வருகைப்பருவம்....2
மகிழ்முகமே வருக! மலர்விழியே! வருக!
மழையருளே! வருக.
முகில்குழையே! வருக,முகைமூக்கே!வருக.
முழுமறைநா வருக,
சுகிக்கரமே!வருக.சுருதிக்குரல் வருக.
சிவமனமே! வருக.
துகிலுடையே! வருக.தவழ்மணியே!வருக.
துவளிடையே! வருக.
அகிலமே! வருக.அடித்தவமே! வருக.
அன்பூற்றே வருக.
தகிவீரம் வருக.தளிர்ப்பதம் வருக.
தண்டமிழே! வருக.
மகிஷனை அழித்தே மண்விண் காத்திட்ட
மலைமகளே! வருக.
நெகிழ்மன நீளருள் நித்திலக் கல்யாணி!
வருக. வருகவே.
அடியவர்க்கு மகிழ்ச்சி அளிக்கம் முகம் கோண்டவளே! குவளை மலர்போல் குளிர் கருண்ணை விழி கொண்டவளே! மழைபோல் அருள் உள்ளம் கொண்டவளே!மேகம்போல் கருங்கூந்தல்
கொண்டவளே!முல்லை அரும்பு போன்ற மூக்குடையவளே!நான்மறை நா உடையவளே!வருக!
கிளியை ஏந்திய கரமுடையவளே! வேத ஒலிபோன்ற குரல் உடையவளே! சிவமயமான மனம்
உடையவளே! மென்மையான ஆடை அணிந்தவளே! நல்லாபரணங்கள் அணிந்தவளே! துவளும்
இல்லிடை உடையவளே! வருக. வருகவே.
அகிலாண்டகோடி நற்றலைவியே!ஒருகாலில் நின்றே தவம் புரியும் அம்மையே! அடியவர்மீது
பேரன்பு கொண்டவளே! அரக்கர்களை அழிக்கும் பொழுது,வீரச்சினம் கொண்டவளே! இளந்தளிர்ச்
சீறடி கொண்டவளே! குளிர்ச்சி மிகுந்த தமிழ் போன்றவளே! வருக.
மகி ஷாசுரனை அழித்து,மண்ணையும்,விண்ணையும் காத்த மலைமகளே! வருக.
இளகிய மனம்கொண்ட நன்மனக் கல்யாணி அம்மையே! வருக.வருகவே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக