அம்புலிப்பருவம்.....6
குருசாபம் கொண்டாய்:குறைமதியால் தாழ்ந்தாய்:
குலப்பெருமை இழந்தாய்:
குருவாய் அருளிய குணக்குன்று அறியாயோ?
குருவுளத் திருவிவளே.
செருக்கினால் சொல்லிய சொல்லினால் சிதைந்தாய்.
செவ்வுடல் வவ்வினாய்.
அருக்கம் புல்லாளன் அடிபணிந்து உயர்ந்தாய்:
அருமைந்தன் தாயன்றோ!
விருப்பும் வெறுப்பும் வேதனைக் களங்கள்.
வெவ்வரக்கன் சினத்தால்,
இருப்பிடம் இழந்தாய்: இறைவன் ஏற்றான்,
இறைவன் மறையிவளே.
திருவுடைக் கருவூர்ப் பெருமகள் தன்னோடு,
அம்புலி! ஆடவாவே.
கன்னியூர்ப் பெண்ணரசி கல்யாணி தன்னோடு,
அம்புலி! ஆடவாவே.
பொருள்
குருபகவானின் சாபத்தை உனது தவறான சிந்தையால் பெற்று,குலப்பெருமை இழந்து அழகிழந்து
தவித்தாய்.உன் அறியாமை போக்கிக் குருவாய் அமர்ந்து உன் துன்பங்கள் நீக்கிய குணக்குன்றை,நீ
அறியாதவனா?குருவின் கருணைமனம் கல்யாணி அம்மை அல்லவா!
செருக்கோடு. நீ உரைத்த தவறான சொல்லால் உடல் சிதைந்ந்து,அழகற்றவன் ஆனாய்சதுர்த்தி
விரதம் இருந்து,அருகம்புல் சார்த்தி ஆனைமுகன் அருள் பெற்றாய்.ஆனைமுகனின் தாயல்லவா
கல்யாணி அம்மை.
உரோகினி மீது விருப்பும்,ஏனைய இருபத்தாறு பெண்களின் மீது வெறுப்பும் கொண்டதால்,
தக்ஷனின் சினத்திற்கு ஆளாகி,அழகும்,நிலையும் இழந்து தவித்த உன்னை உன் துயரை மாற்றிய
இறைவனின் மறையாய் விளங்குபவள் கல்யாணி அம்மை.
ஆதலின்,வளம்மிக்க கன்னியாகுடியின் பேரரசி கல்யாணி அம்மையோடு விளையாட நிலவே!விரைந்துவருவாய்.
கன்னியாகுடிப் பெண்ணரசி கல்யாணி அம்மையோடு நிலவே! விளையாட விரைந்த வருவாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக