்றியும்
முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
விழாவின் முதல் நிகழ்ச்சி இறைவணக்கம். அது அமைவதற்கு ஏற்பவே
விழா சிறப்படையும்"என்பார்கள்.அது போலவே நன்கு இறைவணக்கம் பாடிய
எனது தாய்மாமா திரு நடராஜக் குருக்கள் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சைவாகமம் .அது சார்ந்த கருத்தரங்கு என்ற பக்திபூர்வ,ஞானபூர்வ நிகழ்ச்சிக்கு நல்ல தலைமை அமையவேண்டும்,நமது விழாத் தலைவர்
அவர்களோ கல்வியாளர்,சிந்தனையாளர்,ஞான மாமணி சைவாகம
வழி போற்றும் சிவாச்சாரியார்.மாணிக்கவாசகப் பரம்பரை சார்ந்த
கல்யாணபுரி ஆதீனத்தலைவர்.அன்பும்,பண்பும் நிறைந்து வழங்குபவர்.
சிவதீட்சை வழங்க நாடு,நகரங்கள் கிராமங்கள் வெளிநாடுகள்
என அயராது அலைந்து சைவம் வளர்க்கும் சிவநெறி பூஷணம்.
அத்தகைய சான்றோர் தலைவராக அமைந்தது நாம் செய்த புண்ணியம் என்றே சொல்லலாம்.அந்தப்புண்ணிய புருஷருக்கு,ஞானமணிக்கு,நன்றி சொல்லுதல்
இயலாத ஒன்று.ஆயிரம் முறை சொன்னாலும் இன்னும் கொஞ்சம் கூடச்
சொல்லியிருக்கலாமோ?எனத்தோன்றும் நம் மனம் கவர்ந்தவர் அந்த மகான்.
அப்படிப்பட்ட சான்றோர்க்கு,நமஸ்காரம்.வந்தனம்.வணக்கம் என்று
பலமுறை கூறிப் பணிவு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நூலை வெளியிட்டமைக்கும்,சிவாச்சாரியார் மாமாவைக் கௌரவித்தமைக்கும்,நல்லாசியுரை அருளியமைக்கும்,மீண்டும்
பலமுறை என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைதிக்கும்,எளிமைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் சிரவை
ஆதீனத தலைவர்.சைவ சமய மேம்பாட்டுச் சான்றோர்,எங்களது
அழைப்பை ஏற்று வந்து,நல்லுரை வழங்கி,ஆசிகள் அளித்ததோடு,
ஓதுவா மூர்த்திகளையும் கௌரவித்த மைக்காக கோவை குரு மணிக்கு
நாளெல்லாம் நன்றியும் வணக்கமும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
அத்தகைய சான்றோருக்கு,எனது பணிவான நன்றியைக் காணிக்கையாய்ப்
படைக்கிறேன்.
முதிய நிலையிலும்,நண்பர் அழைத்தார் என்ற காரணத்துக்காகவும்,
சைவப்பணி சிறக்கத் தானும் செயலாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு
வந்து,கலந்துகொண்டு,வாழ்த்துரை வழங்கிய திருக்கடவூர் சாந்தி பூஷணம்
சிவஸ்ரீ டி .ஆர் ..விஸ்வநாத சிவாச்சாரியார் அவர்களுக்கு எனது உளமார்ந்த
மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான்கு பாதங்கள்:நான்கு மறைகள்:நான்கு அடியவர்கள்:
அறம் ,பொருள்,இன்பம்,வீடு நான்கும் நாம் அடைய நல்வழி,நல்லாக்கம்,
ஆகியவற்றை நற்சொற்கள் வழியே நமக்குத் புலப்படுத்திய நான்கு
சான்றோர்கள்.சைவ ஆகமக் கடல்கள்:வட,தென் மொழி வல்லுநர்கள்
டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியர்கள்.அவர்களது,வருகைக்காக,
அவர்களது நல்லுரைக்காக என்றும் நாம் கடமைப் பட்டுள்ளோம்.
சிவஸ்ரீ.பாலா சர்வேஸ்வரர்,சோமசுந்தரர்,அருணசுந்தரர்,சுப்பிரமணியர்.
ஞான சம்பந்தர்,சுந்தரர்,அப்பர்,மணிவாசகர் எனப்போற்றவே மனம் விரும்புகிறது.அத்தகைய சான்றோர்கள் நால்வருக்கும் நமஸ்காரத்துடன்
என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முகநூல் வாயிலாக,நண்பர்கள் ஆகி,சைவம் போற்றும் பாங்குடன்
விளங்கும்,சிவஸ்ரீ.கணேச சிவாச்சாரியார் அவர்களுக்கும்,சிவஸ்ரீ.
தில்லை கார்த்திகேய சிவம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
கன்னியாகுடிக் கலம்பக நூலை ஆய்ந்து,அதன் அருமை பெருமைகளைப்
படம்பிடித்துக் காட்டிய திரு.கல்யாணராமன் அவர்களுக்கும் எனது
உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்/
வயதான மிக வயகான காலத்திலும்,மருமான் நடத்தும் விழா எனக்
கருதியும்,பாராட்டுதலை ஏற்று சிறப்பிப்போம் என்ற மனநிலையிலும்
வந்து,எங்களது அன்பை,மரியாதையை ஏற்றுக் கொண்ட தலைஞாயிறு
மாமா அவர்களின் பாதங்களில் நமஸ்கரித்து,என் மனம் நிறைந்த நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
மயிலாப்பூரில் இருந்து வருவதே சற்று சிரமம்,ஆதலின் வர இயலாத
தனது நிலையை உரைத்த திரு சோமசுந்தர தேசிகர் அவர்களைக் கட்டாயம்
வரவேண்டும்,எனக்கேட்டபொழுது முடியாமையுடன் வந்து,கலந்து கொண்ட
திரு தேசிகர் அவர்களைப்போற்றி,என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தக்க தருணத்தில்,நூல்,அழைப்பிதழ் அழகுற அச்சிட்டு அளித்த திரு
அருண்குமார் அவர்களுக்கும் என் நன்றி.
எல்லாவற்றிற்கும் மேலாக,இந்நிகழ்ச்சி நன்கு நடைபெற அருமையான
இடம் அளித்து,ஆசியுரையும் வழங்கிய தருமபுர ஆதீனமஹாசந்நிதானம்
இளைய சன்னிதானம் ஆகிய சைவசமயச் சான்றோர்களின் அருளையும்,
அன்பையும்,ஆசியையும் வேண்டிப் பன்முறை பணிவான நன்றியைப்
படைக்கின்றேன்.
பல்வேறு உதவிகளை வழங்கிய சமயப் பிரச்சார நிலைய நண்பர்களுக்கும்
என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறவினர்கள்,நண்பர்கள்,
சைவப்பற்றுடையோர் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக