அம்மானைப்பருவம்.....4
செவ்விதழ்ச் செங்காந்தள் சிவமது சிறப்பாக,
செவ்வாய்ச் சீர்சொல் சினந்தவிர்
திவ்வியத் தவமேலோன் பவ்வியம் போற்றிசைக்கத்
தென்தமிழ்ப் பண்கள் துணையாக,
அவ்விய ஆழ்மன அரக்கர் அழிவேற்ற
அருங்கரம் அல்லல் அகற்றிட,
செவ்வியச் சீர்மனச் சிந்தையர் வாழ்வோங்கச்
செம்மையாய்ச் சிவமாய் வரமருள,
செவ்வேல்,சம்பந்தச் சிறார்கள் சிந்தனை,
செழிக்கச் செங்கனி அமுதளிக்கக்
கவ்விய கருமேகக் கருணையுறு கற்பகமே!
கதியருள் கழல்குளிர் காவிரியே!
செவ்வாழைச் செங்கரும்புச் செழிமருத நறுந்தேனே!
சீராடல் அம்மானை ஆடுகவே.
செவ்வான் செந்தழல் செம்பாகச் செம்மையே!
சீராடல் அம்மானை ஆடுகவே.
பொருள்
செங்காந்தள் போன்ற செவ்தழில் சிறப்பான சிவம் என்னும் தேனூற,நற்பண்பாம் நமசிவாய"எனும்,சினம்நீங்கிய சிவப்பெருமையைத் தேவாரத்திருவாசகப் பண்களோடு,
செவ்வாய் உச்சரிக்க,
பொறாமை மிக்கத் தாழ்மன அரக்கர் கூட்டம் என்னும் அல்லலை அருங்கரப் போரில்
அடக்க,நற்குண நல்லோர் வாழ்வு வளம் பெறச் சிவனைப்போல வரங்கள் அருள,
முருகனுக்கும்,ஞானசம்பந்தருக்கும்,அவரவர் செயலாக்கம் வளரத் தண்முலைப் பால்
அளித்துக் காத்த,கருமை மேகம் போன்ற கருணை கொண்ட கற்பகமே!அடியவருக்கு
நற்கதி நல்கும் குளிர் காவிரி போன்ற பாதங்களை உடையவளே!
வாழை,கரும்பு நன்கு விளையும் மருத நிலத்து இனிமைத் தேன்போன்ற கல்யாணி!
உனது பொற்கரங்களால் அம்மானை ஆடிடுவாய்.
செவ்வானம் போலச் சிவந்த தழலன்னான் சிவனின் ஒருபாகமாய் விளங்கும் கல்யாணி!
உனது பொற்கரங்களால் அம்மானை ஆடி அருள்க.
விளக்கம்
சிவமது......சிவம்+அது,எனவும்,சிவ+மது எனவும் பொருள் கொள்க்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக