. ஊசற்பருவம்.......8. (வேறு)
அறக்குறை சிரக்கரம் அலைநடைப் பரமனின்
அவமழி அனமளி கரத்தவளே!
திறன்நிறை மதிகொடு திகழ்கனிப் பரிசுறு
திருமுதல் துதிக்கையன் அன்னையே!
மறக்கள அரக்கரை மகன்குகன் மாய்த்திட,
மணிவேல் மகிழ்ந்தளி தவத்தாயே!
சிறப்புடைத் தமிழிசை வளர்த்திடக் குளக்கரைச்
சிறுவனுக்கு முலைப்பால் அளித்தவளே!
நிறைமதி வருமென இருள்தினம் உரைத்தவன்
நிறையுறக் குழல்நிலா படைத்தவளே!
மறைத்தமிழ் மலரணி மதுரையில் சார்த்தியோன்
மனநிறை முத்தணி அருளியவளே!
கறைவிடம் கழுத்தொடு தடுத்தரன் உறைஉயிரே!
குறையிலாப் பொன்னூசல் ஆடுகவே.
கண்ணழலும், குளிரசடையும் கொண்டநாதன் பெண்ணரசி!
கன்னிநகர்ப் பொன்னூசல் ஆடுகவே.
பொருள்
ஆற்றும் அறச்செயலில் ஏற்பட்ட குறை(பிரமன் தலையைக் கிள்ளி எடுத்தது) காரணமாக,பிரமன்
மண்டையோட்டில் பிச்சை வேண்டி இறைவன் சிவன் அலைந்த காலத்து,அன்னபூரணியாய்,அன்னம்
அளித்து,அவத்தைப் போக்கிய கரம் கொண்டவளே! உலகமே தந்தை சிவனும்,தாய் பார்வதி ஆகும்,
அவர்களைச்சுற்றினால் உலகைச் சுற்றியதற்குச் சம ம் எனச்சுற்றிக் கனிப்பரிசைப் பெற்ற விநாயகனின் அன்னையே!
சூரபன்மன் முதலிய அரக்கரோடு போரிட்டு அழிக்க,மருகனுக்குத் தவ்வேல்அளித்து,வெற்றிபெறச்
செய்த தாயே! தமிழிசைப்பண் வளர,சீர்காழிக் குளக்கரையில்,ஞானக்குழந்தைக்கு,ஞானப்பால்
அளித்தவளே!
அமாவாசையன்று நிலவு உதிக்கும்,எனக் கூறிய அபிராமி பட்டரின் சொல் காக்கத் தனது காதணியை நிலவாகச் செலுத்தியவளே!தன்மீது பிள்ளைத்தமிழ் பாடிய,குமரகுருபரனுக்கு,
அவைமுன் சிறுமியாகத் தோன்றி முத்து மாலை கழுத்தில் அணிவித்தவளே!
விடமுண்ட கணவனது உய்யிர் காக்க,அவர்,கழுத்தைக் கரத்தால் பிடித்து,விடம் உடலில்
பரவாமல் தடுத்தவளே! நிறைசெல்வப் பொன்னூஞ்சல் அமர்ந்து ஆடி மகிழ்க.
கண்ணிலே அழலும்,சடையிலே குளிர் கங்கையும் கொண்ட கைலாசநாதன் துணைவி
கல்யாணி! கன்னியாகுடியில் பொன்னூசலில் ஆடி மகிழ்வாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக