சப்பாணிப்பருவம்....8
அழலெதிர் அருமையே!அரவெதிர் அமுதமே!
அழகுறை நிலவதும் அடிமையே!
அழுதிடும் அடியவர் அருள்தனில் முதன்மையே!
அழகினில் அரனவன் நிகர்மையே!
உழல்மன உறுதுணை:உறவினில் நிறைசமம்;
உழைஅமர் உலகியல் உமையவள்:
உழுதிடும் விதிவயல் உயர்ந்தவர் உணர்ந்தவள்:
உழக்கொடு படிகொடு அளப்பவளே!
தழற்கணின் தளிர்மையே!தகனத்துக் குளிர்மையே!
தலையதில் உணவளி கரத்தளே!
கழற்பதக் கருணையே!கலைவளர் குடும்பமே!
கவிபுகழ் சிவனவன் தவமலரே!
மழவிடை தனிலமர் மகேசனூர் மணிவிளக்கே!
சப்பாணி கொட்டி அருள்வாய்.
மழகளிற்றாள் மலர்வீணையாள் போற்றிடும் மலைமகளே!
சப்பாணி கொட்டி அருள்வாய்.ருகினில்
பொருள்
சிவனின் அழற்கரம்,அருகே நிற்கும் உன்னால் நீர்மை ஆகிறது:பாம்பணி நஞ்சு கூட,உனது அமுதச் சொற்களால் மாறிவிடுகிறது:அழகான நிலவும் உன்னழகுக்கு அடிமையே:துன்புறும் அடியவர்களின் துயரைக் களைந்து,நன்மை அருள்வதில் நீயே முதன்மை பெறுகிறாய்:அழகனாம் ஆண்டவனின்
நிகராக விளங்குபவளே!
சினத்தைத் தவிர்த்து,அமைதிவழி காட்டும் ஈசனின் துணையே!உறவோ சிவசக்தி எனும் சம
மேம்பாடு உடையது:அருகினில் அமர்ந்து உலக ஒற்றுமைத் தம்பதியர் என்பதின் சான்றாம் உமையே!
விதியின் பிடியில் உழலும் உலகின் உயர்ந்தவர் ஈசன் என்பதை உணர்ந்தவளே!கையில் உழக்கு,நாழி,படி என்னும் அளவைப்படி,அனைவருக்கும்,ஆண்டவருக்கும் அளப்பவளே!
நெருப்புச்சுடர்க்கண் தழலைப் பார்வையால் குளிர்விப்பவளே!பிரமனின் தலையைக் கொய்த
பாவம் நீங்க,அத்தலையோட்டிலேயே இறைவனுக்கு அன்னம் அளிக்கும் அன்ன பூரணியே!
கழலணிந்த பாதங்களின் கருணைக்குச் சான்றானவளே!கலையை வளர்க்கும் விநாயகன்.முருகன்,
சிவன்,பார்வதி என்ற கலைக்குடும்பமே!புலவர்கள் போற்றும் சிவபெருமானை அடையத் தவமிருந்த
மலரே!
காளை மீதமர்ந்த கைலாச நாதனின் அருள்பெற்ற கன்னியாகுடியின் பேரரசி!இருகரம் கொட்டி,
ஒலி எழுப்பி,சப்பாணி கொட்டி அருள்வாய்.
கஜலக்குமியும்,கலைமகளும் போற்றி வணங்கும் கல்யாணி அம்மையே!இருகரம் கொட்டி,ஒலி
எழுப்பி,சப்பாணி கொட்டி அருள்வாய்.
விளக்கம்
தகனத்து = சுடுகாட்டின்
தலையதில் = பிரம்மன் தலையாகிய திருவோடு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக