நீராடற்பருவம்........9
கண்ணழகுக் கயல்மீன்கள் கலைவெள்ளி அயல்துள்ளக்
காதழகுச் சங்குகள் கரையொதுங்க,
பண்ணழகுப் பைந்தமிழ்ப் பசுமைநீர் பாய்ந்துவரப்
பனியிதழ்ப் பைங்குளிர்ப் பசியநீர்,
மண்ணழகு மன்பயிர் காப்பது,நின் கருணையா,
மலரெலாம் மதிமுக மலர்வாகத்
தண்ணளிக் கண்ணோட்டம், தாகம்தணி நீராகத்
தலைக்கூந்தல் தரங்கமாய்த் தான்மின்ன,
எண்ணமதோ இயல்மடு ஆழமாய் இலங்கிநிற்க,
இணையடி அழகுநடை செலவாக,
வண்ணநதி வடிவினிலே உனைச்சார்ந்து ஓடுகின்ற,
வளமான பழவாற்றில்,
பெண்ணழகே! பொன்னழகே! கன்னல் மொழியழகே!
புதுவெள்ளப் பனிநீரில் ஆடியருள்.
விண்ணழகு,மண்ணழகுக் கன்னிநகர்ப் பெண்ணரசி!
விரிவெள்ள வளநீரில் ஆடியருள்.
பொருள்
நினது கண்போன்ற கயல்மீன்கள்,பளபளக்கும் உடல்மின்னத் துள்ளிப்பாயும்: காதுக்கு இணையான சங்குகள் கரையிலே காட்சிதர,பேசும் பண்ணழகுப் பைந்தமிழ் போல் தடையின்றி ஓடிவரும் நீர்த்தொகுதி:பனியன்ன,கருணைச் செவ்விதழ் போல் குளிர் நீர்,நிறைந்திருக்க,
நின்கருணைபோல்,ஆற்றுநீர் வளர்பயிர்களின் வாட்டம் போக்க,முகமன்ன மலர்கள் மலர்ந்து
விளங்க,கண்ணோட்டக் கருணைபோல் உயிர்களின் நீர்த்தாகம் தீர்த்து வைக்கஅழகழகாய்மிளிரும்
குழல்போன்ற அலைஅலைபறந்துநிற்க,
அறிய இயலா மனம்போன்று,ஆழமும்,அகலமும் வாய்ந்த மடுக்கள் விளங்க,மென்மை,சீர்மை மிக்க நடைபோல,ஆற்றுநீரின் செல்கை அமைய, பல்லாற்றானும் உன்னைப் போலவே விளங்கும்
பழவாற்றில்,
அழகுடைப்பெண்ணே!ஆபரணம்அணிந்த பெண்ணே!கரும்புபோல் இனிதே மொழிகொண்ட
கல்யாணி!பழவாற்றின் புதுநீரில் மகிழ்ந்து நீராடி அருள்வாய்.
விண்ணவரும்,மண்ணவரும் போற்றி வணங்கும் கன்னியாகுடிக் கல்யாணி! பழவாற்றின் புது
நீரில் ஆடி,மகிழ்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக