அம்மானை...9
பண்ணுடைப் பைந்தமிழ்ப் பாடலுக்குப் பைம்பால்,
பட்டருக்குப் பைந்தோடு,
மண்ணினுள் ஒளிசிவம் முலைவளைப் பைஞ்சுவடு,
முருகனுக்கோ முதிர்வேல்.
எண்ணச் செருக்குற்ற இரக்கமிலா அரக்கனுக்கோ
இலைவேல் தலைக்காவு,
எண்ணில்லாத் திண்நெஞ்ச மண்விண் பண்பற்றோர்
கண்ணழலால் மண்ணாதல்,
வண்ணத் திருவுடைப் பொன்னெழு மடந்தையர்
வரமருளும் வடிவாதல்
அண்ணல் அருஞ்சாபம் அன்னக் கரத்தால்
அறநீக்கி அறம்காத்தல்,
தண்ணொளி தருமத்தின் தத்துவத் தலைவியே!
அம்மானை ஆடுகவே.
மண்ணினுள் புண்ணியக் கன்னிவாழ் கற்பகமே!
அம்மானை ஆடுகவே.
பொருள்
தேவாரத் திருப்பண் தழைக்க,சம்பந்தருக்குத் திருமுலைப்பால் அளித்தும்,அபிராமி பட்டருக்காக,
அமாவாசையன்று முழுநிலவைத் தனது காதுத் தோட்டினால் உருவாக்கியும்,பம்பையாற்று
வெள்ளத்தில் பூசனை புரியும் மண்ணால் உருவாக்கிய சிவலிங்கம் சிக்கி அழிந்து விடுமோ"என்ற
அச்சத்தில் அணைத்துக் காத்த காலத்தில் எம்பெருமானுக்கு,வளைக்குறியும்,முளைக்குறியும்,
அளித்த அன்புத் பரிசும்,சூரனை வென்றிட முருகனுக்கு அளித்த தவவேலும், அளித்தவளே!
செருக்குற்ற மகிஷாசுரனை அழித்த சூலமும்,எண்ணற்ற தீய அரக்கர் கூட்டத்தைச்
சுட்டெரிக்கும் கண் பார்வையால் அழித்தும் உலகைக் காத்தவளே!
ஏழு கன்னியர் அழகு வடிவம் தாங்கி அன்பு காட்டி,வரமருளும் அன்னையே!பிரமனின் தலையைக்
கிள்ளிய பாவம் போக்கிட,அன்னபூரணியாய்த் தோன்றி,இறைவன் கரத்தில் ஏந்திய மண்டையோட்டுப் பிச்சைப் பாத்திரத்தில்,அன்னம் அளித்த அறச்செல்வியே!
அன்பு கெழுமிய அறச்செயல்களின் தத்துவமாய் விளங்கும் தலைவியே!உன் பொற்கரங்களால்
அம்மானை ஆடுக.
மூவேழ் உலகிலும் புண்ணிய நிலமாய் விளங்கும் கன்னியாகுடியின் கற்பகமாம் கல்யாணி
அம்மையே!அம்மானை ஆடுக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக