நீராடற்பருவம்......8
தமிழமுதெனத் தவழலைத் தழுவியளை தளிர்கரத்
திவலலை திசைதெறிக்க,
இமிழெனும் ஒலியுடன் இறகினைச் சுழற்றிடு
இளம்குருகு வான்பறக்க,
கமுகொடு கழைகுழை கரும்புமே குளிர்பட,
கருணையில் நனைந்திட,
தமுதிமுவென நனிநதி நடுகுடைந் துள்புகு
தவழ்மதிமுகம் தரங்காட,
உமைஎனும் தவநவச் சிலை,மலை மகளவள்
உயர்பதி சிவனவன்
அமைதியில் அருளிடும் அருளெனும் அகநீரில்
அனுதினம் நனைந்தாடி,
இமிழருவி பொழிகுளிர் காவிரியில் இறைவியே!
எழில்நீர் ஆடியருள்.
இமையவர் இறைஞ்சுகின்ற இருடியூர் இறைவியே!
எழில்நீர் ஆடுகவே.
பொருள்
அமுதத் தமிழ்போல் அழகுறத் தவழும் அலைமிக்க,ஆற்றுநீரைத் தழுவிய தோழியர் தங்களது
மென்மையான் கைகளால்தண்ணீரை அடித்து,நீந்த,அலைநீரில் எழுந்த நீர்த்துளிகள் நாலா
பக்கமும் தெறிக்க,வாரி இறைத்த நீரத்திவலைகள் மேல்பட்டதால்,அஞ்சிய குருகு போன்ற பறவைகள்ஒலியெழுப்பும் சிறகினை அடித்தபடி மேலெழும்ப,
அந்த நீர்த்திவலைகள்,கரையில் வளர்ந்து நிற்கும்,கமுகு்மூங்கில்,கரும்பு போன்றவற்றின் மேலெல்லாம் தெளித்துக் கருணைகெழுமிய குளிராக்க,ஆற்றின் ஆழமான பகுதியில் வேகமாய்
முழுகி,மீண்டும் வெளிவந்து,தோழிப்பெண்கள் அலைநீரில் விளையாட,
"உமை" என்ற தவமகள், அழகுப்பதுமையான மலைமகளின் கணவராம் சிவபெருமானார்,அமைதி
தழுவ,அருளும் அருளறமனத்தின். பொங்கும் எண்ணமாம் நன்னீரில் நாள்தோறும்நனைந்து,ஆடி,
அருவி பொழியும் குளிர்நீர் பொங்கும் காவிரி ஆற்றில்,கல்யாணி அம்மையே!நீராடி அருள் புரிவாய்.
நாள்தோறும் தேவர்கள் வந்து தொழும்,ஊர்:முனிவர்கள் வாழும் ஊர்: கன்னியாகுடியின் தலைவியே! காவிரி நீரில் நீராடி அருள் புரிவாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக