. அம்புலிப்பருவம்.....10
அல்லியின் குளிர்க்கரம், ஆதவப் படர்சுடர்,
அழகின் அடைக்கலம்,
தொல்லிருள் வல்லவர் துவண்டிடும் நல்லொளி,
தென்றலின் தமிழ்மகள்,
இல்லதின் ஏந்திழை இங்குவா என்றபின்,
இயலாமை ஏற்பாயோ?
நல்லதாம் நன்றியின் நலப்பண் புடையோய்!
நகராமை முறையாமோ?
இல்லதும், உள்ளதும், நல்லவள் நல்லுளம்
இறைவன் இரக்கமன்றோ!
அல்லெனின் அருங்கலை அனைத்துமே, அனையன்றோ!
அருகுசெல்! உருகுமனம்.
கல்வியும், செல்வமுமாம், கல்யாணி தம்மோடு,
அம்புலி! ஆடவாவே.
கன்னியூர்ப் பெஎண்ணரசி கல்யாணி தம்மோடு,
அம்புலி! ஆடவாவே.
பொருள்
நிலவே! உன்மனம் கவர்ந்த அல்லிமலர் போல் குளிர்ந்த கொடைக் கரமும்,உனக்கு ஒளி நல்கும,
ஆதவனுக்கே ஒளி வழங்கு சுடர் ஒளியும், உன்போன்ற அழகுப் பொருட்களுக்கெல்லாம் நிலைக்களனாயும், இருளையும்,அரக்கரையும் அழித்து,ஒளி வீசும் நல்லொளியாயும்,தென்றலும்,
செந்தமிழும் கலந்து உருவான மகளாயும் விளங்கபவள் கல்யாணி அம்மை.
அன்னை கல்யாணியாம் மழலை அருகு வா! ஆடிடலாம் என்றழைத்தால் வணக்கமுடன்
,மனமகிழ்வுடன்,அருகே விரைந்தோடிச் செல்ல வேண்டாமா?நன்மை பல பெற்ற உனது,நன்றிக்
கடன் மறந்தாய்.மறுபடியும் துன்பத்தில் உழல்வாயோ!
இழந்ததை அளித்தும்,இருப்பதைக் காப்பாற்றியும்,உன்னை வாழவைத்தது அன்னையின்
அருள் உள்ளம் போற்றும் ஆண்டவன் அளித்த வரமல்லவா!அதைமறந்தாலும் உனது அனைத்துக்
கலைவளர்வும்,வாழ்வும் அன்னையின் அருள் என்பதை மறந்தாயோ?அருகு செல்.விரைந்து சென்று
விரிபொழில் சூழ்ந்து விளையாட்டமர்.
கல்வியாய்ச் செல்வமாய்த்திகழும் கல்யாணி அம்மையோடு நிலவே! விளையாட விரைந்து வருவாய்.
கன்னியாகுடிப் பெண்ணரசி கல்யாணி அம்மையோடு நிலவே! விளையாட விரைந்து வருவாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக