அம்புலிப்பருவம்.....2
முகமதி ஜகம்புகழ் அகமகிழ் தகவுடையோய்!
முகமதில் முதுகுறை,
மகளினால் மறைகலை அளித்தநல் அரக்கனின்
மகாசாப வெளிப்பாடோ?
முகமதி ஜகம்புகழ் அகமருள் தகவுடையாள்,
முகமதில் முதுமறை.
மகளிவள் மலைமனன் மனம்தொழும் மகேசனின்
மகாதேவி மகிழ்துணையே.
பகல்மறை நகைகுறை பகைசிறை பலகுறை
பனையிடர் படுநிலவே!
பகலிரா நகைநிறை பகைசிறை பலரிறை
பனைப்புகழ் பார்வதியே.
தகவினைத். தயவினைத் தருபவள் தம்முடன்
அம்புலி! ஆடவாவே.
கன்னியூர்ப் பெண்ணரசி கல்யாணி தன்னோடு
அம்புலி! ஆடவாவே.
பொருள்
அழகு முகத்திற்கு உவமையாக நிலவையே உலகோர் கூறும் உலகப் புகழினால் உள்ளம் மகிழும்
குணம் கொண்ட நிலவே! உன் முகத்தில் என்ன வாட்டம்? ஒருத்திக்காக. இருபத்தேழு மகள்களையும மணந்து,ஒருத்தியோடு மட்டுமே காதல் வாழ்க்கை நடத்துவதைப் பிற பெண்கள்
வாயிலாக அறிந்த தக்ஷனாம் அரக்கன் கொடுத்த சாபத்தால் கலைகளை இழந்தாயே!அந்த
வருத்தமா?
மதிபோன்ற அழகு முகத்தைக் கண்டு வணங்கி உலகமே புகழ்பவள்:அருள் பொங்கும் நெஞ்சம்
கொண்டவள்:நான்கு மறைகளும் தோன்றிய திருவாய்:இமவான் என்னும் மலையரசனின் மகள்:
உலகோர் போற்றும் சிவபெருமானின் துணைவி:
நிலவே! நீ பகலில் ஒளியிழந்தவன்: உனது அழகுக்கலை தேய்ந்தும்,வளர்ந்தும் மாறும் குணம்
உடையது: உனது பகைவர்களான இராகுவும்,கேதுவும் உன்னை விழுங்கிச் சிறை வைப்பர்:
பல குறைகளும்,பெருந்துயர்களும் கொண்டவன் நீ.
இரவு,பகல் எல்லாப் பொழுதும் நுறைவான புகழுடையவள்: எதிர்க்கும் பகைவர்களாம்
அரக்கர்களை அழித்தும்,சிறையிட்டும்,வெற்றி பெறுபவள்: மூவேழ் உலகத்தோரும் போற்றும்
பெருந்தலைவி: பனைபோல் உயர்ந்த புகழுடையவள் கல்யாணி அம்மை ஆவாள்.
அருளும்,இரக்கமும்,அன்பும் கொண்டடவளான கல்யாணி அம்மையோடு,நிலவே! விளையாட
வருவாய்.( வந்தால் உனது துயரெல்லாம் மறைந்துவிடும்,என்பது உட்பொருள்)
கன்னியாகுடியின் பேர ரசியான கல்யாணி அம்மையோடு நிலவே! விளையாட வருவாய்.
விளக்கம்
முகமதி.............உருவகம்
ஜகம்,மகா,.........தத்பவ வடசொற்கள்
மன ன்................ மன்னன் என்பதன இடைக்குறை
பனைப்புகழ்.........உவமைத்தொகை.
இவ்விரண்டு பாடல்களும்,"சாம்பேத்தான்தண்டம்" என்ற வகையில் "சாமம் என்ற வகையைச்
சார்ந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக