ஊசற்பருவம்......4
உவந்தாட உலகேழும், உதைத்தாட உறுயமனை,
உணர்ந்தாட, உலகாட,
சிவந்தாடச் சிலிர்கொன்றை,சிலம்பாடச் செழுங்கழல்,
சிற்றம்பலம் சுழன்றாட,
நவமணிகள் நலுங்காட, சிவத்தவம் சினந்தாட,
நலத்துணைகள் அரண்டோட,
அவனிபல அஞ்சியாட, அத்தன்கால் வானம்தொட,
அருநாணம் தலைகவிழ,
சிவனோடு பவமாகிச் சம்ஹாரச் செம்மையிலே,
சிவநடனம் இணைந்தாடும்,
தவமகளே! தத்துவமே!தளிர்மலரே!தவழ்கழல்
தனியூசல் தனைத்தொட்டு,
அவமெல்லாம் அகற்றுகின்ற, அருளூரில், அகம்மகிழ்ந்து
ஆடுகவே பொன்னூசல்.
வெண்மைக் கைலாசன் பெண்மைப் பெருவிருந்தே!
பொன்னூசல் ஆடுகவே.
பொருள்
மார்க்கண்டேயனுக்காக,தன்மீதும் பாசக்கயிற்றை வீசிய,கூற்றுவனைக் காலால் உதைத்துத்
தள்ளி,ஆடிய ஆட்டம் கண்டு,ஏழு உலகங்களும் மகிழ்ந்தாட,இறைவன் பெருமை உணர்ந்த உலகமக்கள் ஆட,விரைவாட்டத்தால் சிவந்த கொன்றை மலராட,காற்சிலம்பாட,சிற்றம்பலக்
கடவுள் சுழன்று சுழன்றாட,
உயர்ந்தவள் தானே,எனக்கர்வம் கொண்ட உமையால்,சினமுற்ற தவச்சிவன் நில்லாதாட,
அவனை வெல்லும் நோக்கில் இறைவியும் ஆட,மேலணி நவமணிகள்நலுங்குபோல் குதித்தாட,
உடன்நின்ற தோழியர் அஞ்சி,ஓட,இருவர் ஆட்டம்கண்டு அஞ்சிய உலகமும் ஆட,இறுதியில்
ஊர்த்துவ தாண்டவமாய்,ஒருகால் நிலத்தில் பதிய,மறுகால் வானத்தைத் தொடுமாறு,ஆட,
அதுபோல் ஆட,பெண்மை நாணம் இடம் கொடுக்காத தால்,நாணித் தலை கவிழ,
சிவனோடு ஒன்றாகிச் சம்ஹார தருணத்தில் ஆடுகின்ற ஆனந்த நடனத்தில்,இறையோடு
ஒன்றி,ஆடும் தவமகளே!அர்த்தநாரி" எனும் த த்துவமே!இளந்தளிர்மென்மலரே!தவழ்கழலால்
பொன்னூசல் தொட்டு,,ஏறி. அமர்ந்து,
பாவ்வினைகள் போக்கும் புனிதக் கன்னியாகுடியின் தலைவியே!மனம் மகிழ்ந்து,பொன்
ஊஞ்சல் ஆடிடுவாய்.
வெண்பனிக் கயிலை மலை நாதனது, விருந்தாய்த் திகழும் கல்யாணி!மகிழ்வோடு பொன்
ஊஞ்சல் ஆடி அருள்வாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக