முத்தப்பருவம்...9
அன்னம் என்ன மின்னும் நடைவண்ணம்
அன்னச் சிறகென ஆடை வண்ணம்
பொன்னன் மனத்துப் பதியும் வண்ணம்
இன்னும் நிற்கும் இளமைக் குமரியே!
கன்னம் சந்தனக் கிண்ணம் என்னும்
முன்னம் மும்முலை மறைந்தது என்னும்
பொன்னன் புனைந்த பொன்னி என்னும்
மன்னும் மணவறை மதுரைக் கரசியே!
கன்னல் தண்ணளிக் கண்ணும் பொன்னாம்
மின்னல் மேக மென்கரம் பொன்னாம்
பன்னூல் உன்னும் புண்ணியம் பொன்னாம்
கன்னி காக்கும் கல்யாணி அம்மையே!
மண்ணுள் மணியூர் மகிழ்ந்தமர் மலைமகளே!
கன்னிக் கல்யாணி! கனிமுத்தம் தருகவே.
பொன்னவள் ஏடவள் போற்றும் பைந்தமிழே!
கன்னிக் கல்யாணி கனிமுத்தம் தருகவே!
பொருள்
அன்னப்பறவை போன்ற நடையும்,அதன் வெண்ணிறச் சிறகு போன்ற ஆடையும் கொண்டு,
இறைவனை மணக்கும் கோலத்துடன்,இன்று வரை நின்று கொண்டிருக்கும் இளமை மாறாத
குமரித்தலைவியே!
அழகே உருவான அரசி,இறைவனை நேரில் கண்டதும் மூன்றாம்முலை மறைந்த வியப்புச்செல்வி,
சுந்தரேசனை மணந்த மீனாட்சி,மணநாள் கோலத்திலேயே காட்சி தரும் மதுரை அரசியே!
கரும்புபோல் இனிக்கும் கொடைக் கணகள்,மின்னிடும் கருமேகம்போல் வழங்கும் மென்கரம்,பற்பல நூல்களும்போற்றும் புண்ணியச் செல்வி,கன்னியாகுடி காக்கும் கல்யாணி அம்மையே!
நிலவுலகின் மணியாகத் திகழும் கன்னியாகுடியில் வீற்றிருக்கும் மலைமகளே! கல்யாணி அம்மையே! கனிவாயால் முத்தம் தருவாய்.
இலக்குமியும்,சரஸ்வதியும் போற்றி வணங்கும் பைந்தமிழ்ச்செல்வியே! கல்யாணி! கனிவாயால்
முத்தம் தந்தருள்வாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக