நீராடற்பருவம்.......7
தக்கன் மகளாய்த் தரணியில் தோன்றித்
தத்துவன் மணந்து,
புக்க வேள்வித்தீ தக்கனை அழித்த
புனிதத் தாட்சா!
அக்கணம் இமவான் அருந்தவ மேன்மை
அரனருள் அபயம்
முக்கண் மணக்கும் மகளாய்த் தோன்றிய
முனித்தவ மலைமகளே!
திக்கெலாம் வென்றிடத் திக்விசயம் தொடங்கித்
திகம்பரன் முன்வர,
மங்கையாய்,மூன்றாம் முலைமறை நங்கையாம்
மாமதுரைத் தடாதகையே!
மக்களாய் மதிகஜன்,மழவழகன் பெற்றவளே!
நீராடி மகிழ்ந்தருள்.
தக்கசெயல்,புக்கறிவு,இச்சைகுணக் கல்யாணி!
நன்னீர் ஆடியருள்.
பொருள்
தக்ஷனின் மகளாகத் தோன்றி,இறைவனாம் சிவனை மணந்து,சிவனை மதிக்காத தக்ஷன்
வேள்வி ப்பலியையும் சிவனுக்கு அளிக்காமல் அவமானப் படுத்தியகாலை,அதனைத்தட்டிக்
கேட்டு,நியாயம் கிடைக்காத்தால்,அவ்வேளவித்தீயிலே விழுந்து,உயிர்த்தியாகம் செய்த
பொழுது்வேள்வித்தீயில் இருந்து எழுந்த சிவாம்சமான வீரபத்திர்ர் தக்ஷனை அழித்தார்.
தவறுசெய்த தந்தையையே அழிக்கக் காரணமான தாட்சாயணியே!
்்்்
இமயமலைஎனும் இமவான் பெண்குழந்தை வேண்டி இருந்த தவநிலை அறிந்து,
அபயம் அளித்த அரனவன் ஆணையால்,அவனுக்கே மகளாகி,அருந்தவம் மேற்கொண்டு,
சிவனையே மணாளனாக அணைந்த மலைமகளே!
மதுரைப்பாண்டியன் மகளாகத் தோன்றித் திக்விசயம் செய்யுங்கால்,பலதேய மன்னர்களை வென்றுவந்த தடாதகைப் பிராட்டி,கயிலையிலே போரிடமுன்வந்த சிவனைக்
கண்டு,நாணித்தலை குனிந்து நிற்க,மூன்றாம் மார்பகமும் மறைந்திட ,அக்கயிலைநாதனாம்
சுந்தரேசக் கடவுளை மணந்த மீனாட்சியே!
விநாயகனையும்,வேல்முருகனையும் பெற்றெடுத்த மலைமகளே கல்யாணி!
நன்னீரில் நீராடி மகிழ்க.
பற்று,அறிவு,செயல் எனும் மூன்றிலும் நிலைத்த கல்யாணி! நன்னீரில் நீராடி மகிழ்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக