அம்புலிப்பருவம்......3
இளவேனில், மலர்வாவி, நலத்தென்றல், மகரந்த,
எழில்மலர்த் துணையோடு,
வளக்கலை வடிவோடும், வகைமீன்கள் துணையோடும்,
விண்பவனி சந்திரனே!
இளவேனில் இலங்குகரம்: மலர்வாவி மனத்தகம்:
நலத்தென்றல் அருட்பொழிவு:
மலர்ச்சிரிப்பு: மகரந்தம் மாப்புகழ்: மருவறுகலை:
மாவாட்சி மலைமகள்.
அளப்பரிய அழகொளி அம்மையின் அருட்பொலிவு:
அமைவிடம் உமைபதியருள்:
கலைவழி நல்லமுது, கல்யாணி மொழியாகும்.
கால்பணிந்து கரையேறு.
உளமெல்லாம், உவகையுடன் ஊர்போற்றும், உமையோடு
அம்புலி! ஆடவாவே!
கன்னியூர்ப் பெண்ணரசி கல்யாணி தம்மோடு,
அம்புலி! ஆடவாவே.
பொருள்
இளவேனில் பருவம்,மலர்கள் நிறைந்த பொய்கை,தென்றல்,மகரந்த மணம் வீசும் மலர்கள்,
இவைகளின் துணையோடும், வளர்கலை அழகும்,விண்மீன்கள் சுற்றி நின்று போற்றும் அழகும்,
கொண்டு வானவீதியில் பவனிவரும் நிலவே!
இளவேனில் மகிழ்ச்சி அம்மை அளிக்கும் கொடைக் கரத்தில் உள்ளது: மலர்ப்பொய்கையின்
குளிர்ச்சியும்,மணமும்,அம்மையின் மனத்தகத்தில் பொதிந்துள்ளது.தென்றல் இன்பம் அம்மையின்
அருள்வழங்கலில் தங்கியுள்ளது. மலரை முகச்சிரிப்பில் காணலாம்.அம்மையின் உலகளாவிய புகழ்
மகரந்தப் பரவலைத்தரும்:குறையாத கலைகளின் தலைவி கல்யாணி அம்மை.
உனது அழகு மிளிரும் நிறைகலையை அம்மையின் அருட்பொழிவில் காணலாம்.இறைவனின்
தலையில் அமர்ந்திருக்கும் உயர்வு. அதுவும் அம்மையின் கணவர் அளித்த வாழ்வே. உன்னிடம்
உள்ள அமுத கிரணங்கள் பொழியும் அமுதம், அது அம்மையின் வாய்மொழியில் அடங்கும்.
ஆதலின்,இவைகளை உணர்ந்து அம்மையின் பாதங்களைப் பணிந்து போற்றுவாய்.
உள்ளமெல்லாம் அம்மையே"என்ற மகிழ்வோடு போற்றுவோர் ஊரான கன்னியாகுடியில்
வீற்றிருக்கும கல்யாணி அம்மையோடு விளையாட வருவாய் அம்புலியே.
கன்னியாகுடியின் பெண்ணரசி கல்யாணி அம்மையுடன்,நிலவே!விளையாட விரைந்து வருவாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக