முத்தப்பருவம்...2
அலவன் உலவும் அலைகடல் கலைமுத்தே!
அலைமன அமைதியே!
அலர்மலர் முல்லையின் நறுமண அருமுத்தே!
அலைகதிர் அழகொளியே!
நிலவின் நிதிபுனை நிகரிலா நித்திலமே!
நிலத்தடி நிதிக்குவியலே!
நிலத்தினில் விளைந்திடும் நிலையுயிர் நெல்முத்தே!
நிலைவாழ் மலைமுத்தே!
குலத்தினில் நலப்புகழ் சிலைப்புகழ் விளைமுத்தே!
குலந்தரும் குணமுத்தே!
குளக்கரை அழுகையும்,சுடர்க்கரை அழுகையும்,
குளிர்ந்தருள் தளிர்முத்தே!
கலம்நிறை பயிர்விளை கனிக்குடிக் கனிமுத்தே!
முத்தம் தந்தருள்க.
களைத்தவர் கடுந்துயர் களைந்திடும் கல்யாணி!
முத்தம் தந்தருள்க.
பொருள்
நண்டுகள் உலவும் பேரலை கொண்ட கடலில் விளையும் நல்முத்தே!
ஆரவாரமாய் அலையும் மனத்தே அமைதியை அளிக்கும் ஞானமுத்தே!
நறுமணம் கமழும் முல்லை அரும்பு முத்து முகையே!கதிரவன் ஒளிவீச்சின்
அழகுக் கிரணமே!
நிலவு சிந்தும் குளிர்சேமிப்பாகி நிகரற்று விளங்கும் ஒளி முத்தே!பூமி
எல்லாம் பொதிந்து விளங்கும் குவியல் செல்வ வளமுத்தே!மண்ணில்
பயிராகும் உயிர்களின் நிறை வாழ்வின் அடித்தளமான நெல்மணிமுத்தே!
நிலைத்த தன்மை கொண்ட மலைகளில் விளையும் வெண்முத்தே!
தோன்றிய குலத்தின் பண்பாட்டுப் புகழும்,வீரப்புகழும் கொண்டு விளங்கும்
குலமுத்தே!அடியவருக்கு நற்குலமேன்மை அருளும் கொடைக்குணமுத்தே!
குளக்கரையில் அழுத ஞானசம்பந்தருக்கும்,நெருப்பிடையே தவித்த அபிராமி
பட்டருக்கும் மனம் குளிர்ந்து அருள்புரிந்த பசுந்தளிர் முத்தே!
கலம்கலமாய் நெல்விளையும் கன்னியாகுடியின் கனிவளர் முத்தே!
அருள் முத்தம் தந்திடுவாய்.
துயருற்றோர் துன்பம் துடைத்து,இன்பவழி அருளும் கல்யாணி அம்மையே!
கனிவாய் முத்தம் தந்தருள்வாய்.
விளக்கம்
கனிக்குடி- கன்னியாகுடி என்பதன் தொகுத்தல்
அலர்மலர்- வினைத்தொகை
அருமுல்லை- பண்புத்தொகை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக