ஊசற்பருவம்......3
நடையில் அன்னம் நாணி நகர்ந்திட,
நவில்மொழி நலத்தினில்
கடையடைக் கிள்ளை கலைமொழி மறந்திடக்
கருணைக் கண்ணோட்டம்
படையுடைப் புதுமேகம் நிகரின்றிப் பறந்தேகப்
பசுங்குளிர் கண்ணழகு
மடைக்கயல், மலர்க்குவளை மதிமயங்கி மறைந்திட,
மறுவிலாப் புருவமோ
மடமதன் கரும்புவில் மடிந்திசிய மிளிர்ந்தது:
மதிதனை முகம்வெல்ல,
இடையது இந்திர தனுசினை இடறிவிட,
எழிலார் இளவரசி!
சடையொளிர் சலத்தவன் விடையவன் மடமகளே!
பொன்னூசல் ஆடியருளே.
வெண்மைக் கயிலையன் பெண்மைப் பெருவிருந்தே!
பொன்னூசல் ஆடியருளே.
பொருள்
உனது நடை கண்டு நாணிய அன்னப்பறவை,அவ்விடம் விட்டு அகன்றது:உனது செவ்வாய். மொழி
கேட்டுகிள்ளை பேசுவதையே விட்டொழிந்தது:கருணை நிறைந்த உன்கண்ணோட்டத்திற்கு,
நிகராக மாட்டோம் என மனம் வெதும்பிய கருமேக்க் கூட்டம் காணாமல் போய்விட்டது;
பசுமையும்,குளிர்மையும் வாய்ந்த உனது கண்ணழகைக் கண்டு,கயல்மீன்களும்,குவளை மலர்களும்
மதி மயங்கி மறைந்தொளிந்தன. உனது அழகிய புருவம் கண்டு நாணிய மன்மதன் கரும்புவில் முறிந்து விழுந்தது; உனது முகமோ அழகில் நிலவை வென்றது; உனது மெல்லிய இடையோ வானவில்லை மறையச்செய்தது;அழகின் சான்றாய் விளங்கும் இளவரசியே!
கங்கையைச் சடையிலே அணிந்தவன்,காளை வாகனன்,ஆகிய சிவபெருமானின் மனைவியே!
அழகிய பொன்னூஞ்சலில் அமர்ந்து ஆடுவாயாக.
வெண்பனி சூடிய கயிலை நாதனின் மனத்தகக் கல்யாணி அம்மையே! அழகிய பொன்னூஞ்சலில் அமர்ந்து ஆடி மகிழ்வாய்.
்விளக்கம்
இந்திர தனுசு= வானவில்.
சலத்தவன்.....ஜலம் என்பதன் தத்பவ வடசொல்.இங்கு,கங்கையைக்குறிக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக