முத்தப்பருவம்...7
நறைபழுத்த குறும்பலவின் நறுஞ்சுளையே!நலுங்காடும்
நளினபாதத் தளிரழகே!
நரைதிரை நுரைவெண்மை நன்நிலவுப் பொன்னொளியே!
நனைமலர் நிலைமணமே!
இறையுணர்வின் எழிலுருவே!கறைக்கழுத்தின் காப்புணர்வே!
இலைப்பச்சை இலஞ்சியமே!
இறைவனெதிர் நடனமாடி இறைஞ்சுகின்ற இளமனமே!
இசைவடிவாம் இலக்கியமே!
பொறைபோற்றும் புதுத்தவமே!புனைகவியின் புதுத்தமிழே!
பொன்னழகு மின்னிடையே!
பொறைநீக்கிக் குறைகண்ட மறையவனை மணந்தவளே!
பொங்கருவிச் செங்கரமே!
நிறைமனத்து நீதியோர் நற்குடியில் நிற்பவளே!
நல்முத்தம் தந்தருள்க.
நிறைசெல்வி மறைசெல்வி இறைஞ்சுகின்ற கல்யாணி!
நல்முத்தம் தந்தருள்க.
பொருள்
நன்கு பழுத்து,வளர்ச்சி அடைந்த பலாப்பழத்தின் தேன்போல் இனிக்கும் சுளையே!நலுங்கு இட்ட
மென்மைக் கால்களின் தளிர்மையான அழகே!நரை வெண்மை,திரை வெண்மை,நுரை வெண்மை
இம்மூன்றும் கலந்த முழுநிலவுப் பொன்னொளியே!பனியில் நனைந்த மலரின் நிலைத்த மணமே!
பக்தி உணர்வின் உருவான எழிலே!நஞ்சருந்திய தலைவன் உயிர்காக்கக் கழுத்திலேயே
நஞ்சை நிறுத்திக் காத்த தாயுணர்வே!பச்சை நிறத்தின் எடுத்துக்காட்டு மேனியழகே! இறைவனுக்கு நிகராக நடனமாடி,அவன்"ஊர்த்வ தாண்டவநடனம்"(ஒருகால் நிலத்திலும்,மற்றொருகால்வானிலுமாக) ஆடியதும் தோற்றதை ஏற்றுக் கொண்டு அவனை வணங்கியமணத்தவளே! ஏழிசை ஞானியே!
பொறுமையின் சின்னமாய் இளம்வயதில் தவம் புரிந்த புதுமையே!கற்பனை மிக்க கவிஞர்களின்
தமிழ்ப் புதுமையே!பொன்னிறமேனியில் மின்னலான மெல்லிடையே!தவம் புரிகின்ற காலை தன்முன்
தோன்றிய அந்தணன் சிவனைக் குறைவாகப் பேசி,மனத்தே சிளம் கொள்ளச் செய்தபின், அவனே
இறைவன் என அறிந்து,வெட்கமுற்று,அந்த அந்தணனையே மணந்தவளே!அருவி போல வற்றாது
வழங்கும் கொடைக் கரம் கொண்டவளே!
நிறைந்த நல்மனம் கொண்ட நேர்மையானவர்கள் வாழும் கன்னியாகுடியில் எழுந்தருளும்
கல்யாணி அம்மையே! முத்தம் தந்தருள்க.
இலக்குமியும்,சரஸ்வதியும் போற்றி வழிபடும் கல்யாணி அம்மையே!முத்தம் தந்தருள்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக