நீராடற்பருவம்
பாட்டுடைத் தலைவியைக் குழந்தையாய் உருவகித்துத் தலைவியின் அருமை பெருமைகளைப்
பாராட்டும் பிள்ளைத்தமிழின் ஒன்பதாம் பருவம் நீராடற்பருவம் ஆகும்.
பத்தொன்பதாம் திங்களில் இப்பருவம் அமையப்பெறும்.நீர்நிலைகளில் ஆடுதல்( குளித்தல்,குழந்தையைக் குளிக்க
வைத்தல்)
நீராடற்பருவம்......1
மலர்மண நிறைமது மகிழணி அலையாக,
மனமுரை மறைமொழி நுரையாக,
நலவழி விளைபொருள் நிலைமுறை நதியாக,
நடந்திடும் நவநிதிக் காவிரியே!
அலகிலாக் கலைவளம் அருகுறை துணையாக,
அழகெலாம் திரண்டெழு உருவாக,
உலகெலாம் உணர்ந்தவன் உடலுறை உயிராக,
உதித்திடு மதிமுகக் கற்பகமே!
சலமதில் அலைமகள் கலைமகள் சூழ்ந்திருக்க,
சயந்தனின் அனையவள் சார்ந்திருக்க,
வலமிடம் வனிதையர் வளக்குரல் இசையொலிக்க,
வடிவுடைக் கல்யாணி, நடுநின்று,
மலைமகளே! மணிநகர்க் கன்னியின் மாதரசி!
மகிழ்வுடனே நன்னீரில் ஆடுகவே.
கலைகாண் கறைக்கண்டன் கருணையாம் கனிமொழி!
காவிரி நன்னீரில் ஆடுகவே.
பொருள்
மணம் மிகுந்த மலர்களைச் சூடி,மலர்மதுவால் இனிமை கலந்து,நல்லோர் நீராடுங்கால்
உரைக்கும் மறைமொழிகள் இணைந்த நுரை தாங்கி,நிலத்து விளையும் விளை பொருள்கள்
வளர,வாழ வகை செய்யும் ந்தியாகி,நாடெல்லாம் நவநிதி அளித்தபடி நடந்தோடி வரும்
காவிரி போன்ற அன்னையே!
அளவில்லாத கலைவளங்கள்,கல்வி,ஆற்றல் அனைத்துமாய் ஆனவளே! அழகெல்லாம்
திரண்டு ஒருங்கு சேர்ந்த அழகு ஓவியமே! உலகெலாம் உணர்ந்த எம்பெருமானின் ஒருபாகம்
பெற்றவளே! வான்தோன்று முழுமதிபோன்ற முக வசீகரம் கொண்டவளே!
நீர்நிலையில் இருபுறமும் இலக்குமியும்,சரஸ்வதியும் நின்று போற்ற, சயந்தன் அன்னையான இந்திராணி அருகு நின்று பொற்ற,விண்ணகத் தேவமகளிர்,பண்ணிசைப் பாடல் இசைக்க,
அழகுடைக் கல்யாணி அம்மையே! நடுவில். நாயகியாய் நின்று,
மலைமகளே! கன்னியாகுடி வாழ் மங்கையர் குல மாணிக்கமே! மன மகிழ்வுடன் நீராடுவாய்.
கலையரசன்,நீலகண்டன் கருணையாம் கனிமொழியே! காவிரி நன்னீரில் நலமே ஆடுவாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக