. புராணம்
புராணம் என்ற சொல்லிற்குப் பழமை வாய்ந்தது,என்பது பொருள்.நெடுங்காலமாகச் செவி
வாயிலாகக் கற்பிக்கப்பட்டு வந்த புராணங்கள் வேதவியாசர் என்பவரால் பாடல்களாக,
செய்யுள்களாக நூல்களாக ஆக்கப்பட்டன.தொகுக்கப்பட்டன.வேதவியாசர் தொகுத்தவை
பதினெண் புராணங்களாகவும்,மஹா புராணங்களாகவும் உயர்நிலை பெற்றன.இவைகளுக்குப்
பின் உப புராணங்கள் பதினெட்டும் தோன்றின.
வேதக் கருத்துக்கள்,தத்துவங்கள் கதைகளாகப் பாடல் வடிவு பெற்று,சுலோகங்களாக
உருவாக்கப்பட்டன.
பேரண்டங்களின் தோற்றம்,பிரளயம்,மும்மூர்த்திகளின் தோற்றம்,அவதாரங்கள்,தேவர்,
அரக்கர் போர்,மந்திரங்கள்,வேள்விமுறை, போன்றவற்றை விளக்கமும்,சான்றுக்கதைகளும்
காட்டி விளக்கின.
புராணம்
புராணம்,என்ற சொல் "புரா--நவ" என்னும் வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது எனலாம்.
"பழமைக்குப்பழமை,புதுமைக்குப் புதுமை" என்னும் பொருள் அடிப்படையில் அமைந்ததே
புராணம் என்பர். புராதனம்"என்ற சொல்லே புராணம் என வந்தது" என்பாரும் உளர்.
ஆங்கிலத்தில் "myth" என்ற சொல் இதற்கு இணையானது.ஆங்கிலச் சொல் "mythos"
என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தே தோன்றியது,என்பர்.
தமிழ் மொழியில்,புராணம் என்ற சொல்,முதன்முதலில் "மணிமேகலையில்"தான் பயன்படுத்தப்
பட்டது,எனலாம்."சமயக்கணக்கர் திறம்கேட்ட காதையில்,வைணவ மதவாதியைக் குறிப்பிடும்
பொழுது,"காதல்கொண்டு கடல்வணண் புராணம் ஓதினான்"என வருகிறது.மணிமேகலை காலத்தே புராணம்,வழக்கிற்கு வந்துவிட்டது,எனலாம்
"புராணி" "புராணவித்" என்ற சொற்கள்,ரிக்வேதத்திலும்,அதர்வண வேத த்திலும் காணப்
படுகின்றன.இச்சொல்"பழமையானவன்" "பழமையைப்பரப்புகிறவன்" என்ற பொருளில் வருகிறது.
புராணம்,என்ற பொருளில் வரவில்லை.
திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாடிய முதல் பகுதி"சிவபுராணம்"இங்கும் கூடப் பழமை மிகுந்த சிவபெருமானின் பெருமைகள்" என்ற பொருளிலேயே இச்சொல் பயன்படுகிறது.
புராணங்களைக் கூறியவர்களும்,கேட்டவர்களும்
செவிவழி இலக்கியமாய்த் தோன்றிய புராணங்கள் வேதவியாசரால் பாடல் வடிவாக்கப் பட்டன.
செவி வழியே உரைத்தவரும் கேட்டவரும்,
1.சிவபுராணம்..........பிரும்மாவால் நாரதருக்குக் கூறப்பட்டது.
2.கூர்மபுராணம்........புலஸ்தியரால் நாரதருக்குக் கூறப்பட்டது.
3.கருடபுராணம்........கருட்டனால் காசியபருக்கு
4.மார்க்கண்டேய புராணம். மார்க்கண்டேயர். ஜை மினிக்கு
5.அக்னி புராணம்..........அகனி.....வசிஷ்டருக்கு
6.வராக புராணம்.........வராகர் அருளியது
7.கந்தபுராணம்...........கந்தனே அருளியது
8.வாயு புராணம்...........வாயு அருளியது
9. விஷ்ணு புராணம்......மத்ஸ்யாவதாரத்தில் விஷ்ணுவே அருளியது.
வேதவியாசர் மகன் சுகரிடம் கற்ற இதிஹாஸ புராணங்களை,"வைசம்பாயனர்"என்பவர்,
அத்தினாபுர மன்னன்"பரீட்சித்து" க்குக் கூறியகாலை,சூதமுனிவரும் அதைக்கேட்டார்.அவர்
கோமதி ஆற்றங்கரையில்"நைமிசாரண்யம்" என்ற இடத்தில்"சௌகனர்" போன்ற முனிவர்களுக்குக் கூறியதாக,மகாபாரதம் கூறுகிறது.
காலம்
புராணங்கள் தோன்றிய காலத்தை வரையறுத்துக் கூற இயலாது.நான்மறைகளும்,
புராணங்களும் மிகமிகப் பழமையும்,தொன்மையும் வாய்ந்தவை.அக்காலத்தில் ஆசிரியர்
வாழ்ந்த காலம்,நூல் இயற்றிய ஆண்டு போன்றவற்றைக் குறிக்கும் பழக்கம் இல்லை.
அதனால் பழமை நூல்களின் காலத்தைக் குறிப்பிட இயலவில்லை.
புராணங்களைத் தொகுத்து இயற்றிய,வேதவியாசர் காலம் கி.மு 6அல்லது 7 ஆம் நூற்றாண்டு
என்பர்.புராணம் தோன்றிய காலமும் அதுவே எனக் கொள்ளலாம்.
குப்தர்கள் காலத்தில் செழித்து வளர்ந்த வடமொழி இலக்கிய அமைப்புகளைக்கருத்தில்
கொண்டால் குப்தர் காலமாகிய கி.பி.300 க்கு முற்பட்ட காலமே புராணகாலம் எனக்
கொள்ளலாம்.
புராணங்கள் போற்றும் மும்மூர்த்திகள்
பதினெண் புராணங்களில்சிவமஹாபுராணம்,லிங்கபுராணம்,கந்தபுராணம்,ஆக்கினேயபுராணம்
சிவபெருமானையும்,சிவ வரலாற்றையும்,பிரம்மபுராணம்,பாரம்மாண்டபுராணம்,
பிரம்மவைவர்த்தபுராணம்,மார்க்கண்டேயபுராணம்,பவிசியபுராணம்,பிரம்மனையும்,பிரம்ம வரலாற்றையும்,விஷ்ணுபுராணம்,பாகவதபுராணம்,நாரதபுராணம்,கருட்பத்ம,வராக்வாமன,கூர்ம,
மச்ச,புராணங்கள் திருமாலையும்,திருமால்் வரலாற்றையும். விளக்குகின்றன.
மு க்குணங்கள்
விஷ்ணுபரமான புராணங்கள் சாத்துவ குணத்தையும்,பிம்்ம புராணங் கள் இராஜஸ குணத்தையும்,சிவபுராணங்கள் தாமச குணத்தையும் கொண்டு விளங்குகின்றன.
உப புராணங்கள்
சூரிய,கணேச,காளிகா,கல்கி,சனத்குமார,நரசிம்ம,துர்வாச,வசிஷ்ட,பார்கவ,கபில,பராசர,
சாம்ப,ந ந்தி ,
பி ருகத்தர்ம ,.பரான , பசுபதி,மானவ,முத்கலா என்னும் பதினெட்டும் உப புராணங்கள்
ஆகும்,
வியாசரின் சீடர் "ரோமஹர்ஷனர்"என்பார் வாயுபுராணத்தையும் சேர்த்து,மஹாபுராணங்கள் பத்தொன்பது என்பார்.
புராணத்தைக் கூறுபவர். சூதர்,சூதபௌராணிகர்,சூதமுனிவர் என அழைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக