வருகைப்பருவம்.......10
மண்ணுள் மணியே! மலருள் மணமே!
மணியுள் ஒளியே! வருகவே!
கண்ணுள் காட்சியே! கவிதைக் கருவே!
கருணைப் பொழிவே! வருகவே!
பண்ணுள் பாடலே! பண்பின் உருவே!
பரிவின் நிறைவே! வருகவே!
விண்ணுள் விரிவே! விதையுள் தருவே!
வினையின் முதலே! வருகவே!
தொன்னூல் விளக்கே! தூநெறிச் சான்றே!
தொல்லோன் துணையே! வருகவே!
பன்னரு மறையே! பன்னிரு முறையே!
புன்னகைப் பொழிவே! வருகவே!
கன்னல் கனிமொழிக் கார்பொழிக் கரத்தாள்
கன்னிவாழ் கல்யாணி வருகவே!
புன்னை கொன்றை பூத்துக் குலுங்கும்
புதுக்குடிப் பெருமகள் வருகவே.
பொருள்
நிலத்துள் பொதிந்து கிடக்கும் இரத்தின மணியே!மலரும் மலரினுள் நிறைந்து விளங்கும் நறுமணமே! நவரத்தின மணிகள் ஒளிரும் ஒளியே!வருக.
கண் காணும் காட்சிகள் அனைத்திலும் காட்சி அளிப்பவளே! கவிதையின் கருவாய் விளங்குபவளே!
கருணை பொழியும் உள்ளம் கொண்டவளே!வருக.வருக.
பண்ணமைந்த பாடலே!பண்பின் நிலைக்களனே!இரக்கம் நிறைந்த உள்ளமே!வருக.
விரிந்த வானவெளியே!விதைக்குள் மறைந்து மரமாகும் நுண்ணுயிரே!அனைத்துச் செயலையும்
தோற்றுவிக்கும் முதலே!வருக.வருக.
பழமையான நூல்களின் விளக்க உரையே!தூய்மை சார்ந்த நெறியே!ஆதிசிவனின் அன்புத்
துணையே!வருக.வருக.
பழமை,அருமை வாய்ந்த நான்மறைத் தலைவியே!பன்னிரண்டு திருமுறைகளின் தத்துவமே!
புன்னகை பூக்கும் பொழிலார்ந்த எழிலே! வருக.வருக.
கரும்பும்,கனியும் கலந்த மொழியுடையாளே!மேகம் போல் வரையாது வழங்கும் கைகளைக்
கொண்டவளே!கன்னியாகுடியில் வீற்றிருக்கும் கல்யாணி அம்மையே!வருக.வருக.
புன்னையும் கொன்றையும் பூத்துக் குலுங்கும் கன்னியாகுடியின் பேரரசி அம்மையே!
வருக.வருக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக