சப்பாணிப்பருவம்......5
நிலையில்லா நீளுலகில் நிலையுறு நிலமகளே!
நித்திலமே!இரத்தினமே!எனக்கொஞ்சி,
நிலவுமுகம் விற்புருவம்,நலமருள் செவ்விதழ்
நியதிமிகு நற்சொல்லைப் போற்றி,
கலைக்கண்கள் கருணைக்குக் கட்டியமாய் மைதடவி,
கனிவாயில் உணவூட்டப் பின்னோடி,
கலைமான்கள் காணுநிலா கவின்சோலை வரவழைத்து,
கதைகூறிக் கலகல சிரிப்பார்ந்து,
அலையொலி அருந்தண்டை ஒலிக்கால்கள்மென்தடவி,
அருவிரல் முத்திட்டு முகமகிழ்ந்து,
அலைந்துவரும் தென்றலுடன் அசைதொட்டிலில் உறங்கவைத்து,
அகமகிழும் அன்னைவளர் அன்னையே!
தலைக்கங்கை தத்துவனின் தகைமைசால் தளிர்மனையே!
தண்ணுமையே!சப்பாணி கொட்டியருள்!
தலைவணங்கி அலைமகள் கலைமகள் போற்றிடும்
தலைமகளே! சப்பாணி கொட்டியருளே.
பொருள்
நிலையில்லாத இவ்வுலகத்தில் நிலைத்த தன்மை வாய்ந்த மகளே!முத்தே!மணியே!என்றெல்லாம்
கொஞ்சியும்,நிலவு போன்ற முகமும்,வில் போன்ற புருவமும்,பிறர்க்கு நலமருளும் செம்மையான
இதழும்,அங்கு தோன்றும் நன்மைச் சொற்களும் போற்றி,
கலைமான்கள் போன்ற கண்களில் தோன்றும் கருணைக்குக் கட்டியம் கூறுவது போன்று,கண் மை
தீட்டி,கனிவாய் திறக்கக் கெஞ்சி,உணவு ஊட்டப் பின்னும்,முன்னும் ஒடி.வானத்தே மான் நிழல் கொண்ட வெண்ணிலவை "நிலா.நிலா",ஓடிவா என அழைத்து,சோலையிலே நிலவும் காட்டிக் கதையும் கூறி,உண்ணாமல் சிரிக்கும் க ல க ல வெனச் சிரிக்கும் சிரிப்பைக் கேட்டு உள்ளம்,மகிழ்ந்தும்,
ஓடிடும் கால்களில் ஒலிக்கும் சதங்கை ஒலி கேட்டு,மெய் மறந்து கால்களை மெல்ல வருடிக் கொடுத்தும்,கால் விரல்களில் முத்தம் இட்டும்,தென்றல் வீசும் மன்றத்தில் கட்டிய தொட்டிலில்
பாடலுடன் உறங்கவைத்தும்,மனமெல்லாம் மகிழ்வடைந்த அன்னையின் வளர்ப்பில் வளரும்
அன்னை கல்யாணியாம் மழலையே!
தலையிலே கங்கையைத் தாங்கிய கைலாச நாதனின் துணையே!உமையே!இருகரம் கொட்டி
ஒலி எழுப்பி,சப்பாணி கொட்டுக .
இலக்குமியும்,சரஸ்வதியும் போற்றி வணங்கும் தலைமகளாம் கல்யாணி அம்மையே!இருகரம்
கொட்டி ஒலி எழுப்பி,சப்பாணி கொட்டுக.
விளக்கம்
நீளுலகு ....வினைத்தொகை
கனிவாய் .....உவமைத் தொகை
தண்ணுமை .....பண்புத தொகை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக