வெள்ளி, 2 ஜூன், 2017

நீராடற்பருவம்......6

                  நீராடற்பருவம்.......6

அசைநடை   அழகுரு    அருமலர்க்   கலையாகி,
                     அறவாழிக்   கால்பதித்து,
இசைநடன   இளம்பெண்கள்   இழுத்துவரு
                     எழில்தேரைக்   கரைநிறுத்தி,

கசப்பிலாக்  கருவெல்லம்   களையரிசி    கலந்திட்டுக்
                    கல்லடுப்பில்    கொதிவைத்து,
பசைக்கனி,  பவித்திர,  மணக்காய்     தாளித்துப்
                    பக்குவமாய்ச்   சோறாக்கி,

திசைஎலாம்,   திரள்புகழ்   சிவனவன்  தாள்நினைந்து,
                        தெளிநீரிற்   றுளையாடி,
கசையவிழக்    கரம்பொத்திக்   கணநேரம்   கவிழ்நாண்முகக்
                        கன்னியர்சூழ்   கன்னியளே!

நசைதவிர்    நலமுனி    நற்குடுவை   நுழைநதியில்
                      நீராடி    மகிழ்ந்தருளே.
திசையாடைப்   பசையான   திருவுருவப்   பாசமே!
                     தெளிநீரில்   ஆடிமகிழ்,

                 பொருள்
  அசைந்தாடி  நடந்து,உடலெல்லாம் அழகு பொதிந்த கலையாபரணங்கள் சூட்டிக்கொண்டு,
இசைபாடிக் கொண்டே, இளம்பெண்கள் இழுத்துவரும்,அழகிய விளையாட்டுத் தேரை,ஆற்றங்
கரையிலே நிறுத்தி,ஆடல்,பாடல் உடன் மகிழ்ந்தாடியபின்,,
இனிக்கும் வெல்ல நீரில்,களைந்த அரிசியைப் போட்டுக் கலந்து,போட்ட பானையை அடுப்பில்
ஏற்றி,வெந்ததும்,திராட்சை,ஏலக்காய் போட்டுக் கூட்டாஞ்சோறு ஆக்கியபின்,
     உலகெலாம் புகழுற்ற சிவபெருமானின் புகழைப் பாடியபடி,நீரில் இறங்கி,மூழ்கி,நீந்தி,
விளையாடும் பொழுது,நூரின் வேகத்தால் மார்பகக்  கச்சை அவிழ்ந்துவிட,நாணம் மேலிடக்
கைகளால் பொத்தித் தலைகவிழும் நலப்பெண்கள் குழாமுடன்,கூடி நடுநிற்கும் கன்னியாகுடிக்
கல்யாணி!
      பற்றற்ற அகத்திய முனிவனின் கமண்டலத்தில் அடங்கிய காவ்விரி நீரில் மகிழ்வோடு நீராடுக்
   திகம்பரனான சிவனின் உடலோடு ஒட்டிய ஒருபாகமாய்த் திகழும் புகழுடைக் கல்யாணி!
தெளிந்த ஆற்று நீரில் நீராடி மகிழ்க.

                       ்.   ்்விளக்கம்
கசை..........கச்சை என்பதன் இடைக்குறை
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக