அம்மானைப்பருவம்.........6
வரமருள் வாமை: முறைமூவர் மூத்தோள்:
வலியழி உருத்ரி:
கரத்தலை களம்வெல் காளி:கலங்காக்
கலவி கரணி:
பரமன் போன்றநல் பலவி கரணி:
பலமுதல் தலைவி:
இரப்போர் இயலா துரைப்போர் குறைகளை
எழிலனை முதியவள்:
மரம்செடி மலைபுயல் மதி,சுடர் மனையக
மாண்புநல் மனோன்மணி:
கரமலர் கவின்வளர் கழங்கினைக் கணித்தபின்
கலைநிலை ஆடுகவே.
சிரம்பணி சிவப்பணிச் சிறப்புடைச் செல்வியே!
அம்மானை ஆடுகவே.
அரனவன் அரையுரு அகம்இணை அற்புதமே!
அம்மானை ஆடுகவே.
பொருள்
அடியவர்களுக்கு வரங்கள் அருளும் வாமையே! மூவர்க்கும்
மூத்த ஜ்யேஷ்டையே! அரக்கர் வலிமை அழித்து,வெற்றி கொள்ளும்
உருத்திரையே ! போர்க்களத்திலே அரக்கர்களை வென்று,வெட்டி வீழ்த்திய அவர்தம் தலையைக் கையில் பிடித்தபடி, காட்சி தரும் காளியே!
அச்சம் என்பதை அறியாத கலவிகரணியே !
பரமனுக்கு இணையான பலவிகரணியே!வெற்றியை முதலாகக்
கொண்ட பலப்ரதமணியே!வணங்கிப் போற்றுவோர் உரைக்கும் துயர்
களையும் சர்வ பூதமணியே!
வானம்,நிலவு,சுடர்,நரம்,செடி போன்ற உலகத்து அசையும் அசையாப்
பொருள்களையும் காக்கும் மனோன்மணியே! கரத்திலே தொட்ட ,
கழங்கினைக் கணித்து, நன்கு ஆடுகவே.
தலைவணங்கிப் பணிந்து சிவபூஜை செய்யும் செல்வியே! அம்மானை
ஆடுகவே.
சிவனின் பாதியுடல் பெற்ற அற்புதத் தலைவியே!கல்யாணி!
அம்மானை அழகாய் ஆடுவாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக