தோற்றுவாய் (பிள்ளைத்தமிழ்)
எல்லாம் வல்ல பரம்பொருளின் நல்லருள் கூடிய நேரத்தில்,கற்ற
தமிழ் கடவுளைப் போற்றிட வழி வகுத்தது.ஒய்வு பெற்றபின் ஒடுங்கிக்
கிடைக்காமல்.ஒதுங்கி இருளில் மூழ்காமல்,அருளாக்க ஆண்டவன் புகழ்
பாடும் வாய்ப்பாய்,முருகன் புகழ் போற்றும்,சிவன் சேவடி போற்றும்,
அன்னை கல்யாணி அம்மை போற்றும் புனிதப் பணி பேரருளால்
கிடைத்தது.அதன்வழியே பயணித்த அடியேன்,முருகனைப் போற்றிய
நூல்களைப் படைத்தபின்,கைலாயநாதனைப் போற்றிய கலம்பகம் பாடியபின்
அன்பேஉருவான அன்னை கல்யாணி அம்மையைப் போற்றும் முகத்தான்
"கன்னியாகுடி ,கல்யாணி அம்மை பிள்ளைத்தமிழைப் பாடலுற்றேன்.
சிறுகிராமமான கன்னியாகுடியில் வீற்றிருக்கும்,கல்யாணி அம்மை
உடனுறை கைலாசநாதர் ,சிறு கோயிலின் அமர்ந்தபடிப் பேரருள் புரியும்
வல்லமை வாய்ந்தவர்.அம்மையின் அருள்நோக்கு ஆருயிர்களை
அரவணைக்கும் ஆற்றல் மிக்கது.எனது,தந்தையும்,அண்ணனும் பூஜை
செய்த கோயில் இது.சிறுவயது முதல் கோயில் தவிர,வேறேதும் அறியாத
எளியேன் மனத்தை ஆட்கொண்ட அற்புத மூர்த்தி அவ்விறைவன்.
விளையாட்டாய் இளம் வயதில் நானும்,என்தம்பியும் விளையாடுவது
பூஜை செய்யும் விளையாட்டே.அப்படி என்னோடு,என்மனத்தோடு ஒன்றிய
இறைவன்,இறைவியைப் பாடிப் பரவசம் காணும் அனுபவம் எனக்கு
கிடைத்துள்ளது,என்பதே யான் செய்த புண்ணியம் ஆகும்.
பாட்டுடைத் தலைவனைக் குழந்தையாக்கி,அவன் அல்லது அவள்
விளையாடும் ஆடல் வழியே அவர்தம் பெருமை பேசுவதே பிள்ளைத்
தமிழ்"என்பர்.கடவுள்,அரசன்,வள்ளல்,சான்றோர் மீதெல்லாம் இது
பாடத் தகுந்தது எனினும் பெரும்பாலும் கடவுள் மீது பாடப்படும்
பிள்ளைத்தமிழே நிறைந்தும்,உயர்ந்தும் காணப்படுகிறது.
பிள்ளைத் தமிழ் பாடுவதற்கெனவே தோன்றிய முனிவர் குமர குருபரர்
எனலாம்.அவர் பாடிய மதுரை மீனாட்சி பிள்ளைத்தமிழ்,முத்துக்குமாரசாமி
பிள்ளைத் தமிழ்,போன்றவை சுவையும்,சொற்பெருக்கும் வாய்ந்த நன்னூல்
எனலாம்.
இன்னும் பற்பலர் சான்றோர் படைத்துள்ள பிள்ளைத்தமிழ் நூல்களும்
போற்றத்தகுந்தன.போற்றுதலுக்குரிய சான்றோர் நிழலைக் கூடத்
தீண்டத தகுதியற்ற நான் ஆசை மேலிட,ஆர்வம் கொப்பளிக்க,ஆண்டவன்
பக்தி இழுத்திட,இந்நூலைப் படைத்துள்ளேன்.
பத்துப்பருவங்கள் கொண்ட இந்நூல் ஆண்பாற்பிள்ளைத் தமிழ்,பெண்பாற்பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும்.முதல் ஏழு
பருவங்கள் இரண்டிற்கும் பொதுவானவை,இறுதியான மூன்று பருவங்கள்,
சிற்றில் பருவம்,சிறுபறைப்பருவம், சிறுதேர்ப்பருவம் ஆகிய மூன்றும்
ஆண்பாலுக்குரிய.அம்மனை,ஊசல்,நீராடல்,என்னும் மூன்றும் பெண்பால்
பிள்ளைத்தமிழ் ஆகும்.
கல்யாணி அம்மையின் பெருமைகளையும்,உலகில் உள்ள,பிற
கோயில்களில் குட்டி கொண்டிருக்கும் அம்மை புகழும் ,கல்யாணி
அம்மையின் புகழாகவே பாடப்பட்டுள்ளது.
கன்னியாகுடி முருகன் பாமாலை,கன்னியாகுடிக் கந்தபுராண வெண்பா,
கன்னியாகுடிக் கலம்பகம்,கன்னியாகுடி முருகன் மஞ்ஞை விடுதூது,
போன்ற நூல்களைப் படைக்கப் பல்லாற்றானும் ஆற்றலும்,ஆக்கமும்
அருளிய ஆறுமுகன் இந்நூல் படைக்கவும் பேரருள் புரிந்துள்ளான்.
போற்றி,வணங்குதலைத் தவிர எம்பெருமானுக்கு எளியேனால் யாது
செய்ய இயலும்?அவனடி போற்றி,அம்மையப்பன் திருத்தாள் வணங்கி,எம்
குலதெய்வமாம் இடும்பனையும் வணங்கிப் போற்றுகிறேன்.
அவ்வப்போது,தேவையான சான்றுகளைக் கணிணியில் எடுத்துக்
கொடுத்த இல்லாள்,கணிணி பயன்பாடு பற்றி எடுத்துரைக்கும்,பேரன்
பேத்திகள்,நூல் அச்சிடும்,வெளியீட்டு விழா நடத்தியும்,என்னை
ஊக்குவிக்கும்,எனது இருமகள்கள்,மாப்பிள்ளைகள் ஆகியோரை
மனத்தில் நிறுத்தி,மாமுருகன் அவர்களுக்கு நல்லன வழங்கி,அருள் காட்ட
அல்லும்பகலும் வேண்டுகிறேன்.
அணிந்துரை ஆக்கிக் கொடுத்த ..............................................................................................................................சான்றோருக்கும்
என் நன்றியைக் காணிக்கை ஆக்குகின்றேன்,
அச்சிட்டு,அழகுற அமைத்துக் கொடுத்த திரு,அருண் அவர்கள் எல்லா
நலமும்,வளமும் பெற்று வாழ வாழ்த்தி,அவருக்கும் என் நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆறிரு தடந்தோள் வாழ்க.ஆறுமுகம் வாழ்க."
நன்றியும் வணக்கமும்
சுவாமி.சுப்பிரமணியன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக