செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

சப்பாணி ப்பருவம்.....3

                                       சப்பாணிப்பருவம்.....3

தனம்தரும் தழல்நிழலே!தவத்திருச் சிவத்துணையே!
              தளர்விலாப் பணியருள் தத்துவமே!
தனமகள் தலைவணங்  கிடுமுதல்  தலைவியே.1
             தகரவன் தனித்துவத் தயைதாயே!

மனத்தினில் துயரிலை எனும்நிலை அளிப்பவளே!
           மகிஷனின் மமதையை அழித்தவளே!
மனக்குறை மறந்திட மலைமகள் ஆனவளே!
           மணந்தவர் மதியுடல் பகிர்ந்தவளே!

கனந்தரும் கருங்குழல் கலைமிகு நளினமே!
          கதிதரு காலிணை  கமழ்மலரே!
கணம்புகழ் கஜமுகன் புகழ்முகப் புனிதமே!
          குகனவன் தவழ்ந்திடு மடியாளே!

இனமெலாம் தொழுதிடும் எழில்குடி திகழ்பவளே!
             இருகரம் சப்பாணி கொட்டிடுக.
இதந்தரு பதந்தரு இறைவனின் துணைவியே!
             இருகரம் சப்பாணி கொட்டிடுக.
                              பொருள்
அழியாச் செல்வமாம் ஆன்றவீடு அளித்திடும் தழலேந்தியின் குளிர்நிழலே!தவ மேன்மைச் சிவனாரின் துணைத் தவமே!ஒய்வின்றித் அருள்பணி ஆற்றும் தத்துவமே!அலைமகளும்,கலைமகளும் போற்றிடும் முதல் தலைவியே!கந்தனின் தனிவெற்றிக்குத் தவவேல் அளித்த தாயே!
    அடியவர் மனத்தே துயர் படராவண்ணம் காப்பவளேமகிஷாசுரனின்கர்வத்தைஅழித்து,அவனையும்
அழித்தவளே!தாட்சாயணி என்னும் தக்கன் மகளாய் விளங்கும் நிலை,குறையாக வருத்த ,இறைவனிடம் வேண்டி,இமவான் மகளாய் அவதரித்தவளே!மணந்து கொண்ட சிவனின் ஒரு பாகமாய் விளங்குபவளே!
     கலைமிகுந்த நளினத்துடன் விளங்கும் கனத்த கருங்கூந்தல் கொண்டவளே!வணங்குவோர்க்கு,
நற்கதி வழங்கும் நறுமண மலரன்ன இணையடி கொண்டவளே!கணங்களின் தலைவன் கணபதியின்
போற்றலைப் பெற்ற புனிதத் தாயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக