இடும்பன்
பாலொடு பன்னீர் பழவகை மலர்கள்
பாகுக் கரும்பு, பசிய சந்தனம்
பாட்டு நடையிலே பதிந்த தோளிலே
பாங்குறச் சுமக்கும் பக்திக் காவடி:
வேலொடு வெவ்வினை விலக்கும் வேலன்
காலொடு கிடந்து காலம் காலமாய்த்
தோளொடு ஒட்டிய துலாநிறைக் காவடி
நாளொடு சுமக்கும் நல்லற இடும்பா!
வேலன் கழலினை விரும்பிச் சுமந்தாய்!
பாலன் புகழினைப் பாரெலாம் சுமந்தாய்!
பாலனின் அன்னை பைந்தமிழ்க் கல்யாணி
சீலம் போற்றிச் செய்பணியால் காப்பாய்.
மாலை மதியம் மாசில் வீணை
சோலை மலர்கள் சூழ்ந்த கன்னிச்
சாலை சார்ந்த சாத்திரத் தலைவி
மாலை அணியாம் மகிழ்தமிழ் காப்பாய்.
பொருள்
பால்,பன்னீர்,பழம்,மலர்கள் இனிக்கும் கரும்பு,நறுமணச் சந்தனம் ஆகியவற்றை இறைவனுக்குப்
படைப்பதற்காகக் காவடியில் வைத்துச் சுமந்தப்படிப் பாடலும்,ஆடலும் கொண்டு,காலம் காலமாய்
நற்பணி ஆற்றும் இடும்பா!
வேல் என்று சொல்!வினையாவும் விலகும் என்பதை உலகோருக்கு விளக்கிய இடும்பா!கந்தன் காலடியில் கிடந்தும்,காலம் காலமாய் அவனது தேவைகளைக் காவடியில் சுமந்தும்,முருகன் புகழ்
போற்றும் இடும்பா!
வேலன் பணியை விரும்பி ஆற்றுகிறாய்:முருகன் புகழை உலகெல்லாம் பரப்பும் உயர் குணம்
கொண்டவனே!அந்த முருகனின் தாய் பைந்தமிழ்க் கல்யாணி அம்மை.அம்மையின் புகழையும்,
பணியையும் போற்றிச் செய்திடுவாய்.
மாலை நிலவு,மனம் மயக்கும் வீணை இசை,சோலை மலர்கள் ஆகியவற்றால் இயற்கை சூழ்ந்து
விளங்கும் கன்னியாகுடி என்னும் ஊரிலே கோயில் கொண்டுள்ள சகல கலா வல்லி கல்யாணி அம்மை.
அம்மை மீது பாடப்படும் பிள்ளைத் தமிழ் என்னும் தமிழ் நூல் அன்னைக்கு அணியாக விளங்கவும்,
அன்னை புகழ் வளரவும்,தமிழையும்,அன்னையையும் காப்பாய் இடும்பா!
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக